Pages

Wednesday 12 September 2012

T20 உலக கோப்பை -அணிகள் ஒரு பார்வை :


T20 உலக கோப்பை -அணிகள் ஒரு பார்வை :

இதோ மீண்டும் ஒரு உலக கோப்பை கிரிக்கெட் .இந்த முறை T20.இலங்கையில் நடக்க இருக்கிறது .செப் -18 அதாவது வரும்  செவ்வாய் தொடங்குகிறது.இப்போது நடக்க இருப்பது நான்கவது T20 உலக கோப்பை.கிரிக்கெட் என்றாலே இன்று (பலர்) பார்க்க விரும்புவது T20 மட்டும் தான்.காரணம் 3.30 மணி நேரத்தில் மொத்த போட்டியும் முடிந்து விடும்.சாவகாசமாக ஐந்து நாள் டெஸ்ட்,ஒரு நாள் போட்டிகள் வேகமாக  ஈர்ப்பு குறைந்து வருகின்றன.மேலும் பலமான அணியோ பலம் குறைந்த அணியோ அந்த நாளில் அந்த இருபது ஓவர்களில் பேட்டிங் ,பௌலிங் ,பீல்டிங் யார் சிறப்பாக செய்கிறார்களோ அவர்கள் ஜெயிக்க முடியும்.அதனால் தான் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை எளிதில் இதில் வீழ்த்தி உள்ளது.நம்மிடம் சுருண்டு வரும் நியூசீலாந்து இதுவரை நம்மோடு விளையாடிய அணைத்து (நான்கு) T20 போட்டிகளில் நம்மை வீழ்த்தி  உள்ளது.வேகம் வேகம் வேகம் இதுவே T20.

இதுவரை நடந்துள்ள மூன்று உலக கோப்பைகளில் இந்தியா,பாகிஸ்தான்,இங்கிலாந்த் இவை சாம்பியன் ஆகி உள்ளன.இந்த முறை அணிகள் நிலைமை ஒரு மாதிரி தெளிவில்லாமல் இருக்கிறது.பல வீரர்கள் இப்போது இல்லை.பல புதிய வீரர்களை கொண்டு களம் இறங்குகிறது.மொத்த அணிகளை அலசுவதை விட குறிப்பிட்ட சில அணிகளை பற்றி அதன் பலம் பலவீனம் ,கவனிக்க வேண்டிய வீரர்கள்,வெற்றி வாய்ப்பு பற்றி பார்க்கலாம்.
SOUTH AFRICA
SRI LANKA
.PAKISTAN
AUSTRALIA 
ENGLAND 
INDIA 
மற்றும் இதர அணிகள் .
மேற்சொன்ன அணிகளை பற்றி ஒவ்வொரு பதிவிலும் பார்க்கலாம்.உலக கோப்பை தொடங்க இன்னும் ஆறு  நாட்களே உள்ள நிலையில் முதல் மூன்று அணிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

