Pages

Friday 25 May 2012

ஹரரர் த்ரில்லர் பட ரசிகர்கள் தவற விடகூடாத படங்கள்:

ஹரரர் த்ரில்லர் பட ரசிகர்கள் தவற விடகூடாத படங்கள்:

உலகெங்கிலும் ஹரரர் மற்றும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உண்டு.ஹிட்ச்காக்கின் "சைகோ " தொடங்கி ஏராளமான படங்கள் வந்துள்ளன.ஆனால் நான் சொல்ல போவது நவீன இந்த கால பெரும்பாலும் எண்பதுகளுக்கு பிறகு வந்தவை.நான் எழுத காரணம் இந்த வகை பட ரசிகர்கள் நான் பட்டியலிட்டு உள்ளதை பார்க்க தவறி இருந்தால் பார்க்கலாம்.நிச்சயம் இந்த படங்கள் ஆரம்பித்தால் உங்களை அங்கே இங்கே நகர விடாது.நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பான படங்கள் இவை.இவைகளில் சில படங்கள் வயது வந்தோருக்கான படங்களாகவும் ,வன்முறை மிக அதிகமாகவும் இருக்கும் .அதனால் கவனம் தேவை.

1.FINAL DESTINATION (2000):
                                         தற்செயலாக ஒரு விபத்திலிருந்து தப்புகிறீகள், ஆனால் மரணம் உங்களை விடாமல் துரத்தினால் ?இதுவரை ஐந்து பாகங்கள் வந்துள்ளன 
                  


2.WRONG TURN (2003): 
                              பயணத்தில் வழி தவறி போய் விடும் ஒரு கும்பல் ,மனிதர்களை வேட்டையாடி உண்ணும் கும்பலிடம் மாட்டுகிறார்கள்.தப்பித்தது யார்.


3.HOSTEL (2005):
                        பெண் சுகம் தேடி தெரியாத நாட்டுக்கு போகும் மூன்று வாலிபர்கள்,அங்கே அவர்களுக்கு காத்திருப்பது என்ன. மிகவும் கோரம் ,ரத்தம் நிறைந்த படம்.


4.THE HILLS HAVE THE EYES (2006):
                               இந்த படம் 70 களின் இறுதில் இதே படத்தின் வந்த படத்தின் ரீமேக் படம்.

5.TEXAS CHAINSAW MASSACRE (2003):
                               இதுவும் சென்ற படம் போல தான்.

6.SCREAM (1996):
                          இது slasher வகையை சேர்ந்தது.நான்கு பாகங்கள் வந்தள்ளது.

7.SAW (2004):
                        கிட்ட தட்ட நம்ம அந்நியன் படம் போல தான்.முதல் பாகத்திலிருந்து பார்த்தால் தான் புரியும்.

8.I KNOW WHAT YOU DID LAST SUMMER (1997):
                         ஒரு விபத்தில் இருந்துவிட்ட தாக   நினைத்து ஒருவனை உடலை கடலில் போடுகிறார்கள் நாலு நண்பர்கள்.ஆனால் அவன் இறக்காமல் வந்து பழி வாங்குகிறான். படு பரபரப்பான படம்.

9.FRIDAY THE 13TH (1980):
                         இந்த படத்திற்கு முடிவே கிடையாதா? படத்தை விட இசை சூப்பர்.

10.CHILD'S PLAY (1988):
                        போலீஸ் துரத்தலில் மாந்திரீகம் தெரிந்த ஒரு கிரிமினல் ஒரு பொம்மைக்குள் தனது உயிரை செலுத்திகொல்கிறான்.உங்கள் வீட்டில் உள்ள எதோ ஒரு பொம்மை நீங்கள் இல்லாத போது மட்டும் உயிரோடு இருந்தால்?



11.HIGH TENSION (2003):
                      கொடூரமான காட்சிகள் உண்டு ஜாக்கிரதை.

12.INSIDE (2007):
                      எதிர் எதிரில் வரும் இரு கர்பிணி பெண்களின் கார் விபத்து குள்ளாகிறது.ஒருவள் கணவனையும் வயிற்றில் உள்ள குழந்தையும் இழக்கிறாள்.எதிரில் வந்த பெண் கணவனை மட்டும் இழக்கிறாள்.முதல் பெண் இரண்டாம் பெண்ணை பழி வாங்க கிளம்புகிறாள்.எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம் என்ற சூழ் நிலையில் உள்ளவளின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்க முயற்சிக்கிறாள்.உச்ச பட்ச வன்முறையும் கொடூரங்களும் நிறைந்த படம் பெண்கள் பார்க்க வேண்டாம்.

