Pages

Wednesday 5 September 2012

முகமூடி- அத்தனை மோசமில்லை.


முகமூடி- அத்தனை மோசமில்லை.

முகமூடி பற்றி வெள்ளி கிழமை மதியம் முதலே பல எதிர்மறை விமர்சனங்கள்.படத்தை கிழித்து தொங்க விட பட்டது.நானும் ஆவலாக படித்தேன்.அதனால் படத்தை பார்க்கும் ஆவல் இல்லை.இத்தனைக்கும் மிஸ்கின் இயக்கிய அஞ்சாதே,யுத்தம் செய் இந்த இரு படங்களையும் அரங்கிற்கு சென்று பார்த்து இருந்தேன் .சித்திரம்  பேசுதடி இன்னும் பார்க்க வில்லை.நந்தலாலா எனக்கு பிடிக்க வில்லை.படம் ரொம்ப மோசம் இந்த ஆண்டு சகுனி ,பில்லா என்று ஏமாற்றும் படங்களின் வரிசையில் இந்த படம் என்று எழுதி இருந்தார்கள்.அதிலும் ஒரு பதிவர் தன் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் மொக்கையான படம் என்று எழுதி இருந்தார்.அதனால் சனி ,ஞாயிறு இரு நாட்களும் படம் பார்க்கும் எண்ணம் தோன்றவில்லை.

ஆனால் திங்கள் கிழமை நான் செய்ய வேண்டிய வேலை ஒன்று தள்ளி போனதால் மிகவும் சோர்வுற்ற நான்,ஏதாவது படம் பார்க்க வெளியே போகலாம் என்று தோன்ற,சரி நல்லதோ கேட்டதோ முகமூடி பாப்போம் என்று சென்றேன்.மனதில் படம் பற்றி ஒரு மோசமான எண்ணமே இருந்ததால் எதுவும் எதிர்பார்க்கவில்லை.மார்வெல் காமிக்ஸ் போல் பெயர் போடுகிறார்கள்.படத்தின் கதை (?) பற்றி எல்லோரும் சொல்லி விட்டதால் இங்கே அதை பற்றி கூற தேவை இல்லை.ஆனால் படம் பற்றி சில விஷயங்கள் தோன்றின அதை இங்கே பதிவு செய்கிறேன்.
1. மிஷ்கின் முந்தய அஞ்சாதே ,யுத்தம் செய் போன்ற படங்களின் வெற்றிக்கு காரணம் அழுத்தமான சம்பவங்கள்.அது இந்த படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங்.

2. தேவை இல்லாத காட்சிகள் அதிகம் .முக்கியமாக ஜீவாவின் தாத்தா &  கோ செய்யும் சேஷ்டைகள். அதிலும் கிளைமாக்ஸ் எப்பா.அவற்றை முற்றிலும் இல்லாமல் ஜீவா,நரேன் தொடர்பான காட்சிகள் ,சூப்பர்மென் என்ற சொல்லும்படி ஏதாவது செய்ததாகவோ,நரேன் தொடர்பான காட்சிகள் குறைவு.இவையே படத்தை இறக்கி விடுகின்றது.

3. திடீர் என்று மொத்த காவல்துறையும் முகமூடி தான் ஒரே கதி என்று சரண் அடைவது.எந்த விதத்திலும் ஏற்று கொள்ள முடிய வில்லை.அதற்கான எந்த காட்சியும் படத்தில் இல்லை.ஒரு வேலை இருந்து பட நீளம் கருதி வெட்டி விட்டார்களா? 

4.இறுதி காட்சியில் நரேன் சூப்பர் ஹீரோக்களை பட்டியல் இடுவது ஏன்? ஒரே எரிச்சல் .அதுவும் இரண்டு மூன்று முறை அதையே  சொல்லி.

5. படத்தின் முக்கிய அதுவும் கதையோடு முகமூடி -கொள்ளை கூட்டம் தொடர்பான அழுத்தம் இல்லை.

