Pages

Friday 14 September 2012

AMERICAN PIE REUNION (2012) -18+ ஆங்கிலம்


AMERICAN PIE REUNION (2012) -18+  ஆங்கிலம் 


1999 வந்த AMERICAN PIE படத்தை நான் 2003 இறுதில் தான் ஒரு நண்பனின் அறையில் கணினியில் பார்க்க நேர்ந்தது.அதற்க்கு முன் JURRASIC PARK,MATRIX  சில ஜாக்கிசான் படங்கள் இவை மட்டுமே ,அதாவது இந்தியாவில் அரங்குகளில் வரும் பிரபலமான படங்கள் மட்டுமே பார்த்திருந்தவன் நான்.AMERICAN PIE படம் பார்க்க தொடங்கியதும் ஒரு வெளி படுத்த முடியாத மகிழ்ச்சியோடு படம் பார்த்தேன்.என்ன இது இதை ஆற்றி எல்லாம் கூடவா படத்தில் சொல்வார்கள்.இதற்க்கு முன் இதை பற்றி எல்லாம் பேசிய படம் இல்லையே என்று ஆச்சர்யத்துடன் படம் பார்த்தேன்.அப்போது என்  நண்பன் இந்த படம் மூன்று பாகங்கள் கொண்டது என்றும் அந்த படங்களும் உள்ளது என்று சொன்னான்.அடுத்த சில நாட்களில் அவற்றையும் அவன் புண்ணியத்தில் பார்த்தேன்.

அதன் பின் நான் ஆங்கில படங்களை தொடர்ச்சியாக தேடி தேடி பார்க்க தொடங்கியது 2007 முதல் தான்.அப்போது ஒரு டி.வி.டியில் ஆறு AMERICAN PIE படங்களையும் விற்றார்கள்.அதை வாங்கி தினமும் ஒரு படமாக திகட்ட திகட்ட பார்த்து முடித்தேன்.எது எந்த படத்தில் என்ன காட்சி என்பவை கூட ஞாபகம் இல்லாதபடி பார்த்தேன்.2010 இல் ஆறாவது பகுதியாக  BOOK OF LOVE பார்த்தேன்.ஆனால் நான் பார்த்த புதிய நான்கு  படங்களிலும் பழைய நடிகர்கள் இல்லை.நாயகனின்  அப்பா மட்டும் சில படங்களில்  வந்தார்.அதோடு சமீபத்தில் பதிவர் ஹாலிவுட் ரசிகன் இந்த புதிய AMERICAN REUNION பற்றி எழுதியதால் தான் அடுத்த பகுதி வந்ததே தெரியும்.சென்ற வாரா இறுதியில் படம் பார்த்தேன்.


கதை என்றால் திசைக்கு ஒருவராய் பிரிந்து விட்ட நண்பர்கள் 13 ஆண்டுகளுக்கு பின் நால்வர் (எப்போதும் வம்பில் சிக்கும் STIFLER தவிர ) மீண்டும் சந்தித்து ஒரு வார இறுதியை கொண்டாட முடிவெடுக்கின்றனர்.விதி விட்டதா STIFLER தற்செயலாக அவர்களுடன் சேர்கிறான்.மற்றவர்கள் ஒரு வித சங்கடத்துடன் அவனை சேர்த்து கொள்கிறார்கள்.(முந்தய படங்கள் பார்த்தவர்கள் STIFLER செய்யும் அட்டகாசங்கள் அறிந்திருப்பார்கள்)இனி என்ன ? அடுத்தடுத்து அவன் செய்யும் வம்புகளில் சிக்கி ஒவ்வொருவரும் அதில் மீள்கிறார்கள்.இதற்கிடையில் ஜிம்மின் தாய் இறந்து விட்டதால் துணை இன்றி தவிக்கும் அவன் தந்தைக்கு ஒரு கம்பெனி கிடைக்க அவரையும் பார்ட்டிக்கு அழைத்து வருகிறார்கள்.அப்புறம் ஒரே கூத்துதான் .நால்வருடைய  துணைவிகளும் கோபித்து கொள்கிறார்கள் பின் சமாதானம் அடைகிறார்கள்.