13.VACANCY (2007):
                             ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு தங்கும் விடுதி.மனைவியோடு செல்லும் நாயகன் இரவில் ரூம் எடுத்து அங்கே தங்குகிறான் .ரூமை சுற்றி பார்த்துவிட்டு டி,வி போட்டால் அதில் எதோ ஒரு கொலை காட்சி ஓடுகிறது.காட்சி ஓடும் இடம் அந்த ரூமை போலவே உள்ளதாக அவனுக்கு தெரிகிறது.ரூமை ஆராய்ந்ததில் ரூமில் கேமரா இருப்பதும் அங்கே நடப்பதை பதிவு செய்ய படுவதையும் தெரிந்து கொள்கிறான்.இனி என்ன?


14.THE HUMAN CENTIPEDE (2009):
                             மூன்று மனிதர்களை ஒருவரோடு ஒருவர் ,அதாவது ஒருவனின் ஆசனவாயில் மற்றவனின் வாயை தைத்து , ஆராய்ச்சி செய்ய ஒரு சைகோ டாக்டர் முயற்சிக்கிறார்.


15.1408 (2007):
                      ஒரு கதாசிரியர் ஆவிகள் உள்ளதாக கருதப்படும் இடத்தில தங்குகிறார்.நடப்பது என்ன. மெதுவாக உங்களை உள்ளே இழுக்கும் படம்.

இதில் சிலர் சில படங்களை பார்த்து இருப்பீர்கள்.சிலருக்கு அவை பிடிக்கலாம்.பிடிக்காமல் போகலாம்.

நீங்களும் இது போல் நீங்கள் பார்த்த வற்றில் சிறந்த ஹரரர் த்ரில்லர் படங்களை எனக்கு சொல்லுங்கள்.




4 comments:

  1. இதில் சில படங்களை பார்த்தாகிவிட்டது சார்..சில படங்களை டவுன்லோடு போட இருக்கிறேன்.நல்ல லிஸ்டை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. இதில் அனைத்துப் படங்களையும் பார்த்து விட்டேன். நிறைய லிஸ்ட் ம் உள்ளது.

    நீங்கள் பார்க்க வேண்டிய படங்கள் Cold Fish (ஜப்பானிய ஹாரர் படம்), I Saw the devil (கொரியன் ஹாரர் படம்) இவை இரண்டுமே அருமையான ஹாரர் படம். நீங்கள் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள்.

    ReplyDelete
  3. The Cook
    Cannibal Holocaust

    படங்களையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம்...

    ReplyDelete
  4. The Cook
    வருடம்: 2008
    இயக்குனர்: Greg Simon

    உங்கள் தளத்தில் நீங்கள் பகிர்ந்து கொண்டிருந்த STUCK மற்றும் BREAKDOWN இரு படங்களையும் நேற்று பார்த்தேன். அருமை. எப்படி இவ்வளவு நாட்கள் விட்டு வைத்தேன் என்று தெரியவில்லை. உங்கள் பார்வைக்கு மேலும் சில படங்கள். பார்த்து விட்டு சொல்லவும்.

    1. 8 Women (French) - வீட்டின் தலைவன் கொலை செய்யப் படுகிறான். அவனைக் கொன்றது அந்த வீட்டில் இருக்கும் 8 பெண்களில் யார் என்பது தான்... இதற்கு முன் கண்டிராத மியூசிகல் த்ரில்லர் (!) வகை. அதென்ன மியூசிகல் த்ரில்லர்?! படத்தைப் பாருங்கள்...

    2. 36th Precinct (French)

    3. Anthony Zimmer (French)

    4. The Crimson Rivers (French)

    5. The Beast of War (English) - இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நான் கணக்கே வைக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு கிராமத்தில் உள்ளே புகுந்து சின்னாபின்னமாக்கும் ஒரு ரஷிய டாங்க்கை ஆப்கானின் ஒரு சிறு படையினர் ஒரு ரஷ்ய வீரனின் உதவியுடன் சேஸ் செய்கின்றனர். கிளைமாக்ஸ் சான்சே இல்லை...

    6. The Debt (English) - பலவருடங்கள் கழித்து உண்மையை உணர்ந்து கருவறுக்கும் பக்கா த்ரில்லர்...

    7. Memories of Murder (Korean) - தொடர் கொலைகள் - விசாரணை - கொலைகள் என்று செல்லும் படம். இப்படம் பார்த்து விட்டு மழைக்கால இரவில் கொரியப் பெண்கள் வெளியே செல்ல பயந்து தயங்கினார்கள் என்று சொல்லப் படுவது உண்டு. காரணம், எதிர்பாராத கிளைமாக்ஸ்...

    தொடர்ந்து பகிர்வோம்...

    - அன்புடன்
    - மலர்வண்ணன்

    ReplyDelete