Pages

Monday 10 September 2012

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 4


HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 4 


சென்ற ஹாரர் பதிவுக்கும்(பாகம் 3) இதுக்கும் ஒரு மாதத்திற்கு மேல் இடைவெளி.இன்று எழுதிவிடலாம் என்று தொடங்கினால் ,வேறு ஒரு விஷயம் பற்றி அப்போதே எழுதி ஆக வேண்டி இருக்கும்.அதனால் இந்த இடைவெளி. 2000 ஆண்டுக்கு பின் வந்த ஹாரர் படங்கள் பற்றி பார்க்கலாம்.ஒரு பெரிய மாறுதல் கண்டது இந்த காலங்களில்.பல யோசிக்க முடியாத கோணங்களில் ,தளங்களில் படங்கள் வர தொடங்கின .சாதரணமாக ஒரு பேய் வீடு ,அங்கே செல்லும் ஒரு குழு என்ற கதை எல்லாம் மலை ஏறி இருந்தது.

முதலில் சொல்ல வேண்டியது " FINAL DESTINATION " படம்.2000 மாவது ஆண்டு முதல் பாகம் வந்தது.நான் தொடர்ந்து ஆங்கில படங்கள் பார்க்க தொடங்கியது இந்த படம் பார்த்த பின் தான்.விமானத்தில் பறக்க இருக்கும் ஒருவன் அந்த விமானம் விபத்துக்குள்ளாவது போல் உணர்கிறான்.அதை அப்போது சொல்லும் போது நடந்த கை கலப்பில் இவனும் இன்னும் சிலரும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுகிறார்கள்.சில நிமிடங்களில் பறக்க தொடங்கும் அந்த விமானம் வெடித்து சிதறுகிறது.மரணத்தை வென்ற அந்த சிலரை மரணம் மீண்டும் எப்படி துரத்தி கொள்கிறது என்பதே படம்."YOU CAN'TCHEAT THE DEATH " என்பதே படம்.இந்த கதை விமானத்தில் ,இதே போல் ஹைவே விபத்து,தீம் பார்க் விபத்து ,ரேஸ் களம் ,பிரிட்ஜ் என்று கலங்களை மாற்றி பல ஐந்து பாகங்களாக படம் வந்துள்ளது.எனக்கு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரொம்ப பிடிக்கும்.படத்தின் தொடக்கத்தில் வரும் சாலை விபத்து உடலை வேர்க்க செய்யும்.
அந்த விபத்தின் வீடியோ காட்சி 


WRONG TURN படமும் குறிப்பிடும்  வெற்றியை பெற்றது.நர உணவு உண்ணும் சிலரிடம் மாட்டிகொள்ளும் ஐந்து பேர்.படம் முழுதும் இப்படி அப்படி நகர விடாத படம்.இதுவும் நான்கு பாகங்கள் வந்துள்ளது.THE OTHERS படமும் சொல்லவேண்டிய படம்.1940 களில் நடக்கும் கதை.ஒரு பெரிய தனியான மாளிகை.அங்கே கணவன் இல்லாமல் தன் குழந்தைகளோடு வசிக்கும் பெண்.குழந்தைகள் அடிக்கடி சில குழந்தைகளின் குரல்களை கேட்பதாக சொல்கிறார்கள்.ஆனால் இவளுக்கு கேட்கவில்லை.இப்படி செல்லும் படம் பெரும் அதிர்ச்சியை நமக்கு தந்து முடிகிறது.பல விருதுகளை வென்ற இந்த படம் 2001 இல் வெளி வந்தது.நம் SLUMDOG MILLIONAIRE இயக்குனர் டேனி பாயல் இயக்கி 2002 இல் வந்த 28 DAYS LATER படமும் வெற்றிபடமே. இங்கிலாந்து முழுதும் ஒரு வைரஸ் பரவி நகரே நாடே அழிகிறது.காரணம் ஒருவருக்கு தொற்றினால் அவர் வெறி ஏறி மற்றவர்களை கடிக்க துரத்துவார்கள்.உயிர் பிழைத்த சிலரின் போராட்டமே படம்.அதே கருவை கொண்டு அதன் தொடர்ச்சியாக 28 WEEKS LATER படமும் வந்தது.

ZOMBIE தளத்தை கொண்டு வெளி வந்த "SHAUN OF THE DEAD (2004) மாபெரும் வெற்றியும் விமர்சகர்களால் பாராட்டும் பெற்றது.அதே போல் ZOMBIE படங்களாக கொண்டு LIVING DEAD என்ற தொடர் படங்களாக வந்தன.அதே நேரம் ஒரு பெரிய தொடர் படத்துக்கான விதை விழுந்தது.அது தான் "SAW".கிட்டத்தட்ட நம் அந்நியன் போல் ஆனால் வேறு மாதிரி.உயிரின் அருமை தெரியாதவர்களை அவர்களுக்கு மரணத்தை நெருக்கமாக காட்டி கொள்வது அல்லது அதில் பிழைத்தவர்களை தன்னோடு வைத்துகொள்வது என்று இருப்பவன் ஜான்.இந்த படம் ஏழு பகுதிகளாக வந்து கலக்கியது.அதிலும் இன்னும் சிறப்பான விஷயமாக ஒவ்வொரு ஆண்டும் அதே அக்டோபர் கடைசி வெள்ளி அடுத்த பாகம் வெளிவரும் என்பது.அப்படி தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஏழு பாகங்கள் வந்தது.இன்றளவும் ஹரரர் franchaise படங்களில் அதிக வசூல் செய்துள்ள சாதனை படம் இது.