SOUTH AFRICA:
               எந்த ஒரு உலக கோப்பை தொடங்கும் போதும் வெல்ல வாய்ப்புள்ள அணியாக ,அதிகம் பேர் வெல்லும் என்று சொல்லும் அணியாக இருக்கும்.அவர்களும் அதற்க்கு ஏற்றாற்போல் முதல் ரவுண்டு தோல்வியே இல்லாமல் பெரும் வெற்றிகளோடு முழு புள்ளிகளோடு  அடுத்த சுற்றுக்கு வருவார்கள்.நாக் அவுட் ரவுண்டு தான் அவர்களுக்கு ஆப்பு வைத்து விடும்.அதுவும் எளிதாக வென்று விடுவார்கள் என்று தான் முதல் பாதி ஆட்டமும் இருக்கும்.ஆனால் எதோ ஒரு சாபம் அவர்களை தடுத்து விடுகிறது.ஒரு ICC CHAMPIONS TROPHY தவிர பெரிதாக எந்த ICC கோப்பையும் வென்றதில்லை.இந்த முறை பாப்போம்.
AB DEVILLERS : கேப்டன்.இவர் களத்தில் இருக்கும் வரை எந்த இலக்கும் முடியாதல்ல.முக்கிய விக்கெட் இவர்.சென்ற ஐ பி எல் போட்டியில் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட ஆட்டத்தை இவர் வென்று கொடுத்ததே சான்று.
HASIM AMLA : இவர் ஒரு டெஸ்ட் வீரர் என்று சொல்லலாம்.எப்படியோ அட்ஜஸ்ட் செய்துகொண்டு பால் -ரன் சரி செய்து விளையாடி விடுகிறார்.அச்சுறுத்தும் வீரர் என்று சொல்ல முடியாது.ஒரு பக்கம் நின்று விட்டால் அவ்வளவுதான்.அவுட் ஆக்குவது கஷ்டம்.ஜாக் காலிஸ் கூட இப்படிதான்.
JP DUMINY : ஐந்து அல்லது ஆறாவது களம் இறங்கும் வீரர்.விரைவாக ரன் அடிப்பார்.கிட்ட அடித்துவிட்டு ரெண்டு ரன்கள் ஓடிவிடுவார்.பௌலிங் செய்ய கூடியவர்.என்ன எப்போதும் ரன் அடிப்பார் என்று சொல்ல முடியாது.ஆனால் தவிர்க்க முடியாதவர்.
DALE STEYN : டெஸ்ட் வீரர் தான்.ஒரு நாள் போட்டியில் கூட பரவாயில்லை .இவர் சாதனைகள் எல்லாம் டெஸ்டில் தான்.இருந்தாலும் இவர் பௌலிங் ரன் அடிக்க சிரமம் ஏற்படுத்தும்.

SRI LANKA :

அவர்கள் நாட்டில் உலக கோப்பை நடப்பது அவர்களுக்கு பிளஸ்.சென்ற ஒரு நாள்  உலக கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றத்தில் இருந்து ரொம்பவும் அதிர்ச்சியில் இருந்தார்கள்.அந்த வெறி இருக்கும்.சரியான நேரத்தில் FORM வந்துவிடுவார்கள் .

DILSHAN: இவரை விக்கெட் எடுத்து விட்டால் பாதி வெற்றி.இதுவே போதும் இவர் பேர் சொல்ல.DILSCOOP என்று சொல்ல படும் இவர் கண்டுபிடித்த ஷாட் பால் செய்யப்பட்ட பின் கீப்பர் தலைக்குமேல் தூக்கி அடித்து பௌண்டரி அடித்து பந்து வீசுபரை வெறுப்பேற்றி விடும்.இவர் வீசும் பந்தும் சுலபமாக அடிக்க முடியாது.களத்தில் வெறியாக ஆடும் வீரர்.
JAYAWARDENE : கேப்டன் .பொறுப்பு ஒரு ரவுண்டு அடித்து மறுபடியும் இவரிடமே வந்து சேர்ந்து உள்ளது.கேப் பார்த்து பந்தை தள்ளி நோகாமல் ரன் எடுத்து விடுவார்.சாதுர்யமான வீரர்.பௌலிங் மாற்றம் ,பீல்டிங் மாறுதல் செய்வதில் வல்லவர்.
MALINGA : சிங்கம் மாதிரி சீறி வந்து யார்கர் போடுவார்.இன்னும் கூட நிறைய வீரர்கள் திணறி  வருவதை பார்க்கலாம்.இறுதி ஓவர்களில் பந்து வீசுவதில் இன்று உலகிலேயே சிறந்த வீரர்.அவ்வபோது சிக்ஸர்களும்  பறக்கவிட்டு பாட்டிங்கிளும்  அசத்துவார்.