6.இசை  மிகவும் அருமை.பின்னணி இசை அருமை. படம் முழுதும் guitar ,வியலின் தான் ஆக்கிரமித்து உள்ளது.

7. படம் 2.42 நிமிடம் ஓடுகிறது .அதில் முக்கிய காட்சிகள் என்றால் ஒரு மணி நேரம் தான். மற்ற காட்சிகள் படத்தை நகர்ததான்.இது நிறைய படங்களில் உண்டு என்றாலும்.இந்த படத்திற்கு அவசியம்.

8.மிஷ்கின் இந்த படத்தை சூப்பர் ஹீரோ படம் என்று சொல்லி இருக்க தேவை இல்லை.அதற்க்கான காட்சிகளும் இல்லை.அவர் ஒரு வித தெளிவில்லாமல் ,முடிவு இல்லாமல் எடுத்திருக்கிறார்.ஆனால் கொஞ்சம் டின்கேரிங் பார்த்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.ஆனால் அவரிடம் விஷயம் தீர்ந்து  போச்சு ,இனி அவ்வளவுதான் என்று சொல்லவதை   ஏற்க முடியாது.

தொடர்ந்து ஆங்கில படங்கள் பார்பவர்கள் அதுவும் எல்லா சூப்பர் ஹீரோ படங்கள் பார்பவர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்காது.ஆனால் மிஷ்கின் எடுத்த அடுத்த  படம் என்று நினைத்தால் ஒரு முறை பார்க்கலாம்.ஆனால் அதிலும் சென்ற படங்களில் இருந்த நீட்நெஸ் இல்லை.மொத்தத்தில் ரொம்பவும்  மட்டமாக நினைத்து கொண்டு போனேன்.ஆனால் அந்த அளவு மோசம் இல்லை.சகுனி ,பில்லா போன்ற படங்களுக்கு பரவில்லை.இது என் கருத்து .பலர் வேறு படலாம்.

முகமூடி- அத்தனை மோசமில்லை.

9 comments:

  1. பல விமர்சனம் படித்தேன்... சரி அதை விடுங்க...

    என் நண்பர் குடும்பத்தோடு சென்று விட்டு வந்தார்...

    சரி, குழந்தைகளுக்காக செல்லலாம் என்றால், நண்பர் "சார் என் குழந்தைகள் நன்றாக தூங்கி விட்டது" என்கிறார்... அதான் டவுட்...

    நீங்க அவ்வளவு மோசம் இல்லேங்கிறீங்க ...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை தனபாலன் சார்.

      Delete
  2. சகுனி ,பில்லா போன்ற படங்களுக்கு பரவில்லை.இது என் கருத்து .பலர் வேறு படலாம்.

    உண்மை தான். ஆனால் தொழிநுட்ப ரீதியில் நிறைய விஷயங்கள் முயற்சித்திருக்கிறார். கதை விவாதத்தில் தான் எங்கோ கோட்டை விட்டிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. முக்கியமாக கோட்டை விட்டது அங்கேதான்.

      Delete
  3. ரொம்ப நல்ல ரெவ்யூ..
    //ஆனால் அவரிடம் விஷயம் தீர்ந்து போச்சு ,இனி அவ்வளவுதான் என்று சொல்லவதை ஏற்க முடியாது.//
    நிச்சியம் இந்த சறுக்கலில் இருந்து மீண்டு நல்ல படம் தருவார் மிஷிகின்..

    ReplyDelete
    Replies
    1. படம் பார்த்து விட்டாயா ராஜ் ?

      Delete
  4. vijay padankala compare pannupothu intha mokkaiyana padam kooda nalla padamathan theriyum

    ReplyDelete
    Replies
    1. நீங்க விஜய் மாதிரியே இருக்கீங்க அன்பு.

      Delete
  5. அட போங்கப்பா.....இப்போ தான் பார்த்துட்டு வரேன்...செம போர்....

    ReplyDelete