Pages

Friday, 31 August 2012

TWIST ENDING ஆங்கில படங்கள் :

TWIST ENDING ஆங்கில படங்கள் :

ஆங்கில படங்களில் இறுதி காட்சியில் ஒரு பெரும் திருப்பம்(TWISTED ENDING) வந்து நம்மை அசர அடித்துவிடும்.அப்படி பட்ட படங்கள் பல மறக்க முடியாதவை.சில படங்கள் படம் தொடங்கி கதை ஏதோ ஒன்றை நோக்கி சென்று கொண்டிருக்கும்.அப்படியே போய் கொண்டிருக்கும்போது கிளைமாக்ஸ் ஒரு பெரிய அதிர்ச்சியை நமக்கு தரும்.பலருக்கு தெரிந்த உதாரணமாக saw படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சியை சொல்லலாம்.ஒரு எங்கோ ஒரு கழிப்பறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருவர் கண் விழிக்கிறார்கள்.அருகே இறந்த நிலையில் ஒரு பிணம்.அங்கே தொடங்கி பல திருப்பங்களை சந்திக்கும் படம் ,இறுதில் பிணமாக படுத்திருந்தவன் எழுந்து நடந்து செல்வது தான் திருப்பம் .இது உதாரணம் தான்.இது த்ரில்லர் படங்களில் மட்டுமல்ல சாதாரண டிராமா வகை சார்ந்த படங்களிலும் உண்டு.அப்படி அசரடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

THE OTHERS(2001): படம் மெதுவாகத்தான் போகும்.ஆனால் முடிவை கொஞ்சமும் யாரும் யூகிக்க முடியாது.படம் தந்த அதிர்ச்சி போக கொஞ்ச  நேரம் ஆனது .
ORPHAN(2009):  இதுவும் ஒரு அதிர்ச்சியான முடிவை ( உண்மையை ) சொல்லும் படம். ஒரு குடும்பத்தில் அனாதையாய் வாழ வரும் சிறுமி கொஞ்ச கொஞ்சமாக  மற்ற குழந்தைகளிடம் தன் முகத்தை காட்டுகிறாள்.அவள் யார் ? 

THE MACHINIST(2004) : ஒரு ஆண்டாக தூங்காமல் இருக்கும் ஒருவன் சந்திக்கும் சம்பவங்கள்.முடிவு ?
THE USUAL SUSPECTS(1995) : ஒரு திருட்டு கும்பலை போலீஸ் வளைக்கிறது.அதில் சிக்கிய ஒருவன் தரும் வாக்கு மூலம். இறுதி புத்திசாலி தனமானது -குழந்தை தனமானது எப்படி வேண்டும் ஆனாலும் சொல்லலாம்.இந்த கிளைமாக்ஸ் போல் தமிழில் சமீபத்தில் வந்த ஜீவா நடித்த வந்தான் வென்றான் இருக்கும்.

FIGHT CLUB(1999): படத்தின் இறுதியில் இரண்டு பேர் இல்லை.ஒருவனின் கற்பனைதான் மற்றவன் என்பது ஷாக்.
THE UNINVITED(2009): தந்தை மறுமணம் செய்து கொள்கிறான்.தன் தாய் இறந்த பின் மன நல காப்பகத்தில்  இருந்து வரும் பெண் தன் ஒரே ஆறுதாலாக நினைப்பது அவள் சகோதரியை .கடைசியில் அவள் எப்போதோ இறந்து போனவள் என்பது தான் ட்விஸ்ட்.இது ஒரு ரீமேக் படம்.TALE OF 2 SISTERS என்ற படமே மூலம்.
THE GAME(1997): படத்தின் மொத்த பரபரப்பும் ஒரு விளையாட்டான செட் அப் என்று கடைசியில் தெரியும் போது கொஞ்சம் திருப்தி இல்லை.
HIDE AND SEEK(2005): ROBERT DE NIRO நடித்த படம். படத்தின் முடிவை யூகித்து விடலாம்.அதனால் படம் மொக்கைதான்.
OLD BOY(2003): கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத முடிவு.ரொம்ப அப் செட் ஆக்கிய படம். எனக்கு பிடித்த படங்களில் முக்கியமான இடம் உண்டு.இந்த படம் பற்றி ஏற்கனவே முழு விமர்சனம் எழுதி உள்ளேன்.லிங்க் : http://scenecreator.blogspot.in/2012/05/old-boy.html
IDENTITY(2003) : ஒரு மழை நாள்.இரவு .ஒரு தனிமையான  ஹைவே ஹோட்டல்.அங்கே மாட்டிக்கொண்டவர்கள் பத்து  பேர்.அடுத்தடுத்து மரணம்.முடிவு ட்விஸ்ட்.

