Pages

Thursday, 25 October 2012

பிட்சா : பார்த்தே தீர வேண்டிய த்ரில் படம்


பிட்சா : பார்த்தே தீர வேண்டிய த்ரில் படம் 



தமிழில் திகில் த்ரில்லர் படங்கள் ரொம்ப குறைவு.விரல் விட்டு எண்ணி விடலாம்.பெரும்பாலும் ஆங்கில படங்களின் தழுவல் படங்களே அதிகம்.அதே கண்கள் ,யாவரும் நலம் போன்ற மிக சில படங்களே சொந்த சரக்காக வந்த படங்கள்.நான் கொஞ்சம் எதிர்பார்த்த அம்புலி கூட முழுதும் எனக்கு திருப்தி தரவில்லை.இந்த நிலையில் பிட்சா படம் ஒரு த்ரில்லர் படம் என்று கேள்வி பட்டேன்.இருந்தாலும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தேன்.ட்ரைலர் கவனிக்கும்படி இருந்தாலும் அதை நம்பி இப்போதெல்லாம் படம் பார்க்க முடிவதில்லை.படம் வந்த அடுத்த நாள் பார்த்த எல்லோரும் படம் சூப்பர் என்று சொல்ல அதுவும் படித்த ப்ளாக் எல்லாம் கதையை சொல்லாமல் விட்டதால் படம் பார்க்கும் ஆவல் கூடி விட்டது.ஒரு வழியாக பார்த்துவிட்டேன்.

சமீப காலங்களில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும்.சும்மா மிரட்டி இருக்கிறார்கள்.நானும் கதை சொல்ல போவதில்லை.என்ன விஷயம் என்றால் மற்ற த்ரில்லர் படம் என்றால் ஒரு விஷயத்தை சொல்லி இறுதியில் என்ன நடக்கிறது என்பதை சொல்லாமல் விட்டால் போதும்.ஆனால் இந்த படம் கதை என்று ஆரம்பித்தால் படத்தின் ஆச்சர்யம் போய்விடும்.

படம் மெதுவாக கொஞ்சம் சோம்பலாகதான் தொடங்குகிறது.ஆனால் ஹீரோ தன் முதலாளி வீட்டிற்கு சென்றதும் அங்கே சூடு பிடிகிறது.அதோடு படம் முடியும் வரை உங்களை அடுத்து என்ன என்று யோசிக்க செய்துகொண்டே இருக்கும்.சில படங்கள் இடைவேளை எப்படா வரும் என்று இருக்கும்.இந்த படத்தில் இடைவேளை விட்டதும் அடச்சே என்று திட்டிகொண்டேன்.இடைவேளை நேரத்தில் கூட படத்தில் இருந்து கவனம் போகவில்லை.

படத்தில் பணி புரிந்த எல்லோருக்கும் இந்த படம் ஒரு லைப்.அசத்தி  இருக்கிறார்கள்.கேமரா ,இசை சூப்பர்.இயக்குனர் கார்த்திக் இதுவரை யாரிடமும் உதவியாளரை இருந்ததில்லை.குறும்படங்களில் கவனம் பெற்று அதை சினிமாவாகவும் செய்து காட்டி இருக்கிறார்.ஒரு வெல்கம் .

பேய்களை நம்பாத ஹீரோ .அவனை பயமுறுத்த நாயகி செய்யும் வேலைகள் தான் படம் இறுதியில் எல்லாம் நாடகம் .WAIT WAIT. .இது ட்ரைலர் பார்த்து நான் நினைத்த கதை. உண்மையில் நாயகி என்று ஒருவள் இல்லை.நாயகன் மன அளவில் பாதிக்க பட்டவன் .அவனின் பேய் கற்பனையே படம்.இது படம் ஓடி கொண்டிருக்கும் போது என் மனதில் வந்த கதை. மேல் சொன்ன எதாவது ஒன்றை நீங்கள் படத்தின் கதையாக நினைத்திருந்தால் அதை மறந்திருங்கள்.