PAKISTAN: 
          அது என்னவோ தெரியவில்லை உலக கோப்பை என்றவுடன் என்கிருந்தோ அவர்களுக்கு தெம்பு வந்து விடுகிறது.பற்பல சர்ச்சைகள் சூதாட்டம்,மற்ற நாடுகள் அந்த நாட்டிற்கு போகாமல் இருப்பது போன்றவை சேர்ந்து அவர்களுக்கு தங்களை நிருபிக்கும் உற்சாகம் வந்து விடுகிறது என்று நினைக்கிறேன் .பெரும்பாலும் செமி பைனல் கட்டத்தை அடைந்து விடுவார்கள்.கடந்த சில வருடங்களாக அவ்வளவாக டெஸ்ட் ஆடாமல் ஒருநாள் ,T20 ஆடி வருவதால் அதே மோடில் இருப்பார்கள்.அது ஒரு பிளஸ்.அவர்களின் பல வீரர்கள் வேறு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு T20 தொடர்களில் பங்கேற்று ஆட்டம் பழகி வந்ததும் ஒரு பிளஸ்.
AFRIDI : ஒரு நாள் போட்டியையே T20 போலதான் ஆடுவார்.ஒரு மூன்று ஓவர் நின்றால் கூட ஆட்டத்தின் போக்கே மாறி விடும்.பந்து வீச்சும் ரொம்ப டைட் லைன் .அடிப்பது கஷ்டம்.எதிர் அணியின் முக்கிய் விக்கெட் எடுத்து விடுவார்.SRILANKAN PREMIER LEAGUE ,BIG BASH உள்பட பல நாட்டு T20 தொடர்களில் பங்கேற்று அனுபவம் உள்ளவர்.
ABDUL RAZAQ :  நீண்ட வருடங்காக அணியில் உள்ளவர்.நடுவில் ICL போய் வந்தவர்.சில ஓவர்கள் பேட்டிங் ,சில ஓவர் பௌலிங் சில சிக்ஸர் இவை நிச்சயம் .இறுதியில் இவர் கட்டங்களில் இருந்தால் எந்த இலக்கையும் துரத்தலாம்.
SAEED AJMAL : உலகின்  தற்போதைய NUMBER : 1 சுழற் பந்து வீச்சாளர்.சுழற் பந்தை நான்கு சமாளிக்கும் ஆசிய அணிகளே இவர் பந்தை சமாளிக்க கஷ்டப்படுகிறார்கள்.மற்ற அணிகளை பற்றி சொல்ல வேண்டாம்.எதிர் அணிக்கு கடும் சவால் இவர் பந்துகள்.ரன் கொடுப்பதும் ரொம்பவும் குறைவு.கடைசி ஓவர்களில் ரொம்ப கஷ்டம்.

ஆஸ்திரேலியா ,இங்கிலாந்த் ,இந்திய மற்றும் இதர அணிகளின் தற்போதைய நிலைமை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

6 comments:

  1. ஒவ்வொரு அணியின் விளக்கமும் நன்றாக கொடுத்துள்ளீர்கள்... எனக்கு SOUTH AFRICA அணியை நினைத்தால் தான் கொஞ்சம் பாவமாக இருக்கும்... (நீங்கள் சொன்னது போல் யார் கொடுத்த சாபம்...?!?) கடைசி போட்டியில் சொதப்புவார்கள்... (அது எந்தப் போட்டியானாலும் சரி...)

    நம் அணியை வரும் பதிவுகளில் படிக்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நமது அணி பற்றி கொஞ்சம் விரிவாகவும் ,ஆஸ்திரேலியா ,இங்கிலாந்த் அணிகள் பற்றியும் எழுத இருக்கு.ரொம்ப நன்றி தனபாலன் சார்.

      Delete
  2. Good analysis. Waiting for the next post

    ReplyDelete
  3. ரொம்ப நல்ல அலசல்..தென்.ஆ அணியில் காலிஸ் வேறு உள்ளார்...IPL அனுபவத்தை வைத்து அவரை 5~6 டௌன் இறங்குவார் என்று நினைக்கிறன்.. இங்கிலாந்து சீரீஸில் அவர் அப்படி தான் இறங்கினார்...
    ஆஸ்திரேலிய T20 தரவரிசையில் 10 இடத்தில உள்ளது... :(
    அடுத்த பதிவை சிக்கிரமே எதிர்பார்கிறேன்..

    ReplyDelete