Pages

Thursday, 25 October 2012

பிட்சா : பார்த்தே தீர வேண்டிய த்ரில் படம்


பிட்சா : பார்த்தே தீர வேண்டிய த்ரில் படம் தமிழில் திகில் த்ரில்லர் படங்கள் ரொம்ப குறைவு.விரல் விட்டு எண்ணி விடலாம்.பெரும்பாலும் ஆங்கில படங்களின் தழுவல் படங்களே அதிகம்.அதே கண்கள் ,யாவரும் நலம் போன்ற மிக சில படங்களே சொந்த சரக்காக வந்த படங்கள்.நான் கொஞ்சம் எதிர்பார்த்த அம்புலி கூட முழுதும் எனக்கு திருப்தி தரவில்லை.இந்த நிலையில் பிட்சா படம் ஒரு த்ரில்லர் படம் என்று கேள்வி பட்டேன்.இருந்தாலும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தேன்.ட்ரைலர் கவனிக்கும்படி இருந்தாலும் அதை நம்பி இப்போதெல்லாம் படம் பார்க்க முடிவதில்லை.படம் வந்த அடுத்த நாள் பார்த்த எல்லோரும் படம் சூப்பர் என்று சொல்ல அதுவும் படித்த ப்ளாக் எல்லாம் கதையை சொல்லாமல் விட்டதால் படம் பார்க்கும் ஆவல் கூடி விட்டது.ஒரு வழியாக பார்த்துவிட்டேன்.

சமீப காலங்களில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும்.சும்மா மிரட்டி இருக்கிறார்கள்.நானும் கதை சொல்ல போவதில்லை.என்ன விஷயம் என்றால் மற்ற த்ரில்லர் படம் என்றால் ஒரு விஷயத்தை சொல்லி இறுதியில் என்ன நடக்கிறது என்பதை சொல்லாமல் விட்டால் போதும்.ஆனால் இந்த படம் கதை என்று ஆரம்பித்தால் படத்தின் ஆச்சர்யம் போய்விடும்.

படம் மெதுவாக கொஞ்சம் சோம்பலாகதான் தொடங்குகிறது.ஆனால் ஹீரோ தன் முதலாளி வீட்டிற்கு சென்றதும் அங்கே சூடு பிடிகிறது.அதோடு படம் முடியும் வரை உங்களை அடுத்து என்ன என்று யோசிக்க செய்துகொண்டே இருக்கும்.சில படங்கள் இடைவேளை எப்படா வரும் என்று இருக்கும்.இந்த படத்தில் இடைவேளை விட்டதும் அடச்சே என்று திட்டிகொண்டேன்.இடைவேளை நேரத்தில் கூட படத்தில் இருந்து கவனம் போகவில்லை.

படத்தில் பணி புரிந்த எல்லோருக்கும் இந்த படம் ஒரு லைப்.அசத்தி  இருக்கிறார்கள்.கேமரா ,இசை சூப்பர்.இயக்குனர் கார்த்திக் இதுவரை யாரிடமும் உதவியாளரை இருந்ததில்லை.குறும்படங்களில் கவனம் பெற்று அதை சினிமாவாகவும் செய்து காட்டி இருக்கிறார்.ஒரு வெல்கம் .

பேய்களை நம்பாத ஹீரோ .அவனை பயமுறுத்த நாயகி செய்யும் வேலைகள் தான் படம் இறுதியில் எல்லாம் நாடகம் .WAIT WAIT. .இது ட்ரைலர் பார்த்து நான் நினைத்த கதை. உண்மையில் நாயகி என்று ஒருவள் இல்லை.நாயகன் மன அளவில் பாதிக்க பட்டவன் .அவனின் பேய் கற்பனையே படம்.இது படம் ஓடி கொண்டிருக்கும் போது என் மனதில் வந்த கதை. மேல் சொன்ன எதாவது ஒன்றை நீங்கள் படத்தின் கதையாக நினைத்திருந்தால் அதை மறந்திருங்கள்.

                     படத்தை பற்றிய ஒரு சின்ன TAGLINE: ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னெஸ் .பணம்,பெண் பேய் ,கடவுள் இப்படி.