                     படத்தை பற்றிய ஒரு சின்ன TAGLINE: ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னெஸ் .பணம்,பெண் பேய் ,கடவுள் இப்படி.

இது படத்தின் சஸ்பென்சை உடைக்காது என்று நினைக்கிறன்.படத்தை மினி உதயம் அரங்கில் பார்த்தேன்.படம் HOUSEFULL . நான் ப்ளாக்கில் 70 ருபாய் டிக்கெட்டை 130 கொடுத்து வாங்கி பார்த்தேன்.படம் முடிந்து வரும் போது இந்த படத்தை போய்  ப்ளாக்கில் பார்த்தோமே என்று கொஞ்சமும் இல்லை.நம் ரசிகர்கள் தமிழில் த்ரில் படம் பார்த்து பழக்கம் இல்லாததால்,அரங்கில் வெறுப்பேற்றி விட்டார்கள்.கூட கூட கமெண்ட்.படத்தின் ஆரம்ப காட்சி கருப்பு வெள்ளையில் ஒலி குறைவாக நடக்கும்.அதை கேட்கவிடாமல் ரொம்பவும் கடுப்பேற்றி விட்டார்கள்.இருந்தாலும் படத்தை ரசிக்கிறார்கள்.இது போல் இன்னும் நிறைய படங்கள் தமிழில் வர வேண்டும்.எனக்கு த்ரில் படங்கள் பிடிக்கும் என்பது தெரிந்திருக்கும்.

Tuesday, 23 October 2012

கமலஹாசன் எழுதிய "நாயகன்" திரைப்பட நினைவுகள்


கமலஹாசன்  எழுதிய "நாயகன்" திரைப்பட  நினைவுகள்  


தமிழ் சினிமாவில் நாயகன் தவிர்க்க முடியாத படம்.அந்த படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.அதன் பொருட்டு அந்த பட அனுபவங்களை  நடிகர் கமல்ஹாசன் 'தி ஹிந்து ' ஆங்கில தினசரியில் அக்டோபர் 21 ஞாயிறு ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அதன் தமிழாக்கம்..

நாயகன் படம்  டைம் இதழின் சிறந்த 100 படங்களுள் ஒன்றாக தேர்வு செய்யபட்டதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.ஒரு வித்யாசமான படம் எடுக்க நினைத்தோம் அவ்வளவுதான்.அதிகம் படிக்காததால் நான் எப்போதும் எழுத்தாளர்களும் ,சிந்தனையாளர்களும் சூழ இருப்பேன்.அப்படி சந்தித்த ஒரு நண்பர் தான் சுப்பு என்கிற சுப்ரமணியம்.பின்னர் மணிரத்னம் ஆனார்.எனக்கு நடிகர் கிட்டி மூலம் அறிமுகம் ஆனவர் தான் மணிரத்னம்.கிட்டி அப்போது சோழா செர்டான்  ஹோட்டலில் மேலாளராக இருந்தார்.நாங்கள் அவரை அப்போது சோழா கிருஷ்ணமூர்த்தி என்று அழைப்போம்.மணி அப்போதும் அமைதி ஆனவர் தான்.நாயகன் தொடங்கப்பட்ட பின் தான் மணி "வீனஸ் " pictures  ரத்னம் அவர்களின் மகன் என்பதே.அதுவரை அவர் தன்னை வெளிபடுதிக்கொண்டதே இல்லை.எனக்கு அதுவரை அவரை பைனான்சியர் ஜி.வி.அவர்களின் சகோதரர் என்றே தெரியும்.