THE PRESTIGE(2006): இரு மாஜிக் நிபுணர்கள் ,ஒருவரை ஒருவர் வீழ்த்த போராடும் படம். இந்த மாதிரி ட்விஸ்ட் அடிக்கும் படங்களின் ராஜா  நோலன் இயக்கிய படம் சொல்லவே வேண்டாம்.
DONNIE DARKO(2001): ஒரு வீட்டின் மீது விமானத்தின் ஒரு பகுதி விழுகிறது.அதில் தப்பிய ஒருவன் உலகம் அழியபோவதை நம்புகிறான்.முடிவில் அவனே இறந்து போய் விட்டதை சொல்கிறார்கள்.ரொம்ப மொக்கை.
DEAD SILENCE(2007): ஏற்கனவே இறந்து போனவனை வைத்து படம் முழுதும் உயிரோடு இருப்பதாய் போல் காட்டி இருப்பார்கள்.கொஞ்சம் அதிர்ச்சிதான்.
TRIANGLE(2009): படம் உங்களை உள்ளே இழுத்து விடும்.ஒரு கப்பல் பயணத்தில் அடுத்தடுத்து கொலைகள்.எப்பா என்ன த்ரில் .அருமையான படம்.
JACOBS LADDER(1990): தொன்னூறுகளில் வந்த படம்.இப்போது பார்த்தால் முடிவு  கொஞ்சம் யூகித்துவிடும்படி உள்ளது.காரணம் நிறைய அந்த வகை படங்கள்.

இந்த மாதிரி முடிக்கும் படங்கள் நிறைய உள்ளது.அதிலும் படம் முழுதும் நாம் ஒரு மன ஓட்டத்தில் பயணிக்கிறோம்.அப்படியே போய் கொண்டே இருக்கிறோம் .அதுவரை பார்த்து வந்த ஒரு விஷயம் முற்றிலும் அது அப்படி இல்லை. என்று சொல்லும் போது தான் இது போன்ற அதிர்ச்சி நமக்கு ஏற்படும்.நீங்கள் பார்த்த இந்த வகை படங்களை எனக்கு சொல்லுங்கள்.

Wednesday, 22 August 2012

என் ஆங்கில பட அனுபவங்கள் :


என் ஆங்கில பட அனுபவங்கள் : 


இன்று ஆங்கில படங்களை பார்ப்பது எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று.அதுவும் பரபரப்பான படங்கள் என்றால் ரொம்ப இஷ்டம்.பொதுவாக இந்தியர்கள்  என்று பார்த்தால் 2000 ஆண்டுக்கு பிறகே அதிகம் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.70 களில் ஆங்கில படங்கள் என்பது இந்தியாவில் எங்கோ ஒரு சில அரங்குகளில் மட்டுமே அதுவும் அமெரிக்காவில் வந்து பல மாதங்கள் கழித்து தான் இங்கே வரும்.அதற்கென்று சில குறிப்பிட்ட அரங்குகள் உண்டு.சென்னை எடுத்து கொண்டால் ஆனந்த் ,தேவி போன்ற திரை அரங்குகளில் ஆங்கில படங்கள் வரும்.புருஸ்  லீ நடித்த 'என்டர் தி டிராகன் ',OMEN ,THE EXORCIST போன்ற படங்கள் மாத கணக்கில் சென்னையில் ஓடி இருக்கின்றன.

அதன் பின் 80 களில் VCR வந்த பின் மெதுவாக ஆங்கில படம் பார்பவர்களின் எண்ணிக்கை கூடியது.அதுவும் எல்லா படங்களும் இந்தியாவில் கிடைக்காது.குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே .EVIL DEAD,TERMINATOR போன்ற ஹிட்டான படங்கள் மட்டுமே இங்கே கிடைக்கும்.பெரிய அளவிலான திருப்பம் என்பது 95 இல்  SPEED படம்.அதுவரை ஆங்கில படமே பார்க்காதவர்கள் கூட பார்க்க வைத்தது.இத்தனைக்கும் ஆங்கிலத்திலேயே வெளியானது.இருந்தும் நன்றாக ஓடியது.இதன் காரணமாக ஆங்கில படங்களுக்கு இந்தியாவில் ஒரு மார்க்கெட் கிடைத்தது.அதன் பின் முதலில் தமிழில் டப் செய்யப்பட்டு வந்தது ஜாக்கி சான் நடித்த SHANKAI NOON என்ற படம் ஷாங்காய் தளபதி என்ற பேரில் அடி வெளுத்து கட்டியது.அதன் பின் GODZILLA ,ANACONDAA, MUMMY ,DEEP BLUE SEA போன்ற படங்கள் டப் செய்யப்பட்டு நல்ல ஓட்டம் .அதனால்  பின் தங்கிய கிராமத்திலுள்ள டெண்ட் கொட்டைகளிலும் ஆங்கில ஹீரோக்கள் தமிழ் பேசினார்கள்.அங்கே பெரிய அளவில் ஓடாத VAN HEALSING,2012 போன்ற படங்கள் இங்கே சக்கை போடு போட்டன.இன்றும் SPIDERMAN படங்களுக்கு உலகிலேயே இந்தியாவில் தான் அதிக ரசிகர்கள் இருப்பதாக சமீபத்தில் படித்தேன்.

