T20 உலக கோப்பை அணிகள் -பாகம் 2
கிரிக்கெட் மோகம் குறைந்து விட்டதா தெரியவில்லை.தமிழ் படங்கள் பற்றி எழுதினால் மட்டுமே அதிகம் பேர் படிக்கிறார்கள்.ஆங்கில படங்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தொடர்ந்து வருகிறார்கள்.நான் கிரிக்கெட் பற்றி எழுதிய முதல் முழு பதிவு சென்ற t20 உலக கோப்பை அணிகள் பற்றிய பதிவு. மிக குறைந்த பேரே படித்துள்ளார்கள்.சரி படிப்பவர்களுக்காக எழுதுவோம்.சென்ற பதிவில் பாகிஸ்தான்,இலங்கை ,தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளின் நிலை பற்றி பார்த்தோம் .இனி AUSTRALIA : கிட்டத்தட்ட கிரிக்கெட்டில் அமெரிக்கா போல் யாரையும் ஜெயிக்க விடாமல் ஆளுமை செய்து வந்தது.நம் இந்திய கிரிகெட் போர்டு கிரிக்கெட் வியாபார வியாபார விஷயங்களில் மட்டும் அமெரிக்கா போல் இருக்கிறது.நம்மை பகைத்து கொள்ள எந்த கிரிக்கெட் போர்டும் தயார் இல்லை.ஆஸ்திரேலியாவின் ஏகாதிபத்தியம் முடிந்து விட்டது .டெஸ்ட் ,ஒரு நாள் போட்டி போன்றவற்றை போல் அவர்கள் T20 போட்டிகளை அவ்வளவு தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. முதல் T20 உலக கோப்பை முதலே ஏனோ தானோ என்று ஆடி வருகிறார்கள்.அப்போவே அவர்கள் ஜிம்பாப்வே உடன் தோல்வி அடைந்து உள்ளார்கள்.தோல்வியை வெறுக்கும் அந்த அணியின் வீரர்கள் பொதுவாக வாய் சவடால் மூலம் தன்னோடு நன்றாக விளையாடும் வீரரை சாடுவார்கள்.மேக்ரத், பாண்டிங் எல்லாம் இந்த விஷயத்தில் கில்லாடிகள்.இப்போதுள்ள ஆஸ்திரேலியா T20 கேப்டன் ஜார்ஜ் பெய்லி அணியில் இருக்கவே தகுதி இல்லாதவர்.அவரை போய் எப்படி கேப்டன் ஆகினார்கள் என்று ஆஸ்திரேலியாவிலேயே குழம்பி கொண்டிருக்கிறார்கள்.எந்த விதமான போட்டியிலும் சொல்லும்படி ஆடி இருக்காத அவர் கேப்டன்.சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் உள்ளார்.நான்கு ஆண்டுகளில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே இதுவரை விளையாடி உள்ளார்.தற்போதைய T20 ரேங்கிங்கில் பத்தாவது இடத்தில் உள்ளனர்.இதனால் கோபம் அடைந்த கேப்டன் "ரேங்கிங் சிஸ்டம் சரியில்லை.அப்போ அயர்லாந்து ஆஸ்திரேலியாவை வென்று விடும் என்று சொல்லிவிட முடியுமா என்று கேட்டு உள்ளார்.பதிலுக்கு அயர்லாந்து கோச் அயர்லாந்து ஆஸ்திரேலியாவை வெல்லும் என்று சொல்லி இருக்கிறார்.

SHANE WATSON: நம்பிக்கை அளிக்க கூடிய வீரர் என்றால் இவரை மட்டுமே சொல்லலாம்.காரணம் ஓரளவு CONSISTENT ஆக ரன் அடிப்பார்.எந்த விதமாகவும் ஆடக்கூடியவர்.பௌலிங் செய்வார்.கேப்டன் ஆக தகுதி உள்ளவர்.நீண்ட நாளாக அணியில் உள்ளவர்.
