Pages

Tuesday, 23 October 2012

கமலஹாசன் எழுதிய "நாயகன்" திரைப்பட நினைவுகள்


கமலஹாசன்  எழுதிய "நாயகன்" திரைப்பட  நினைவுகள்  


தமிழ் சினிமாவில் நாயகன் தவிர்க்க முடியாத படம்.அந்த படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.அதன் பொருட்டு அந்த பட அனுபவங்களை  நடிகர் கமல்ஹாசன் 'தி ஹிந்து ' ஆங்கில தினசரியில் அக்டோபர் 21 ஞாயிறு ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அதன் தமிழாக்கம்..

நாயகன் படம்  டைம் இதழின் சிறந்த 100 படங்களுள் ஒன்றாக தேர்வு செய்யபட்டதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.ஒரு வித்யாசமான படம் எடுக்க நினைத்தோம் அவ்வளவுதான்.அதிகம் படிக்காததால் நான் எப்போதும் எழுத்தாளர்களும் ,சிந்தனையாளர்களும் சூழ இருப்பேன்.அப்படி சந்தித்த ஒரு நண்பர் தான் சுப்பு என்கிற சுப்ரமணியம்.பின்னர் மணிரத்னம் ஆனார்.எனக்கு நடிகர் கிட்டி மூலம் அறிமுகம் ஆனவர் தான் மணிரத்னம்.கிட்டி அப்போது சோழா செர்டான்  ஹோட்டலில் மேலாளராக இருந்தார்.நாங்கள் அவரை அப்போது சோழா கிருஷ்ணமூர்த்தி என்று அழைப்போம்.மணி அப்போதும் அமைதி ஆனவர் தான்.நாயகன் தொடங்கப்பட்ட பின் தான் மணி "வீனஸ் " pictures  ரத்னம் அவர்களின் மகன் என்பதே.அதுவரை அவர் தன்னை வெளிபடுதிக்கொண்டதே இல்லை.எனக்கு அதுவரை அவரை பைனான்சியர் ஜி.வி.அவர்களின் சகோதரர் என்றே தெரியும்.

அப்போது நான் ராஜபார்வை எழுதிக்கொண்டிருந்த நேரம்.1980.மணி திரை கதை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார்.JOSEPH HAYES  எழுதிய THE LONG DARK NIGHT நாவலை  விரும்பி படித்தார்.அது போல் ஒரு கதை எழுத விரும்பினார்.நாங்கள் பல கதைகளை விவாதித்தோம்.நாங்கள் FRANSIS FORD COPPOLA வின்  THE GODFATHER பட ரசிகர்கள்.எத்தனை நாள்  தான் தமிழ் பட மறை உலக வில்லன்கள்  கட்டம் போட்ட சட்டையும் கழுத்தில் கை குட்டையை கட்டிக்கொண்டும் வீரப்பா  போல் சிறிது கொண்டும் இருப்பார்கள் என்று நாங்கள் கேட்டு கொள்வோம்.

அப்போது மணி தனது முதல் படத்தை (பல்லவி அனுபல்லவி)கன்னடத்தில் இயக்குவதாக சொன்னார்.நான் ராஜபார்வையில் பிசியாக இருந்தேன்.அந்த நேரம் ஹிந்தி படங்களில் வேறு நடிக்க துவங்கி இருந்தேன்.அதனால் நானும் மணியும் சேர முடிய வில்லை.ஆனால் நேரம் கிடைத்தால் பேசுவோம்.1986 இல் விக்ரம் படம் முடிந்த பின் அந்த படம் மணிரத்னம் இயக்கி இருக்க வேண்டிய படம் என்று எனக்கு தோன்றியது.IT WAS HIS CUP OF TEA.பட தோல்விக்கு பின் என்ன ஆனது என்று என்று என்னை கேட்டார் மணி.ஏன் என்றால் விக்ரம் பட கதை நான் முன்பே அவரிடம் கூறி இருந்தேன்.அதற்கும் படத்திற்கு நிறைய மாற்றம்."கமல் ,சுஜாதா இருவரின் அறிவும் கோடம்பாக்கத்தில் கரைந்துவிட்டதாக பதில் சொல்லி "இது உங்களுக்கும் நேரலாம் என்றும் சொன்னேன்.