சரி என் விஷயத்திற்கு வருவோம்.1988 எனக்கு 9 வயது.அப்போது என் சித்தப்பா ஒருவர் VCR இல் EVIL DEAD படம் பார்த்தார்.டி.வியில் படம் என்பதே பெரிய விஷயமான அப்போது டேக்கில் படம்.அதுவும் ஆங்கில படம். அவர் நண்பர்கள் வேறு என்னையும் என்னுடன் இருந்த சிறுவர்களையும்  இது பேய் படம் .பயந்து விடுவீர்கள் என்று எச்சரித்தார்.இருந்தும் பயத்தோடு சில காட்சிகள் பார்த்தேன்.யாரும் இல்லாத ஒரு பாலம்.அதுவும் பாய் பாலம்.அதில் கார் போகிறது .நடுவில் பாய் கிழிந்து விடுகிறது.பயமுறுத்தும் வீடு.போதும் இனி தாங்காது என்று ஓடி விட்டேன்.அதன் பின்  ஆங்கில படம் என்றால் பேய் படம் ,ஜாக்கி சான் படம் இவை  மட்டும் தான் என்று நினைத்து விட்டேன்.அந்த நேரத்தில் ஆங்கில படம் பார்பவர்களை ஏதோ வேற்று கிரக வாசிகளை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.நானும் அப்படிதான் ஆங்கில படம் பார்பவர்களை பிரம்மிப்போடு பார்ப்பேன்.அதற்க்கு பின் ஆங்கில படங்கள் பார்க்க தொடங்கி விட்டேன் என்று சொல்ல முடியாது.

தொடரும் ,

Saturday, 18 August 2012

மாற்றான் -தாண்டவம் பாடல்கள் எப்படி ?

மாற்றான் -தாண்டவம் பாடல்கள்  எப்படி ? 


சூர்யா நடிக்கும் மாற்றான் ,விக்ரம் நடிக்கும் தாண்டவம் இரண்டு பட பாடல்களும் வெளி வந்துள்ளன .இரண்டையும் கேட்டேன்.இரண்டுமே ஒன்றும் இல்லை.அதிலும் மாற்றான் மிக மோசம்.சிலர் கேட்க்க கேட்க அவை  பிடிக்கும் என்று சொல்வதுண்டு.அதுவும் கேட்க்க ஆரம்பித்தவுடன் ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே போட்ட பல பாடல்கள் நினைவு படுத்துகின்றது.ஒரே அலுப்பு தான்.அட ச்சே என்றாகி விட்டது.ஏன் ஹாரிசை கட்டிக்கொண்டு அழுகிறார்கள் என்று தெரியவில்லை.அது சரி ஒரு நாயகன் ஒரு நாயகி பாடும் பாடலை ஏன் நான்கு ஐந்து பேர் பாடி உள்ளார்கள்.இந்த படம் என்றில்லை .சில காலமாக உள்ளது.

தாண்டவம் பட பாடல்களும் ஒன்று கூட நிற்கவில்லை.மிகவும் சிலாகித்து சொல்லப்பட்ட ஒரு பாதி கதவு நீயடி பாடல் அஜீத் நடித்த கிரீடம் படத்தின் அக்கம் பக்கம் பாடலை அப்படியே நினைவு படுத்துகிறது.இருந்தாலும் மாற்றான் பாடல்கள் ஹிட் ஆகிவிடும் என்று தோன்றுகிறது.காரணம் நம் எப்.எம் கள் .ஏற்கனவே தினமும் ஒலிபரப்ப தொடங்கி விட்டது.தற்போதைய ஹிட் ஹீரோ சூர்யா,ஹாரிஸ் என்றால் விட்டு விடுவார்களா? நான் படத்தில் தப்பெல்லாம் தப்பேயில்லை பாடல் நன்றாக உள்ளது.நான் மிகவும் எதிர்பார்ப்பது இளையராஜா,கவுதம் கூட்டணியில் வெளிவர  உள்ள "நீதானே என் பொன் வசந்தம்" பட பாடல்கள் தான்.படம் எப்படியும் விண்ணை தாண்டி வருவாயா போல் போர் அடிக்கும் .பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.