அப்போது நான் ராஜபார்வை எழுதிக்கொண்டிருந்த நேரம்.1980.மணி திரை கதை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார்.JOSEPH HAYES  எழுதிய THE LONG DARK NIGHT நாவலை  விரும்பி படித்தார்.அது போல் ஒரு கதை எழுத விரும்பினார்.நாங்கள் பல கதைகளை விவாதித்தோம்.நாங்கள் FRANSIS FORD COPPOLA வின்  THE GODFATHER பட ரசிகர்கள்.எத்தனை நாள்  தான் தமிழ் பட மறை உலக வில்லன்கள்  கட்டம் போட்ட சட்டையும் கழுத்தில் கை குட்டையை கட்டிக்கொண்டும் வீரப்பா  போல் சிறிது கொண்டும் இருப்பார்கள் என்று நாங்கள் கேட்டு கொள்வோம்.

அப்போது மணி தனது முதல் படத்தை (பல்லவி அனுபல்லவி)கன்னடத்தில் இயக்குவதாக சொன்னார்.நான் ராஜபார்வையில் பிசியாக இருந்தேன்.அந்த நேரம் ஹிந்தி படங்களில் வேறு நடிக்க துவங்கி இருந்தேன்.அதனால் நானும் மணியும் சேர முடிய வில்லை.ஆனால் நேரம் கிடைத்தால் பேசுவோம்.1986 இல் விக்ரம் படம் முடிந்த பின் அந்த படம் மணிரத்னம் இயக்கி இருக்க வேண்டிய படம் என்று எனக்கு தோன்றியது.IT WAS HIS CUP OF TEA.பட தோல்விக்கு பின் என்ன ஆனது என்று என்று என்னை கேட்டார் மணி.ஏன் என்றால் விக்ரம் பட கதை நான் முன்பே அவரிடம் கூறி இருந்தேன்.அதற்கும் படத்திற்கு நிறைய மாற்றம்."கமல் ,சுஜாதா இருவரின் அறிவும் கோடம்பாக்கத்தில் கரைந்துவிட்டதாக பதில் சொல்லி "இது உங்களுக்கும் நேரலாம் என்றும் சொன்னேன்.

சில மாதங்களுக்கு பின் தயாரிப்பாளர்  முக்தா ஸ்ரீனிவாசன் (அவர் தயாரிப்பு இயக்கத்தில் சிம்லா ஸ்பெஷல் படம் ஏற்கனவே நடித்துள்ளேன்) என்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தார்.நான் மணிரத்னம் பெயரை இயக்குனராக சொன்னேன்.அவருக்கு ஆச்சர்யம் காரணம் வழக்கமாக கதாநாயகியை தான் ஹீரோக்கள்  பரிந்துரைப்பார்கள்.நான் ஒரு இயக்குனரை  பரிந்துரைத்தேன்.மணி இரு கதைகளை எனக்கு சொன்னார் ஒரு கதை GANGSTER கதை.பம்பாய் களமாக  கொண்டு நடக்கும் கதை என்றும் சொன்னார்.நான் அந்த கதை தேர்வு செய்தேன் காரணம் பம்பாய் தளம் என்றால் தேசிய அளவில் கவனிக்கபடும் என்று நினைத்தேன்.ஆனால் முக்தா பிலிம்ஸ் சிறிய பட்ஜெட்  படம் எடுத்து பழக்கப்பட்ட நிறுவனம்.தயாரிப்பாளர் பம்பாய் என்றவுடன் மறுத்தார். என் நடிப்பில் ஒரு படம் அவருக்கு  ஒரு 5 லட்சம் லாபம் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்.அவர் அதுவரை அப்படிதான் படங்கள் எடுத்து வந்தார்.கலையாக கருதாமல் படம் வியாபாரம் மட்டுமே என்று நினைத்துவிட்டார்.நாங்கள் படம் முழுதும் பம்பாயில் எடுக்க போவதில்லை.சில முக்கிய காட்சிகள் மட்டுமே ,என்று சொன்னதும் அரை மனதுடன் சம்மதித்தார்.