சில மாதங்களுக்கு பின் தயாரிப்பாளர்  முக்தா ஸ்ரீனிவாசன் (அவர் தயாரிப்பு இயக்கத்தில் சிம்லா ஸ்பெஷல் படம் ஏற்கனவே நடித்துள்ளேன்) என்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தார்.நான் மணிரத்னம் பெயரை இயக்குனராக சொன்னேன்.அவருக்கு ஆச்சர்யம் காரணம் வழக்கமாக கதாநாயகியை தான் ஹீரோக்கள்  பரிந்துரைப்பார்கள்.நான் ஒரு இயக்குனரை  பரிந்துரைத்தேன்.மணி இரு கதைகளை எனக்கு சொன்னார் ஒரு கதை GANGSTER கதை.பம்பாய் களமாக  கொண்டு நடக்கும் கதை என்றும் சொன்னார்.நான் அந்த கதை தேர்வு செய்தேன் காரணம் பம்பாய் தளம் என்றால் தேசிய அளவில் கவனிக்கபடும் என்று நினைத்தேன்.ஆனால் முக்தா பிலிம்ஸ் சிறிய பட்ஜெட்  படம் எடுத்து பழக்கப்பட்ட நிறுவனம்.தயாரிப்பாளர் பம்பாய் என்றவுடன் மறுத்தார். என் நடிப்பில் ஒரு படம் அவருக்கு  ஒரு 5 லட்சம் லாபம் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்.அவர் அதுவரை அப்படிதான் படங்கள் எடுத்து வந்தார்.கலையாக கருதாமல் படம் வியாபாரம் மட்டுமே என்று நினைத்துவிட்டார்.நாங்கள் படம் முழுதும் பம்பாயில் எடுக்க போவதில்லை.சில முக்கிய காட்சிகள் மட்டுமே ,என்று சொன்னதும் அரை மனதுடன் சம்மதித்தார்.

பின் நாங்கள் ACTION காட்சிகள் உலக தரத்தில் எடுக்க முடிவு செய்தோம்.அதற்கென பட்ஜெட்டில் 12 லட்சம்  ஒதுக்கினோம் .அதுவரை தமிழ் சினிமாவில் அப்படி ஒதுக்கியது கிடையாது.  JIM ALLEN என்பவரை இங்கிலாந்தில் இருந்து வரவழைத்தோம்.அவர் அதற்கு முன் ஷோலே போன்ற இந்திய படங்களில் பணி புரிந்துள்ளார்.அனால் தயாரிப்பாளர் அவரை 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த சம்மதித்தார்."இதற்கெல்லாம் இப்படி செலவு செய்ய கூடாது,ஹிந்தி சினிமா உன்னை கெடுத்து விட்டது என்று என்னிடம் சொன்னார்.அந்த 3 நாட்களில் அவர் கொடுத்த ஐடியாக்களை குறிப்பெடுத்துகொண்டு அவற்றை பயன்படுத்தினோம்.கார் முன்புற கண்ணாடியில் இரும்புக்கம்பி சொருகி சண்டை காட்சி எடுக்க திட்டமிட்டோம் .அனால் தயாரிப்பளர் காரை நிஜமாக சேதபடுத்த ஒத்துக்கொள்ளவில்லை.பின்னாளில் தேவர் மகன் படத்தில் அதை பயன் படுத்தி கொண்டேன்.படத்தில் மேக்கப் செய்ய தனி பட்ஜெட் கிடையாது.என் மேக்கப் குரு MICHAEL WESTMORE அவர்களிடம் பேசினேன்.அதற்குமுன் "ஒரு கைதியின் டைரி " படத்திற்காக அவரோடு பணிபுரிந்துள்ளேன்.ஒரு உதவியாளர் மட்டும்' கொண்டு நாமே கண்ணாடி முன் ஒப்பனை செய்து கொள்ள அவரிடம் பயிற்சி பெற்று இருந்தேன்.அப்போது  சரிகா உதவியுடன் நானே மேக்கப் போட்டுக்கொண்டேன்.நான் ஏற்கனவே வயதான வேடத்தில் நடித்துள்ள கடல் மீன்கள்,சலங்கை ஒலி போன்ற படங்களை பார்த்துள்ள மணிரத்னம் ,அந்த படங்கள் போல விக் வைக்காமல் நிஜமாகவே தலை முடியை அட்ஜஸ்ட் செய்ய விரும்பினார்.நானும் படத்தை காட்சி வரிசைப்படி எடுத்தால் அதை செய்யலாம் என்று சொன்னேன்.படத்தில் தெரியும் வழுக்கை உண்மையாக என் முடியை அப்படி சீர் செய்யப்பட்டது.அது மட்டும் போதாது என்று ஒரு பல் மருத்துவரை கொண்டு வாயில் ஒரு பொருளை வைத்து முகவாய் ,தாடைகள் அகலமாக தெரியும்படி செய்தோம் .