HOSTEL (2005) படமும் கவனிக்க தக்க வெற்றியை பெற்றது.நம்மில் பலருக்கு சிலர் மேல் தீராத  கோபம் இருக்கும்.அந்த ஆள் கையில் கிடைத்தால் என்னென்ன கொடுமைகள் செய்வீர்கள் ?ஆனால் எதுவும் செய்ய முடியாது.அதே கோபத்தை தீர்த்துக்கொள்ள வேறு ஒருவர் யார் என்றே தெரியாத ஒரு மனிதன் உங்களிடம் மாட்டினால் ? அவனை என்ன பண்ணினாலும் நீங்கள் பயப்பட தேவை இல்லை.அப்படி மாட்டிகொண்ட மூன்று நண்பர்களை பற்றி கதை.முதல் அரை மணி நேரம் என்ன படம் இது ஒருவேளை எதாவது X RATED படமா என்று சந்தேகம் வந்துவிடும்.அந்த அளவிற்கு காட்சிகள்.அதன் பின் கிட்டத்தட்ட படம் தொடங்கி முக்கால்  மணிநேரம் கழித்தே படத்தில் பரபரப்பு வரும்.படம் மூன்று பாகங்கள் .ஆனால் முதல் பாகம் போல் மற்றவை ஈர்க்கவில்லை.PARANORMAL ACTIVITY படம் பற்றி சொல்லவேண்டும்.உங்கள் வீட்டில் தனிமையில் தூங்கு கொண்டிருகிறீர்கள்.உங்களை சுற்றி ,அந்த அறையில் என்ன நடக்கும் ? நீங்கள் அதை பற்றி எப்போதாவது நினைத்ததுண்டா? அப்போது இந்த படம் பாருங்கள்.முடிந்தால் இரவில்.படம் எனக்கு எந்த பயத்தையும் எனக்கு ஏற்படுத்தவில்லை.சிலர் பயந்ததாக கேள்விபட்டேன்.

GRUDGE ,RING போன்ற சீன ஹர்ரர் படங்கள் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட்டன.மேலும் எழுபதுகளில் வந்த THE HILLS HAVE THE EYES,TEXAS CHAINSAW MASSACRE ,THE LAST HOUSE ON THE LEFT போன்ற படங்கள் மீண்டும் எடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றன.EVIL DEAD பட இயக்குனர் எடுத்த DRAG ME TO HELL, STEPHEN KING எழுதிய 1408 ,VACANCY போன்ற படங்கள் இந்த வருடங்களில் குறிப்பிட தக்கவை.மூன்று ஆண்கள் ,இரு பெண்கள் வாரா இறுதியை இன்பமாக கழிக்க ஆள் அரவமற்ற பகுதியில் யாரிடமோ அல்லது எதனிடமோ மாட்டிகொள்கிறார்கள்.இதே மைய கருத்தை கொண்டு குறைவான செலவில் குப்பையாக நிறைய படங்கள் வந்தன.வித்தியாசமான களத்தில் எடுக்க பட்டவை கவனிக்க வைத்தன.
ஹர்ரர் பட  முந்திய பகுதிகள் லிங்க்
பகுதி 1 -http://scenecreator.blogspot.in/2012/07/horror-1.html
பகுதி 2-http://scenecreator.blogspot.in/2012/07/horror-2.html
பகுதி 3-http://scenecreator.blogspot.in/2012/07/horror-3.html

7 comments:

  1. ஒவ்வொன்றாக நல்லதொரு அலசலும்... சுருக்கமான விளக்கமும் அருமை...

    லிங்க் கொடுத்துள்ளீர்கள்... பார்க்கிறேன் நண்பரே... நன்றி...

    ReplyDelete
  2. கிட்டத்தட்ட அனைத்து படங்களையுமே பார்த்திருக்கிறேன். எனது ஃபேவரைட் 'Final Destination' சீரீஸ் தான். அதிலும் 5ஆம் பாகத்தை தியேட்டரில் 3Dயில் பாத்தேன்! 1408, The Others அருமையான படங்கள்.

    Shaun of the Dead பார்க்கவேண்டும். நல்ல படம் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். இப்போது நீங்களும்.

    SAW முதல் பாகம் அருமையாக இருந்தது. அடுத்தடுத்து தொடர்ந்து ஒரே நாள் பார்த்ததால், மற்ற பாகங்கள் பிடிக்காமல் போனது. தொடர்ந்து பார்த்தது தான் பிரச்சனை போல. Hostel பார்த்து கடுப்பு தான் வந்தது.

    தொடரட்டும் நற்பணி :-)

    ReplyDelete
    Replies
    1. உங்களை போலவே final destination பிடிக்கும் .saw போக போக போர் அடித்துவிட்டது.ஒரு வேலை நன்றாக இருக்குமோ என்றே அடுத்தடுத்த பாகங்களை பார்த்தாகிவிட்டது.

      Delete
  3. இதில் நான் கூட எண்பது வீதம் படங்கள் (Forward) பண்ணியாவது பார்த்து இருப்பேன்.. hostel எப்பா கொலை வெறி..
    Final destination series மட்டும் என்னை வெகுவாக கவர்ந்தது நல்ல தொகுப்பு நண்பா

    ReplyDelete
  4. RING படம் உண்மையிலே பேய் படங்களில் திரில் பண்ணி என்னை பயபடுதிய முக்கிய படம்

    ReplyDelete
    Replies
    1. ரிங் பயமுறுத்தும் படம் தான்.கொழந்த நீ பயபடாம?

      Delete