பின் நாங்கள் ACTION காட்சிகள் உலக தரத்தில் எடுக்க முடிவு செய்தோம்.அதற்கென பட்ஜெட்டில் 12 லட்சம்  ஒதுக்கினோம் .அதுவரை தமிழ் சினிமாவில் அப்படி ஒதுக்கியது கிடையாது.  JIM ALLEN என்பவரை இங்கிலாந்தில் இருந்து வரவழைத்தோம்.அவர் அதற்கு முன் ஷோலே போன்ற இந்திய படங்களில் பணி புரிந்துள்ளார்.அனால் தயாரிப்பாளர் அவரை 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த சம்மதித்தார்."இதற்கெல்லாம் இப்படி செலவு செய்ய கூடாது,ஹிந்தி சினிமா உன்னை கெடுத்து விட்டது என்று என்னிடம் சொன்னார்.அந்த 3 நாட்களில் அவர் கொடுத்த ஐடியாக்களை குறிப்பெடுத்துகொண்டு அவற்றை பயன்படுத்தினோம்.கார் முன்புற கண்ணாடியில் இரும்புக்கம்பி சொருகி சண்டை காட்சி எடுக்க திட்டமிட்டோம் .அனால் தயாரிப்பளர் காரை நிஜமாக சேதபடுத்த ஒத்துக்கொள்ளவில்லை.பின்னாளில் தேவர் மகன் படத்தில் அதை பயன் படுத்தி கொண்டேன்.படத்தில் மேக்கப் செய்ய தனி பட்ஜெட் கிடையாது.என் மேக்கப் குரு MICHAEL WESTMORE அவர்களிடம் பேசினேன்.அதற்குமுன் "ஒரு கைதியின் டைரி " படத்திற்காக அவரோடு பணிபுரிந்துள்ளேன்.ஒரு உதவியாளர் மட்டும்' கொண்டு நாமே கண்ணாடி முன் ஒப்பனை செய்து கொள்ள அவரிடம் பயிற்சி பெற்று இருந்தேன்.அப்போது  சரிகா உதவியுடன் நானே மேக்கப் போட்டுக்கொண்டேன்.நான் ஏற்கனவே வயதான வேடத்தில் நடித்துள்ள கடல் மீன்கள்,சலங்கை ஒலி போன்ற படங்களை பார்த்துள்ள மணிரத்னம் ,அந்த படங்கள் போல விக் வைக்காமல் நிஜமாகவே தலை முடியை அட்ஜஸ்ட் செய்ய விரும்பினார்.நானும் படத்தை காட்சி வரிசைப்படி எடுத்தால் அதை செய்யலாம் என்று சொன்னேன்.படத்தில் தெரியும் வழுக்கை உண்மையாக என் முடியை அப்படி சீர் செய்யப்பட்டது.அது மட்டும் போதாது என்று ஒரு பல் மருத்துவரை கொண்டு வாயில் ஒரு பொருளை வைத்து முகவாய் ,தாடைகள் அகலமாக தெரியும்படி செய்தோம் .