நாங்கள் ஒரு பெரிய விஷயத்தை,புதிதாய் செய்கிறோம் என்று உணர்ந்தோம்.நான்,மணி,பி.சி .ஸ்ரீராம்,தோட்டாதரணி ஒரு குழுவாக கால்ஷீட் எல்லாம் பார்க்காமல் உழைத்தோம்.முழுதும் பம்பாயில் எடுக்க முடியாததால் வெளிகாட்சிகள் மட்டும் அங்கே போய்  எடுத்தோம்.படம் நன்றாக வளர்ந்து வந்தது.ஒரு நாள் ,வேலு நாயகரின் மகன் இறந்து விட்ட காட்சி.நாங்கள் அந்த காட்சியை ஒத்திகை பார்த்தோம்.நான் இந்த காட்சியில் கொஞ்சம் பில்ட்அப்  இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்,அதாவது மற்றவர்கள் முதலில் அழுது கொண்டிருப்பது போலும் அங்கே வரும் வேலு நாயக்கர் எல்லோரிடமும் என்ன என்று விசாரித்தவாறு வந்து மகனின் பிணத்தை பார்த்தால்  நன்றாக இருக்கும் என்று மணியிடம் சொல்ல அவரும்  ஒப்புக்கொண்டார்.நான் அந்த காட்சிக்கு தயாராகி வந்த போது மணி,ஸ்ரீராம் இருவரும் வருத்தமாக இருந்தார்கள்.விசாரித்த போது  தயாரிப்பாளர் அன்றைய பிலிம் கோட்டா முடிந்து விட்டதென்றும் அடுத்து பிலிம் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று சொன்னார்.அந்த நாளில் பிலிம்  வேஸ்ட் ஆவதை குறைக்க அப்படி செய்வது தான் பழக்கம்.என்னால் தாங்க முடியாமல் என் அலுவலகத்திற்கு போன் செய்து 20 நிமிடத்தில் பிலிம் வரவைத்தேன்,அந்த 20 நிமிடத்தில் நான் அழ ஆயத்தமானேன்.உண்மையில் அந்த சூழ்நிலை என் குழந்தை இறந்த மன நிலையை உருவாக்கியது.அந்த காட்சியில் சிறப்பான நடிப்பிற்கு தயாரிப்பாளரின் பங்கும் உண்டு.அதற்காக அவர் ரொம்ப கொடியவர் என்று சொல்ல வர வில்லை.அவர் அந்த காலங்களில் அதுபோல் பழக்கபட்டிருந்தார்.
மணிரத்னதிற்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை.அந்த நேரத்தில் நானும் ரொம்ப களைப்பு அடைந்திருந்தேன்.படம் முடியவேண்டும் என்று நினைத்தேன்.நாங்கள் பம்பாய் சென்றிருந்தபோது வரதராஜ முதலியாரை(அவர் வாழ்கையை சித்தரிதே நாயகன்  படம் உருவானது) சந்தித்து உரையாடினோம்.அவரிடம் மணி உங்கள் வாழ்கை எப்படி முடிய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.அமைதியாக மருத்துவமனையில் அது நடக்க விரும்புகிறேன் என்று பதில் சொன்னார்(பின்னாளில் அப்படியே இறந்தார் ).போலீஸ் சாட்சி இல்லாததால் அவரை விடுதலை செய்யும்.அதன் பின் வேலு நாயக்கரை யாரோ அடித்துவிட அதனால் ஏற்படும் கலவரத்தை பயன்படுத்தி போலீஸ் அவரை சுட்டுகொல்வதாக மணி முடிக்க விரும்பினார்.

ஹோலி பாடலில் நான் மணியிடம் வேலுநாயக்கர் ஆடமாட்டார் என்று சொன்னேன்.அவரும் ஒப்புகொண்டார்.அந்த காலங்களில் நான் நடனம் ஆடாததை ஒப்புக்கொள்ள எந்த இயக்குனரும் சம்மதிக்க மாட்டார்கள் .சிகப்பு ரோஜாக்கள் எடுக்கும் போது பாரதிராஜாவிடம் கூட நான் அந்த பட நாயகன் ஒரு சைக்கோ கொலைகாரன்.அவன் நடனம் ஆடினால் சரிவராது என்று சொல்லிப்பார்த்தேன்.அவர் இது நாயகி கனவுப்பாடல்(நினைவோ ஒரு பறவை) என்று நான் சொன்னதை மறுத்துவிட்டார்.மணி ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி.இப்படி பல தடைகளை தாண்டி எடுத்து முடிக்கப்பட்டது படம்.நான் சிரித்தால் தீபாவளி பாடலில் நான் பார்த்த ஒரு பார்வை ரொம்பவும் அன்னியமாக தோன்றியதாகவும் நம் இந்திய முறையில் நடிப்பை வெளிப்படுத்துமாறும் என்னை கேட்டுக்கொண்டார்.இப்படி சின்ன விஷயங்களிலும் ரொம்பவும் கவனித்து  சொன்னதால் என்னால் அந்த நடிப்பை தரமுடிந்தது.நாயகன்  படம் என்னை இனி மசாலா வணிக படங்களில் நடிக்க கூடாது என்ற முடிவை எடுக்க வைத்தது.நான் நடு  வயதை அடைந்திருந்தேன் .இனி இப்படி பட்ட வேடங்களில் நடிக்காமல் இன்னும் எப்போது நடிப்பது என்று எனக்குள் கேட்டு கொண்டேன்.படம் முடிந்தவுடன் அந்த செட் கலைக்கபட்டவுடன் சரிகாவுடன் திருப்தியாக பேசிக்கொண்டே நடத்து இன்னும் நினைவில் உள்ளது.