முதல் மூன்று படங்களுக்கு பின் இந்த படம் தான் ஓரளவு திருப்தி தருகிறது.எல்லாருமே அருமையாய் நடித்து இருக்கிறார்கள்.இந்த படத்தின் அடுத்த பகுதி என்றால் என்ன எதிர் பார்த்து வருவார்கள் என்பதை நன்கு உணர்ந்து தந்திருக்கிறார்கள்.சிலர் ரொம்பவும் வயதாகி போனது போல் தெரிகிறார்கள்(நாயகி).இந்த படம் போல் நம்மூரில் படம் எடுத்தால் ? ஊஹும் .பாய்ஸ் படத்துக்கே துரத்தி துரத்தி அடித்தவர்கள்.

ஜாலியாக ஒரு வார இறுதி நாளில் ஒரு படம் பார்க்கலாம்,சிரிக்கலாம்  என்றால் ஓகே .

இந்த செக்ஸ் காமெடி வகை படங்கள் பிடிக்கும் என்றால் நான் பரிந்துரைக்கும் படங்கள்:
ROAD TRIP (2000),EURO TRIP(2004),MILF (2010),OLD SCHOOL (2003),SEX DRIVE (2008).
மேலும் DOWNLOAD செய்பவர்கள் UNRATED VERSION இருந்தால் அதை பதிவிறக்குங்கள்.

6 comments:

  1. கடைசி பார்ட் மட்டும் பார்த்து இருக்கேன் விஜய்.....எனக்கு பிடித்து இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால் முதல் மூன்று பாகங்கள் பாரு ராஜ்.jolly time pass

      Delete
  2. AMERICAN PIE 1,2,3 பகுதிகள் கல கல ரகம்.. (18 + காட்சிகள் வந்தால் நான் FORWARD பண்ணி விடுவேன்...



    அப்பிடின்னு சொன்னா நம்பனும் ஓகே)
    ஆனால் ஏதோ அடுத்த 4,5,6 ஓரளவு தான் ஓகே.. இந்த படம் இன்னும் பார்க்கவில்லை நல்ல DVD கிடைச்சா பார்த்துடுவோம்..

    //ROAD TRIP (2000),EURO TRIP(2004),MILF (2010),OLD SCHOOL (2003),SEX DRIVE (2008).//

    இந்த 5 படங்களும் செம ஜாலி டைப் படங்கள்.. OLD SCHOOL அதில் கொஞ்சம் அதிகம் பிடிக்கும்.. ஆனா தொடர்ச்சியாக பார்த்த படியால் ஒரு வேலை சலித்து போனதோ தெரியவில்லை தொடர்ச்சியாக HIGH SCHOOL படம் பார்த்த போது ரொம்ப அலுப்பாய் போன போல இருந்தது.. ஆனால் அண்மையில் மறுபடி பார்த்த போது கலக்கல் படம் அது..

    //மேலும் DOWNLOAD செய்பவர்கள் UNRATED VERSION இருந்தால் அதை பதிவிறக்குங்கள்.//

    என்னை போல குழந்தை மனம் படைத்தவர்கள் வரும் இடத்தில இப்படி வார்த்தைகளை உபயோகிப்பதை பகிரங்கமாய் கண்டிக்கிறேன்.. ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. உனக்கே ஓவரா தெரியலையா ஹாரி.விட்டால் உன் கதையே ஒரு அமெரிக்கன் பை போல் ஒரு படம் எடுக்கலாம் இல்லையா?
      --

      Delete
  3. ஹி ஹி ... நாம சொல்லியும் சில பேர் படம் பார்க்கிறாங்கப்பா. மகிழ்ச்சி ... மகிழ்ச்சி. :)

    இந்த மாதிரிப் படம் பிடிக்கும்னா, Harold & Kumar 1,2 Euro Trip, Superbad,Not Another Teen Movie எடுத்துப் பாருங்க. :)

    ReplyDelete