நாங்கள் ஒரு பெரிய விஷயத்தை,புதிதாய் செய்கிறோம் என்று உணர்ந்தோம்.நான்,மணி,பி.சி .ஸ்ரீராம்,தோட்டாதரணி ஒரு குழுவாக கால்ஷீட் எல்லாம் பார்க்காமல் உழைத்தோம்.முழுதும் பம்பாயில் எடுக்க முடியாததால் வெளிகாட்சிகள் மட்டும் அங்கே போய்  எடுத்தோம்.படம் நன்றாக வளர்ந்து வந்தது.ஒரு நாள் ,வேலு நாயகரின் மகன் இறந்து விட்ட காட்சி.நாங்கள் அந்த காட்சியை ஒத்திகை பார்த்தோம்.நான் இந்த காட்சியில் கொஞ்சம் பில்ட்அப்  இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்,அதாவது மற்றவர்கள் முதலில் அழுது கொண்டிருப்பது போலும் அங்கே வரும் வேலு நாயக்கர் எல்லோரிடமும் என்ன என்று விசாரித்தவாறு வந்து மகனின் பிணத்தை பார்த்தால்  நன்றாக இருக்கும் என்று மணியிடம் சொல்ல அவரும்  ஒப்புக்கொண்டார்.நான் அந்த காட்சிக்கு தயாராகி வந்த போது மணி,ஸ்ரீராம் இருவரும் வருத்தமாக இருந்தார்கள்.விசாரித்த போது  தயாரிப்பாளர் அன்றைய பிலிம் கோட்டா முடிந்து விட்டதென்றும் அடுத்து பிலிம் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று சொன்னார்.அந்த நாளில் பிலிம்  வேஸ்ட் ஆவதை குறைக்க அப்படி செய்வது தான் பழக்கம்.என்னால் தாங்க முடியாமல் என் அலுவலகத்திற்கு போன் செய்து 20 நிமிடத்தில் பிலிம் வரவைத்தேன்,அந்த 20 நிமிடத்தில் நான் அழ ஆயத்தமானேன்.உண்மையில் அந்த சூழ்நிலை என் குழந்தை இறந்த மன நிலையை உருவாக்கியது.அந்த காட்சியில் சிறப்பான நடிப்பிற்கு தயாரிப்பாளரின் பங்கும் உண்டு.அதற்காக அவர் ரொம்ப கொடியவர் என்று சொல்ல வர வில்லை.அவர் அந்த காலங்களில் அதுபோல் பழக்கபட்டிருந்தார்.
மணிரத்னதிற்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை.அந்த நேரத்தில் நானும் ரொம்ப களைப்பு அடைந்திருந்தேன்.படம் முடியவேண்டும் என்று நினைத்தேன்.நாங்கள் பம்பாய் சென்றிருந்தபோது வரதராஜ முதலியாரை(அவர் வாழ்கையை சித்தரிதே நாயகன்  படம் உருவானது) சந்தித்து உரையாடினோம்.அவரிடம் மணி உங்கள் வாழ்கை எப்படி முடிய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.அமைதியாக மருத்துவமனையில் அது நடக்க விரும்புகிறேன் என்று பதில் சொன்னார்(பின்னாளில் அப்படியே இறந்தார் ).போலீஸ் சாட்சி இல்லாததால் அவரை விடுதலை செய்யும்.அதன் பின் வேலு நாயக்கரை யாரோ அடித்துவிட அதனால் ஏற்படும் கலவரத்தை பயன்படுத்தி போலீஸ் அவரை சுட்டுகொல்வதாக மணி முடிக்க விரும்பினார்.

ஹோலி பாடலில் நான் மணியிடம் வேலுநாயக்கர் ஆடமாட்டார் என்று சொன்னேன்.அவரும் ஒப்புகொண்டார்.அந்த காலங்களில் நான் நடனம் ஆடாததை ஒப்புக்கொள்ள எந்த இயக்குனரும் சம்மதிக்க மாட்டார்கள் .சிகப்பு ரோஜாக்கள் எடுக்கும் போது பாரதிராஜாவிடம் கூட நான் அந்த பட நாயகன் ஒரு சைக்கோ கொலைகாரன்.அவன் நடனம் ஆடினால் சரிவராது என்று சொல்லிப்பார்த்தேன்.அவர் இது நாயகி கனவுப்பாடல்(நினைவோ ஒரு பறவை) என்று நான் சொன்னதை மறுத்துவிட்டார்.மணி ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி.இப்படி பல தடைகளை தாண்டி எடுத்து முடிக்கப்பட்டது படம்.நான் சிரித்தால் தீபாவளி பாடலில் நான் பார்த்த ஒரு பார்வை ரொம்பவும் அன்னியமாக தோன்றியதாகவும் நம் இந்திய முறையில் நடிப்பை வெளிப்படுத்துமாறும் என்னை கேட்டுக்கொண்டார்.இப்படி சின்ன விஷயங்களிலும் ரொம்பவும் கவனித்து  சொன்னதால் என்னால் அந்த நடிப்பை தரமுடிந்தது.நாயகன்  படம் என்னை இனி மசாலா வணிக படங்களில் நடிக்க கூடாது என்ற முடிவை எடுக்க வைத்தது.நான் நடு  வயதை அடைந்திருந்தேன் .இனி இப்படி பட்ட வேடங்களில் நடிக்காமல் இன்னும் எப்போது நடிப்பது என்று எனக்குள் கேட்டு கொண்டேன்.படம் முடிந்தவுடன் அந்த செட் கலைக்கபட்டவுடன் சரிகாவுடன் திருப்தியாக பேசிக்கொண்டே நடத்து இன்னும் நினைவில் உள்ளது.