படம் சவேராவில் சிறப்பு காட்சி பார்த்தோம்.ஒருவர் படம் முடிந்து தயாரிப்பாளர் காலில் விழுந்து அழுதார்.நான் தயாரிப்பாளரிடம் இந்த படத்திற்கு விருதுகள் வாங்குவீர்கள் என்று சொன்னேன்.அதற்க்கு அவர் லாபம் பார்க்கவே படம் எடுத்ததாகவும் ஆனால் படத்தின் புதிய தொழில்நுட்ப விஷங்கள் மக்கள் ஏற்பார்களா என்று பயந்தார்.அவர் லாபம் அடையாத படத்தை நான் அவருக்கு பரிந்துரை செய்ததாக  வருத்தப்பட்டார் .அவரிடம் இருந்து அந்த படத்தை வாங்கி கொள்ள கூட நினைத்தேன்.பின்னர் ஜி.வி வாங்கி வெளியிட்டார்.படம் வெளிவந்து ஹிட் ஆனது.அதன் பின் அது ஸ்டைல் ஆனது.ஹீரோக்கள்  ஜெல் வைத்து அழுத்தி தலை வாருவதை ஆரம்பித்தனர்.படத்தின் வெள்ளி விழா நேரத்தில் தயாரிப்பாளரின் சகோதரர் இறந்துவிட்டார்.எங்கள் மொத்த  பட குழுவும் அவர் வீட்டிற்கு போய் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்.அதனால் தயாரிப்பாளரோடு எந்த பிரச்னையும் இல்லை.அவர் எங்களை இன்னும் சுதந்திரமாக படம் எடுக்க விட்டிருந்தால் மணி இன்னும் சிறப்பாக எடுத்திருப்பார். பின்னாளில் அவருக்கு இதய நோயும் இன்னும் காலம் கழித்து வந்திருக்கும்.என்னிடம் பலர் கேட்க்கும் கேள்வி மணிரத்னத்தோடு மீண்டும் படம் எப்போது? இப்போது ரொம்பவும் எதிர்பார்ப்பு உள்ளது .

8 comments:

 1. தமிழில் வந்த சிறந்த 10 படங்களில் நாயகன் படத்திருக்கு நிச்சியம் இடம் உண்டு..அது உருவான விதத்தை கமல் சொன்னா விதம் அருமை பாஸ்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜ்.ரொம்ப நாளாக காணோம்.

   Delete
 2. "நடக்காதவற்றை நடந்ததாகச் சொல்லி சினிமா உலகில் என் மரியாதையை கமல் கெடுக்க முயல்கிறார். என் மனம் மிகவும் வேதனைக்குள்ளாகி இருக்கிறது. திரு கமல்ஹாசன் மீதும், செய்தியின் உண்மையை சரிபார்க்காமல் வெளியிட்ட THE HINDU மீதும் நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன்...

  ஹும்ம்... 25 வருட பழைய பிரச்சனை மீண்டும் தலையெடுத்துள்ளது.

  http://www.facebook.com/photo.php?fbid=296620867110349&set=a.133857770053327.22362.123095731129531&type=1&relevant_count=1&ref=nf

  ReplyDelete
  Replies
  1. கமல் அப்படி இதுவரை நடக்காத ஒன்றை சொன்னதாக வரலாறு இல்லை.அவருக்கு தேவையும் இல்லை.25 ஆண்டுகளுக்கு பின் தேவை இல்லாத ஒன்று.கமல் படம் ரொம்ப கஷ்டப்பட்டு தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளாமல் நிறைய விஷயங்கள் நடந்தந்ததை பதிவு செய்துள்ளார்.

   Delete
 3. வழக்கமான கதாநாயகனாக இருந்து, கமலை மாற்றிய முதல் படம்... மறக்க முடியுமா...?

  தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்.

   Delete
 4. கமல் படத்தின் தயாரிப்பாளர்கள் முதலில் அவரைப் பற்றி தெரியாமல் உளறுவதும், பின் வருந்துவதும் வாடிக்கையே.... இன்று தாணு வருந்துகிறார்...நாளை இவர்....

  ReplyDelete
 5. நாயகன் மறக்க முடியாத படம்..திரை அனுபவம் என்றாலே தனி சுவைதான் விஜய் சார்..தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete