Pages

Friday, 19 October 2012

மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?


மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?

முந்தைய கே.வி.ஆனந்தின் படங்களான அயன்,கோ இரண்டுமே எனக்கு பிடித்த படங்கள்.ஒரு கதையை லாஜிக் அது இது என்று மற்ற விஷயங்களை பற்றி யோசிக்க விடாமல் பரபர திரை கதையால் அதே நேரம் ஹரி படம் போல் வீண் பரபரப்பு இல்லாமல் இளமை ததும்பும் வசனங்களோடு கொஞ்சம் விரசமான வசனங்களோடும் ,பாடல்களை வித்யாசமான இடங்களில் படமாக்குவதும் என்று ஒரு ஸ்டைல் ஏற்படுத்தி கொண்டவர்  கே.வி.ஆனந்த்.அவரது கவனிக்க படாத படமான கனா கண்டேன் படமே நல்ல படம் தான் .சூர்யா தற்போதைய தமிழ் சினிமாவின் விராத் கோஹ்லி .ஹிட் பாடல்களுடன் ஹாரிஸ் ஜெயராஜ் என ஜோராக களம் இறங்கிய மாற்றான் வெள்ளி கிழமை முதல் பதிவுகளில் கிழித்து தொங்கவிடபட்டு கொண்டு இருக்கிறது.நான் ஏற்கனவே இந்த படம் திரை அரங்கில் பார்க்க முடிவு செய்தபடியால் அதன்படி சென்றேன்.முக்கால் வாசி அரங்கம் காலியாக இருந்தது.படம் வந்து ஐந்தாவது நாள் .

ஆனால் படம் அந்த அளவு மோசம் இல்லை என்றே சொல்வேன்.ஆனால் நிச்சயம் எதோ குறைகிறது .கதை வலுவில்லை .இந்த கதைக்கு ஒட்டி பிறந்த மேட்டர் எல்லாம் தேவை இல்லை.ஆனால் ஆனந்த் இந்த ஒட்டி பிறந்த ரெட்டை விஷயத்தை முதலில் வைத்து கொண்டு பிறகே அதற்க்கு ஏற்றாற்போல் இந்த கதை உருவாக்கி உள்ளார் என்பதை அவர் படம் தொடர்பாக கொடுத்த பேட்டிகளில் மூலம் அறியலாம் .

படத்தின் நீளம் பெரிய குறை.படம் முடிவதற்குள் நிறைய விஷயங்கள் ஒரே அடியாக நிறைய நமக்குள் அழுத்த படுகிறது.ஒரு கதை இயல்பாக நம்முள் தொடருவதற்கும் ஒரு விஷயத்திற்கு கதை பண்ணுவதற்கும் இருக்கும் வித்யாசத்தை இந்த படம் காட்டிவிட்டது.கனா கண்டேன் -2005,அயன்- 2009,கோ-2011.இப்படி ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் நிறைய நேரம் எடுத்து அதை சீர்படுத்தி எடுத்த ஆனந்த் இதில் கோ முடித்த கையேடு அவசரமாக களம் இறங்கி  விட்டாரோ ? 

தன்  பட ஹீரோக்கள் வகிடு எடுத்து தலை வாரி நெற்றியில் மூன்று முடிகளை விட வேண்டும் என்பது வரை கவனமாக பார்க்கும் ஆனந்த்  திரை கதையிலும் இன்னும் உழைத்திருக்கலாம்.

8 comments:

 1. சூர்யாவின் உழைப்பு வீண்...

  நன்றி...
  tm1

  ReplyDelete
 2. உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன். இணையத்தில் கிழித்து காய போடும் அளவுக்கு படம் மோசமில்லை. ஆனந்தின் முந்திய படங்கள் அளவு இல்லை என்பது தான் உண்மை

  ReplyDelete
 3. சுமார் படம்

  ReplyDelete
 4. //மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?

  அதானே என்ன பிரட்ச்சனை ...

  ReplyDelete
 5. விடுங்க பாஸ் துப்பாக்கி வரட்டும் .. எல்லாரும் ஒட்டுமொத்தமா இதை மறந்து அதை துவைத்து காய போடா போய்விடுவார்கள் ..

  ReplyDelete
 6. தியேட்டரில் பார்க்கத் தான் முடிவு பண்ணியிருந்தேன். விமர்சனங்கள் வாசித்தபின் டிவிடியே பெட்டர்னு முடிவு கட்டிட்டேன்.

  ReplyDelete
 7. இன்னும் படம் பார்க்கலங்க..பார்த்தவர்கள் கூட சுமாரான ரகம்தானு சொன்னாங்க.திரைக்குறித்த பார்வை நன்று.

  ReplyDelete