படம் சவேராவில் சிறப்பு காட்சி பார்த்தோம்.ஒருவர் படம் முடிந்து தயாரிப்பாளர் காலில் விழுந்து அழுதார்.நான் தயாரிப்பாளரிடம் இந்த படத்திற்கு விருதுகள் வாங்குவீர்கள் என்று சொன்னேன்.அதற்க்கு அவர் லாபம் பார்க்கவே படம் எடுத்ததாகவும் ஆனால் படத்தின் புதிய தொழில்நுட்ப விஷங்கள் மக்கள் ஏற்பார்களா என்று பயந்தார்.அவர் லாபம் அடையாத படத்தை நான் அவருக்கு பரிந்துரை செய்ததாக  வருத்தப்பட்டார் .அவரிடம் இருந்து அந்த படத்தை வாங்கி கொள்ள கூட நினைத்தேன்.பின்னர் ஜி.வி வாங்கி வெளியிட்டார்.படம் வெளிவந்து ஹிட் ஆனது.அதன் பின் அது ஸ்டைல் ஆனது.ஹீரோக்கள்  ஜெல் வைத்து அழுத்தி தலை வாருவதை ஆரம்பித்தனர்.படத்தின் வெள்ளி விழா நேரத்தில் தயாரிப்பாளரின் சகோதரர் இறந்துவிட்டார்.எங்கள் மொத்த  பட குழுவும் அவர் வீட்டிற்கு போய் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்.அதனால் தயாரிப்பாளரோடு எந்த பிரச்னையும் இல்லை.அவர் எங்களை இன்னும் சுதந்திரமாக படம் எடுக்க விட்டிருந்தால் மணி இன்னும் சிறப்பாக எடுத்திருப்பார். பின்னாளில் அவருக்கு இதய நோயும் இன்னும் காலம் கழித்து வந்திருக்கும்.என்னிடம் பலர் கேட்க்கும் கேள்வி மணிரத்னத்தோடு மீண்டும் படம் எப்போது? இப்போது ரொம்பவும் எதிர்பார்ப்பு உள்ளது .

Sunday, 21 October 2012

BHOOT RETURNS -ஹிந்தி திகில் பட விமர்சனம் ---சரக்கு தீர்ந்து போன ராம் கோபால் வர்மா.

BHOOT RETURNS -ஹிந்தி திகில் பட விமர்சனம் ---சரக்கு தீர்ந்து போன ராம் கோபால் வர்மா.


ராம் கோபால் வர்மா .ரங்கீலா படம் மூலம் அசத்தலாக ஹிந்தியில் நுழைந்து சத்யா,கம்பெனி ,சர்கார் போன்ற பல புதுமையான படங்களை தந்து வழக்கமான மூன்றை மணி நேர குடும்ப ஹிந்தி பட பார்முலாவை தகர்த்து பல தளங்களில் ,பல உண்மை சம்பவங்களை ,பல நிஜ கதா பாத்திரங்களை தன்  படங்களில் உலாவ விட்டு கலக்கி கொண்டிருந்தவர். அமிதாப் சில வருட இறக்கங்களுக்கு பின் வெற்றி பெற துவங்கிய பின் மீண்டும் சர்கார் படம் மூலம் மாஸ்  சேர்த்தவர்.


