Pages

Thursday 28 November 2013

பதிவர்களின் பொதுவான குணங்கள் என்ன?

பதிவர்களின் பொதுவான  குணங்கள் என்ன? 



தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவனுக்கு ஓர் குணம் உண்டு என்று எப்போதோ யாரோ சொன்னதாக பாடத்தில் படித்திருக்கிறேன்.அது போல் பதிவர்கள் என்றால் பெருவாரியானவர்கள் செய்வது என்ன .அவர்கள் பகிர்வது என்ன (கவனிக்க பெருவாரியானவர்கள்).நீங்கள் நிறைய பதிவுகள் படிப்பவர் என்றால் இவற்றை  உணரலாம்.இது யாரையும் சிறுமை படுத்த அல்ல.பதிவுலக பெரிசுகள் தனிப்பட்ட முறையில் கருத வேண்டாம்.

பொதுவாக பதிவர்கள் பகிர்வது என்ன? 

யாருமே பார்க்காத படங்களுக்கு போவது (முக்கியமாய் பவர் ஸ்டார் ,ராஜகுமாரன் படங்கள் ).அங்கே நேரும் அனுபவங்களை எழுதுவது.

படம் பார்த்த அரங்கம்,டிக்கெட் விலை பாப்கார்ன் சாப்பிட்டது உட்பட கழிப்பறை சரியில்லை என்பதுவரை அனுபவங்களை பகிர்தல் .

பட விமர்சனங்களில் விகடன் ஸ்டைலில் மார்க் போடுவது அல்லது IMDB ஸ்டைலில் ரேடிங் கொடுப்பது.

புதிதாக ஏதாவது வந்தால் அதை அனுபவித்து எழுதுவது.உதாரணமாக  அம்மா உணவகம்,சின்ன பஸ்

10 நாளா பதிவு பக்கம் வரமுடியல என்று தன் பிஸி timing பற்றி அளப்பது.

வாரத்தில் ஒரு நாள் ஸ்பெஷல் பதிவு.அந்த வாரத்திலோ நடந்தது  பற்றி ஏழுதுவது ,தலைப்பில் உணவு பெயர் அல்லது கலப்படமான உணவின் பெயர்.அதில் பிடித்த பாடலின் வீடியோ பகிர்வும்  உண்டு.

விஜயை கலாய்ப்பது .ஆனால் தலைப்பில் விஜய் பெயர் போட்டு ஹிட்ஸ் பார்ப்பது.

சுஜாதவை புகழ்வது.சாருவை வாருவது

இளையாராஜா பாடல்களை ரசிப்பது.என்ன பாட்டுடா என்று சிலாகிப்பது.
 .
பயண கட்டுரை எழதுவது.பயணத்தை பிளான் பண்ணியது முதல் அங்கே சரக்கடித்து மட்டையாகியது மேற்கொண்டு வீடு வந்து சேர்ந்ததுவரை விலாவரியாக பார்ட் பார்ட்டாக எழுதுவது.நடுவில் போட்டோ பகிர்வும் உண்டு.

நேற்று டிவியில் இந்த படம்/அல்லது பாடல்  போய் கொண்டிருந்தது என்று தொடங்கி அந்த படம் தொடர்பான அல்லது அந்த படம்/பாடல் தன வாழ்வில் சம்பந்த பட்ட நிகழ்வுகளை பகிர்தல்.

டிவி நிகழ்சிகள் பற்றி முக்கியமாய் நீயா நானா பற்றி அவ்வபோது கதைப்பது.

வங்கி,திரை அரங்கம்,customer care அல்லது போலீஸ் போன்றவற்றுடன் அநியாயத்தை சந்தித்து பொங்கி எழுந்தது பற்றி பகிர்தல்.

தமிழ்மணம் சரியில்லை .அக்கிரமம் நடக்கிறது என்று புலம்புவது.

10000 ஹிட்ஸ் வழங்கியதற்கு நன்றி .100 வது பதிவு வரை நான் வந்ததற்கு நன்றி என்று நெஞ்சை நக்குவது.

வருட இறுதியில் அந்த வருடத்தில் பிடித்த/பிடிக்காத படங்களின் பட்டியல் தருவது.

இறுதியில் முக்கியமானது 

பெருவாரியானவர்கள் ரசிக்கும் படத்தை சரியில்லை என்பது அல்லது எல்லோரும் கழுவி ஊதும் படத்தை எனக்கு பிடித்திருந்தது என்பதுடன் இந்த  படத்தை நாம் கொண்டாடாவிட்டால் தமிழ் சினிமாவே கதியற்று போய் விடும் என்று வருத்தபடுவது .

உலக படங்களை பற்றி எழுதாத பதிவர்களா? 


பதிவுலகில் இருக்கும் எல்லோருமே இவற்றை கடந்து தான் வந்திருப்போம்.மேலும் ஏதாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் சேர்த்துவிடலாம்.

13 comments:

  1. விமர்சனங்களில் சினிமாவையே கண்டுபிடித்தது போல எழுதுவார்கள், திரைகதை எழுதுவதில் மேதைகள் போன்று எழுதுவார்கள்.

    ReplyDelete
  2. // பெருவாரியானவர்கள் ரசிக்கும் படத்தை சரியில்லை என்பது அல்லது எல்லோரும் கழுவி ஊதும் படத்தை எனக்கு பிடித்திருந்தது என்பதுடன் இந்த படத்தை நாம் கொண்டாடாவிட்டால் தமிழ் சினிமாவே கதியற்று போய் விடும் என்று வருத்தபடுவது .// We can see this in 6/10 bloggers ..

    And you almost covered... in some blogs they will write about "Hollywood movies and its copy cats" and instead of original movie producers... they will fight for copyrights..

    ReplyDelete
  3. ஓ அப்படியா சகோ? :))))))

    ReplyDelete
  4. வணக்கம்
    அருமையாக சொன்னிர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. //10 நாளா பதிவு பக்கம் வரமுடியல என்று தன் பிஸி timing பற்றி அளப்பது.//

    இந்த விஷயத்த நானும் பண்ணியிருக்கேன் :) :)

    ReplyDelete
  6. ஹி...ஹி இதெல்லாம் பிராபல்யப்பதிவர்கள் எனமனப்பிராந்திக்கொண்டவர்களின் கல்யாணக்குணங்கள் மட்டுமே அவ்வ்.

    ReplyDelete
  7. இதெல்லாம் செய்யலேன்னா பிரபல பதிவர்னு மதிக்க மாட்டாங்க..... ஹிஹி...

    ReplyDelete
  8. இதைவச்சே எப்படியோ நீங்க ஒரு பதிவு தேத்திட்டீங்க..

    ReplyDelete
  9. இப்படி எல்லாம் டகுல் பாஸ் விட்டா தான் பயலுக மிரள்வாங்கே .

    ReplyDelete
  10. நானும் பிரபல பதிவராகனும். அதனால, இதெல்லாம் நோட் பண்ணிக்குட்டேன்

    ReplyDelete
  11. தங்களின் கணிப்பு மிகச் சரி ,இதெல்லாம் இல்லாத பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன் !
    த.ம 2

    ReplyDelete
  12. தமிழ் யுனிகோட் கண்டுபிடிச்சான் பாரு, அவன சொல்லணும்.. அதுமட்டும் இல்லனா இந்த தொல்லையே இருந்திருக்காது...

    ReplyDelete