Pages

Wednesday 26 December 2012

COOL HAND LUKE (1967) --ஆங்கில சிறை படம்


COOL HAND LUKE (1967) --ஆங்கில சிறை படம் :



உலகில் சிறை வாழ்கையை சொல்லும் படங்கள் தனி ரகம் .நான் பார்த்தவற்றில் THE SHAWSHANK REDEMPTION,PAPILLON,ESCAPE FROM ALCATRAZ,FELON போன்ற படங்கள் குறிபிடத்தக்கவை.THE GREEN MILE படமும் நல்ல படம் என்று கேள்விபட்டுள்ளேன்.நான் நம்பி ஏமாந்த படம் THE GREAT ESCAPE.இந்த படம் COOL HAND LUKE முதலில் நாவலாக வந்து பின் திரை படமாக்க பட்டது.PAUL NEWMAN கதையின் நாயகன்.


கடும் விதிமுறைகளுடன் இருக்கும் ஒரு சிறையில் புதிதாக வரும் கைதி அந்த விதிகளுக்கு அடங்க மறுத்து,எல்லோரும் அஞ்சும் தண்டனைகளை ஏளனம் செய்தபடி அவற்றை ஏற்கிறான்.இதனால் மற்ற கைதிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்து விடுகிறான்.இரண்டு மூன்று முறை தப்பிக்க முயற்சித்து மாட்டிகொள்கிறான்.அடுத்த முறை தப்பித்து மாட்டினால் சுட்டு விடுவோம் என்று எச்சரித்தும் தப்பிக்கிறான்.மாட்டி கொள்கிறானா? 


ப்ளோரிடாவில் தனிமை பாலைவனத்தில் ஒரு சிறை.கடும் விதிமுறைகள்.மீறுவோர் தனிமை அறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கபடுவர்.சிறு குற்றம் புரிந்து உள்ளே வரும் நாயகன் லூக் .அங்கே உள்ள கைதிகள் அந்த சிறையை அடுத்த உள்ள ஒரு இடத்தில பாதை அமைக்கும் பணிக்கு கூட்டி செல்ல படுகிறார்கள்  .அங்கு வெய்யிலின் கொடுமை தாங்கமால் பலர் சுருண்டு  விழுகிறார்கள்.அந்த சிறையில் ஏற்கனவே ஒருவன் அவர்களுள் தலை போல இருப்பவன்.அவன் முதலில் லூக்குடன் மோதி பின் நண்பன் ஆகிறான்.

அந்த சிறையின் எந்த விதிக்கும் அடங்க மறுக்கும் லூக் அதற்கான தண்டனைகள் பெறுகிறான்.அந்த தண்டனைகளுக்கு மற்றவர்கள் அஞ்சும் நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் லூக் மற்ற கைதிகளின் அன்பை பெறுகிறான்.ஒரு முறை 50 முட்டைகளை 1 மணி நேரத்தில் சாப்பிட  பந்தயம் கட்டி வென்று அவனால் முடியாதது எதுவும் இல்லை என்று கைதிகள் என்னும் அளவுக்கு ஆகிவிடுகிறான்.அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிக்கிறான்.


அவன் தப்பித்ததை எண்ணி மகிழும் கைதிகள் அவன் சிக்கி கொண்டதை பார்த்து வருந்துகிறார்கள்.மீண்டும் தப்பிக்கிறான்.இந்த முறை சில நாட்கள்.மீண்டும் சிக்குகிறான்.அடுத்த முறை தப்பித்து மீண்டும் சிக்கினால் சுட்டு கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கிறார்கள் சிறை அதிகாரிகள்.அவர்கள் தரும் தண்டனைகள் தாங்க முடியாமல்  அவர்களிடம் அடிமை போல் நடக்க ஆரம்பிக்கிறான்.அப்படியே மீண்டும் எஸ்கேப் .இப்போ சிக்கினான இல்லையா ?

1967 இல் வந்த கலர் படம்.ஒரு வினாடி கூட போர் அடிக்காமல் செல்கிறது.ஒரு படத்திற்கு அந்த படத்தின் கதை நிகழும் களம் அழுத்தமாக பதிவு செய்தால் தான் நம் மனதை விட்டு போகாது .இதில் அந்த இடங்களும் தனிமையான பாலைவனமும்,சிறையும் அசத்தல் .ஹீரோ அசால்டாக நடித்துள்ளார்.அவர் புன்னகை இன்னமும் என் கண்முன் உள்ளது.இசை பற்றியும் சொல்ல வேண்டும் .அதிரும் இசை எல்லாம் இல்லை .அவன் தப்பித்து ஓடும்போது கூட வெறும் இரண்டு மூன்று கருவிகளுடன் அருமையாய் இசை அமைத்துள்ளனர்.

படம் 2.06 மணி நேரம் ஓடுகிறது .

IMDB RATING-- 8.2

ROTTEN TOMATTOES --100% FRESH

படம் சூப்பர்.  FEEL THE EXPERIENCE OF PRISON LIFE...

4 comments:

  1. கதையின் களம் நீங்கள் கூறியதை வைத்து நன்றாக இருக்கும் என நினைக்கிறன்.
    டவுன்லோட் செய்து பார்கிறேன்.
    பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  2. IMDB RATING வச்சு ரொம்ப நாளைக்கு முன்னாடி டவுன்லோட் பண்ணி வச்சேன் பாஸ்....இப்ப தான் ப்ளாட் படிக்கிறேன், நல்லா இருக்கு. தமிழ்ல வந்த "சிறைச்சாலை" படத்துல கூட இதே மாதிரியான கதைக்களம் தான்.

    ReplyDelete
  3. ரொம்ப நாட்களாக பார்க்க நினைத்த படம்.டவுன்லோடு போட லிங்க் தேடிவச்சும் வாரங்கள் ஆகுது..விஜய் சார், நல்ல படமா அறிமுகபடுத்தி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.அடிக்கடி பதிவு எழுதுங்கள்.நன்றி.

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் சூப்பர் படம் போலப் படுகிறது.. பார்க்க முயற்சிக்கிறேன்!

    ReplyDelete