இப்படி தான் இவர் படம் இருக்கும் என்று கணிக்க முடியாதபடி படம் எடுப்பவர்.படம் எடுப்பது குடிசை தொழில் போல என்று டிஜிட்டல் கேமரா ,ஒரு ஐந்து பேர் பணம் போடுவது என்று நடிகர்களுக்காக காத்திராமல் கிடைத்தவர்களை கொண்டு படம் எடுத்து பேச வைத்தவர்.மேலும் தென் இந்திய தெலுங்கு ,கன்னட ,தமிழ் நடிகர்களை தன ஹிந்தி படங்களிலும் பயன் படுத்தி அவர்களுக்கும் அங்கே ஒரு முகவரி தந்தவர்.தன்  வெளிபடையான பேச்சு ,நடிகர்களை பற்றிய விமர்சனம்,குடும்ப உறவுகள் பற்றி தன் எண்ணம் என்று எதற்கும் அஞ்சாமல் தான்  நினைத்ததை சொல்பவர்.ஹிந்தி சினிமாவில் செல்லமாக "ராமு ".

சில வருடங்களுக்கு முன் 'பூத் ' என்று ஒரு பேய் படம் எடுத்தார்.ஹிட் ஆன படம்.அதை தமிழில் நம்ம பிரசாந்த் "ஷாக் " என்று ரீமேக் செய்தார்.இப்போது ராமுவுக்கு தொட்டதெல்லாம் காலி ஆகும் நேரம்.வரிசையாய் அடி.இருந்தாலும் சராமரியாக படம் எடுத்து தள்ளி கொண்டிருக்கிறார்.அந்த படங்கள் ஓடுவதும் இல்லை.கடைசியாக அவர் படம் எது ஹிட் என்று அவருக்கே மறந்து போய் இருக்கும்.இப்போது அவருக்கு ஹிட் தேவை.என்ன செய்வது என்று யோசித்தவர்,தன்  ஹிட் படமான பூத் படத்தின் இரண்டாம் பாகம் என்று எடுத்துள்ளார்.ஏதாவது ஒரு கன்றாவியை எடுத்து அதற்க்கு எப்போதோ ஓடிய தன்  ஹிட் படத்தின் பேரை போட்டால் கல்லா நிரம்பிவிடும் என்று நினைத்து விட்டார்.(இங்கே நம் பில்லா 2 உங்களுக்கு நினைவுக்கு வரணும் ).

ஒரு பேய் வீடு .
அங்கே வரும் குடும்பம்.
அவர்கள் குழந்தை கண்ணுக்கு மட்டும் தெரியும் பேய்.
அதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபரீதங்கள்.
இறுதியில் முடிக்க கூடாது அந்த பேய் எங்கோ மீண்டும் செல்வது போல் முடிக்க வேண்டும் .
ஒரு பேய் படம் ரெடி.

கொஞ்சமும் மாறாமல் அதே கதை தான்.என்ன கொஞ்சம் இந்திய சினிமாவிற்கு புதிதாய் cctv  அந்த வீட்டில் இணைத்து பேய் உலாவுவதை காட்டுகிறார்கள்.
நான்கே நடிகர்கள்.இரண்டு குழந்தைகள்,ஒரு பொம்மை .படத்தில் நிறைய நேரம் யாரவது ஏதாவது சத்தம்  கேட்டு வீட்டில் இருட்டில் உலாவுகிறார்கள்.தேவைக்கு அதிகமாய் சவுண்ட்என்ஜினியர் சத்தம்  கொடுத்துள்ளார்.ஒரே ஆறுதல் பாடல் ,காதல் என்று எதுவும் இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் படத்தை முடித்தது .ராம் கோபால் வர்மாவிடம் சரக்கு தீர்ந்து விட்டது (நம்ம மணிரத்னம் போல ) என்று நினைக்க தோன்றுகிறது  .