இது படத்தின் சஸ்பென்சை உடைக்காது என்று நினைக்கிறன்.படத்தை மினி உதயம் அரங்கில் பார்த்தேன்.படம் HOUSEFULL . நான் ப்ளாக்கில் 70 ருபாய் டிக்கெட்டை 130 கொடுத்து வாங்கி பார்த்தேன்.படம் முடிந்து வரும் போது இந்த படத்தை போய்  ப்ளாக்கில் பார்த்தோமே என்று கொஞ்சமும் இல்லை.நம் ரசிகர்கள் தமிழில் த்ரில் படம் பார்த்து பழக்கம் இல்லாததால்,அரங்கில் வெறுப்பேற்றி விட்டார்கள்.கூட கூட கமெண்ட்.படத்தின் ஆரம்ப காட்சி கருப்பு வெள்ளையில் ஒலி குறைவாக நடக்கும்.அதை கேட்கவிடாமல் ரொம்பவும் கடுப்பேற்றி விட்டார்கள்.இருந்தாலும் படத்தை ரசிக்கிறார்கள்.இது போல் இன்னும் நிறைய படங்கள் தமிழில் வர வேண்டும்.எனக்கு த்ரில் படங்கள் பிடிக்கும் என்பது தெரிந்திருக்கும்.

8 comments:

 1. பார்க்கணும் தல ... ஆனா ஒரிஜினல் டிவிடி வந்தப் பிறகு தான் பார்க்க கிடைக்கும் போலயிருக்கு நிலைமை. அதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு. :(

  ReplyDelete
 2. சுருக்கமான நச் விமர்சனம்... நாளை செல்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 3. aiya today i go udayam theatre but they told 70 rs ticket 100rs and i have 70 only so not but and one comedy police jeep enters and get mammoll(commission) from that blocke ticket man and escape oh god then why cd will ruin cinema its a serious issue but you told 70 rs ticket 130rs why sir pls idhuku oru blog write pannuga boss valga block ,valarga police mamool

  ReplyDelete
 4. விஜய் சார்..ஞாபகம் இருக்கா என்னை..
  ரொம்ப நாளாச்சி உங்க எழுத்தை படித்து..
  நேற்றுதான் இந்த படத்தை பற்றி கேள்வியேப்பட்டேன்..பார்க்கலாமுனு நினைச்சேன்.
  கொஞ்சமா சொன்னாலும் சூப்பரா பண்ணிருக்கீங்க.விமர்சனம் அருமை.
  உங்க மற்ற பதிவுகல படிக்கனும்..அப்புறம் கமெண்டு போடுறேன்.நன்றி.

  ReplyDelete
 5. தல,
  செம படம்..இன்னைக்கு தான் பார்த்தேன்..படம் பார்க்கிற வரைக்கும் யார் விமர்சனமும் படிக்க கூடாது என்று இருந்தேன்..இப்ப தான் எல்லோரோட விமர்சனமும் படிக்க ஆரம்பித்து இருக்கேன்.. ரொம்ப நல்லா முக்கிய ட்விஸ்ட் பத்தி சொல்லாம சொல்லி இருக்கீங்க...

  ReplyDelete
  Replies
  1. எஸ் .படம் சூப்பர் தான். ராஜ்

   Delete
 6. நானும் பார்த்தேன், வித்யாசமான முயற்சி,

  ReplyDelete
 7. படம் பார்த்தேன். மிக நல்ல முயற்சி. எனக்கு தோன்றிய சில சந்தேகங்கள்
  1 . பூட்டியிருந்த வீட்டிலிருந்து எப்படி பிசா ஆர்டர் வரும் ?
  2 . அப்போ ஆர்டர் செய்தது யார்?
  3 . 2 கோடி ரூபாய் வைரம் பறிகொடுத்தவர் அந்த அட்ரசை பில்லில் செக் செய்யாதது ஏன் ?
  4 . ஹீரோவினை மறைமுகமாக பாலோ செய்யாதது ஏன்?
  விஜயன்

  ReplyDelete