Pages

Wednesday 13 June 2012

தடையற தாக்க --சூப்பர் அதிரடி த்ரில்லர் படம்


தடையற தாக்க --சூப்பர்  அதிரடி த்ரில்லர் படம் 

இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு,அதுவும் தமிழில் .பக்கா த்ரில்லர் படம். பர பர அதிரடியும் உண்டு.நிச்சயம் படம் ஸ்பெஷல் தான்.

இரண்டு சகோதரர்கள் வில்லன்கள்.அதில் அண்ணன் யாராலோ செமத்தியாக தாக்கப்பட்டு கோமாவில் இருக்கிறான்.தம்பி தன்  கும்பலுடன் தாக்கியவனை தேடி அலைகிறான்.ஏற்கனவே ஒரு கந்து வட்டி விஷயத்தில் வில்லனுடன்  லேசான உரசல் உள்ள நாயகனின் மீது சந்தேகம்.காரணம் அவரது கால் டாக்ஸியில்  வில்லன் தாக்கப்பட்ட கிரிக்கெட் பேட் கிடைக்கிறது.ஆனால் நாயகன் அவனை தாக்க வில்லை.பல பேர் மீது சந்தேகம் வந்து ஒரு வழியாக யாரும் (படத்தில்)எதிர்பாராத ஒருவர் தான் அதை செய்துள்ளார்.நடுவில் வில்லன் ஆள் ஒருவனே அவனை போட முயற்சிக்கிறான்.
அருண் விஜய் சரியாக பிட் ஆகிறார்.அதுவும் ரொம்பவும் பொங்காமல் அடக்கி உள்வாங்கி நடித்துள்ளார்.நல்ல படங்கள்  கிடைத்தால் நிச்சயம் நன்றாக வருவார்.படத்தை ஒன்ற வைப்பது இரு வில்லன்களும் அவர்களின் நடவடிகைகளும்தான்.சும்மா உருமிகொண்டிருக்காமல் பார்வையாலேயே மிரட்டியிருகிறார்கள்.குறிப்பாக வில்லன் தம்பி குமாராக வரும் வம்சி ,அவனின் அடியாள் சேகராக வரும் அருள் தாஸ்.காமெடி என்று தனியாக இல்லாமல் இயல்பாக கதையோடு வரும் காட்சிகள் படத்திற்கு ஒரு கடின தன்மை தருகின்றது.அதுவும் படத்திற்கு பலம் தான்.

இரண்டே பாடல்கள் அதுவும் முதல் பாதியிலேயே வந்துவிடுகின்றது.காரணம் இரண்டாம் பாதி கதை நடப்பது எல்லாமே ஒரே இரவில்.பின்னணி இசை ஓகே.குறைகள் என்றால் வன்முறை அதிகம்.பெண்களுக்கு பிடிப்பது சந்தேகம்தான்.மற்றவர்கள் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.எல்லாராலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கூட்டம் சுத்தமாக இல்லை.பார்க்க விரும்புகிறவர்கள் உடனடியாக பார்ப்பது நலம்.இல்லாவிட்டால் டீவீடி ,டவுன்லோட் தேடி அலையவேண்டும்.

டிஸ்கி :  நான் பதிவர்  சி.பீ யின் அட்ராசக்க பதிவில் விமர்சனத்தை படம் பார்ப்பதற்குமுன் படித்துவிட்டேன்.அதில் படத்தின் முக்கிய விஷயமான ஒன்றை அவர் எழுதிவிட்டதால்,படம் பார்க்கும்போது எனக்கு அது முன்பே தெரிந்துவிட்டது.விமர்சனம் எழுதுபவர்கள் அதுவும் இதுபோன்ற படங்களுக்கு எழுதும்போது இந்த விஷயங்களை  சொல்லகூடாது.சொல்லிவிட்டால் சப்பென்றாகிவிடும்.copy & paste செய்யும் அவர் இவற்றை  தெரிந்துகொள்ள வேண்டும்.இருந்தாலும் படம் சூப்பர்.

3 comments:

  1. கதையை சொல்லுறது கூட தப்பு இல்லை.. ஆனா முக்கியமான சஸ்பென்ஸ் சொல்லுறது தான் ஏற்க முடியல.
    அந்த விமர்சனத்தை நானும் படிச்சு தொலைச்சுடேன்..அப்புறம் படம் பார்க்கிற இன்ட்ரெஸ்ட் போயே போச்சு...

    ReplyDelete
  2. தடையற தாக்க சூப்பர் Action / thiriller movie . அருண்விஜய்கு வாழ்த்துக்கல் :-)

    ReplyDelete
  3. இன்று தான் இந்தப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது! வித்யாசமான கதை, அருமையான காட்சியமைப்புகள்... அண்ட்: நாங்கல்லாம் படம் பாதுட்டு தான் மத்தவங்க என்ன சொல்லிருக்காங்கனே வந்து பாப்போம். நீங்களும் அதையே ஃபாலோ செய்யவும். படம் எப்படி? இதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் டுவிஸ்ட் வெளிப்பட்டு விடும்.

    நண்பர் ராஜ் - அருமையான படம். மிஸ் பண்ணிவிடாதீர்கள்!

    ReplyDelete