DAVID WARNER : நம் சேவாக் போன்ற ஆட்டக்காரர்.பட்டால் பாக்கியம்.அடித்தால் ஒரே அடி .இல்லையா .அவ்வளவுதான்.ஐ.பி.எல் போட்டியில் சதம் எல்லாம் அடித்து உள்ளார்.விரைவாக ஓடி பௌண்டரி தடுப்பதில் சிறந்தவர்.எப்போ அவுட் ஆவர் என்று சொல்ல முடியாது.DAVID HUSSEY : உலகில் அதிக T20 போட்டிகள் விளையாடி இருப்பவர்.ஆள் ரவுண்டர் .விரைவாக ரன் அடிப்பார்.இறுதி ஓவர்களில் கை கொடுப்பார்.ஸ்பின் பௌலிங் போடுவார்.ENGLAND: என்னதான் கிரிகெட்டின் தாயகம் என்று சொன்னாலும்,அதே பழைய டெஸ்ட் போட்டிகளின் பழக்கத்தில் இருந்து வர முடியாதவர்களாக இருக்கிறார்கள்.சமீப காலங்களாக பரவாயில்லை.பீட்டர்சன் கழட்டிவிட பட்டது பெரும் சரிவு.அவர்கள் பலத்தில் ஒரு 30% கழிந்து விட்டதாகவே நினைக்கிறேன்.சென்ற முறை சாம்பியன் .அவர்கள் வென்ற ஒரே ICC TROPHY அது மட்டும் தான்.தற்போது ரேங்கிங்கில் முதல் இடத்தில் உள்ளனர்.பாப்போம்.KIESWETTER : கீப்பர் .தொடக்க ஆட்டக்காரர்.இதுவரை ஓரளவு கை கொடுத்து உள்ளார்.கீப்பிங்கும் பரவாயில்லை.GRAEME SWAN : பாகிஸ்தானின் அஜ்மலுக்கு பின் தற்போதைய சிறந்த சுழற பந்து வீச்சாளர்.இலங்கையில் போட்டிகள் நடப்பதால் இவர் பந்து வீச்சு கை கொடுக்கலாம்.பந்து வீச்சில் பெரிதும் இவரை நம்பி உள்ளது இங்கிலாந்து.மட்டையும் சுழற்றுவார்.RAVI BOPARAA: நல்ல அனுபவம் உள்ளவர்.தேவைக்கு ஏற்ப மாற்றி ஆடுவார்.ஓரளவு ஸ்பின் தாக்கு பிடிப்பார்.மித வேக பந்து வீச செய்வார்.
INDIA : ஒரு நாள் போட்டிகளின் சாம்பியன் .கிரிக்கெட் பார்க்கும் மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சேர்த்தால் அந்த அளவுக்கு இந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள்.யாருமே எதிர்பார்க்கதபோது 2007 இல் முதல் t20 உலக கோப்பை கைப்பற்றியது.அனால் அதன் பிறகு அடுத்த இரண்டு உலக கோப்பைகளிலும் மோசமாக ஆடினார்கள்.இத்தனைக்கும் கிரிக்கெட் உலகிற்கே படியளக்கும் ஐ.பி.எல் வேறு நடத்துகிறோம்.கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடைவேளைக்கு பின் இலங்கையில் ஜூலையில் ஆடினோம் .அடிக்கடி இலங்கை செல்வதால் அந்த அணிக்கு பிறகு ஓரளவு பிட்ச்கள் பற்றி புரிதல் இருக்கும்.தோனி நேற்று "இலங்கை பிட்ச்கள் மாறி விட்டது.நான் ஆட தொடங்கிய 2005 காலங்களில் இருந்ததுபோல் இனி ஸ்பின் அங்கே உதவாது என்றும் ,இந்திய அணி யுவராஜ்,கோலி,ரெய்னா போன்ற பகுதி நேர பந்து வீச்சாளர்களை கொண்டே இறங்கும்.அதன் மூலம் ஏழு பாட்ஸ்மென்,நான்கு பவுலர் என்று இறங்குவோம் என்று கூறி இருக்கிறார்.
SEHWAG : ஒரு ஐந்து ஓவர் நின்று அடித்து கொடுத்து விட்டால் கூட போதும்.அதிலேயே போதுமான ரன் அடித்திருப்பார்.எல்லா வகையான போட்டிகளிலும் வேகமாகவே ஆடி வருவதால் T20 மோடு மாறுதல் பிரச்சனை இல்லை.தோனியோடு பிரச்சனை என்றதால் மட்டுமே மீடியாவில் பெயர் அடிபட்டது.மற்றபடி சொல்லிகொல்லும்படி சமீப காலங்களில் ஆடவில்லை .தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
GAMBIR : சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறார்.கொஞ்சம் நம்பலாம்.இறுதி போட்டி போன்ற முக்கிய போட்டிகளில் சிறப்பாக ஆடுவார்.என்ன இவருக்கு எப்படி போட்டு அவுட் ஆக்கலாம் என்று சில அணிகள் தெரிந்து வைத்து கீபிங் கேட்ச் ஆக வைத்து விடுகிறார்கள்.
KOHLI : சினிமாவில் சூர்யா போல் தற்போதைய ஹிட் இவர்.தொடுவதெல்லாம் ரன்.தன் LIFETIME FORM இல் இருக்கிறார்.தற்போதைய ஒரே நம்பிக்கை.பீல்டிங்கும் நன்றாக செய்வார்.என்ன ஆர்வ மிகுதியால் தன் கைக்கு வரும் பந்தை BATSMAN உள்ளே இருக்கனா வெளியே இருக்கனா என்று கூட கவனிக்காமல் ஸ்டாம்பில் அடித்து ஓவர் த்ரோ கொடுத்து விடுவார்.கவாஸ்கர் வர்ணனையில் அடிக்கடி கடிந்து கொண்டுள்ளார்.
YUVRAJ : புற்று நோயில் இருந்து குணமாகி நியூசிலாந்து போட்டியில் 34 ரன்கள் அடித்தார்.தோனி பெரிதும் நம்பும் ஐந்தாவது பந்து வீச்சாளர்.
RAINA : T20 வீரர் என்று சொல்லலாம்.சமீபமாக சரியாக ஆடவில்லை.ஆனால் டோனி இவரை நம்புகிறார்.
ROHIT SHARMA : ஏகப்பட்ட பேர்,வர்ணனையாளர்கள் ,மீடியா போன்றவை மிகவும் சப்போர்ட் செய்யும் வீரர்.சொல்லும்போதே MUCH TALENTED என்று சொல்லித்தான் சொல்வார்கள்.இருந்தும் தரப்பட்ட எக்கச்சக்க வாய்ப்புகளை வீணடித்து உள்ளார்.இவரை போல் இன்னும் வாய்ப்பு கிடைக்கும் வீரர் இனி இருப்பாரா என்று சொல்ல முடியாது.
TIWARY : அதிகம் வாய்ப்பு கிடைக்காத வீரர்.கிடைத்த சில போட்டிகளில் நிருபித்து உள்ளார்.பாட்டிங் வரிசையில் கடும் போட்டி இருப்பதால் யாரவது சரியாக ஆடாவிட்டால்,காயம் ஏற்பட்டால் அணியில் இடம் பெறலாம்.
PATHAN: சில தொடர்காளாக நன்றாக விளையாடி வருகிறார்.பார்க்கலாம்.
ASHWIN: ஐ.பி.எல் போட்டிகளில் பந்து வீசி அனுபவம் உள்ளதால் நெருக்கடி தரலாம்.டோனி நம்பும் வீரர்.
ZAHEER: இருக்கும் ஒரே உலக தர பந்து வீச்சாளர்.T20 யில் பெரிதாக சாதித்ததில்லை.உலக கோப்பை முடிந்ததும் T20 யில் ஓய்வு பெறுவார் என்று சொல்கிறார்கள்.
BALAJI,DINDA,HARBAJAN போன்றோர் இருக்கிறார்கள்.
DHONI: சென்னையில் நடந்த நியூசிலாந்து போட்டியில் இவரது ஆமைவேக பாட்டிங்கினால் தோற்றோம்.இருந்தும் கை கொடுப்பார் என்று நம்பலாம்.இங்கிலாந்த் ,ஆஸ்திரேலியா தொடர்களில் தோற்றதால் நெருக்கடியில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.அதன் பிறகு இலங்கையில் ஒரு நாள் தொடர் வென்று உள்ளோம்.இதில் தோற்றாலும் அவர் பதவி தப்பிவிடும்.
இதர அணிகள்: WEST INDIES அணியில் GAYLE,POLLARD,BRAVO ஆகியோருடன் SUNIL NARAINE அந்த நாளில் நன்றாக விளையாடினால் வெற்றி பெறலாம்.IRELAND, BANGLADESH போன்றவை அதிர்ச்சி தரலாம். AFGANISTAN அணியில் ஒரு பவுலர் பயங்கரமாக பந்து வீசுவதாக சொல்கிறார்கள்.
மற்றொரு சிறப்பு அம்சம் STAR CRICKET இல் ஒளிபரப்பாவது.அதில் கிரிக்கெட் பார்த்தல் தான் பிடிக்கிறது.மற்றவை இது போல் இல்லை.அதுவும் தூர்தர்ஷனில் பார்ப்பதை விட சும்மா இருக்கலாம்.