Pages

Monday, 17 December 2012

கௌதம் மேனன் இதுவரை என்ன கிழித்துவிட்டார்?

கௌதம் மேனன்  இதுவரை என்ன கிழித்துவிட்டார்? 





கடந்த மூன்று நாட்களாக பதிவுகளில் ஒரே குரலில் அழுகை  சத்தம் .கௌதம் ஏமாற்றிவிட்டார்.படத்தில் ஒன்றுமே இல்லை ஏற்கனவே பார்த்த அவரது படங்கள் போலவே இருக்கு .படம் ஒரே இழுவை.ரொம்ப ஸ்லோ .கதை நகரவே மாட்டேன் என்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள்.இதில் கௌதம் மேனன் பட ரசிகர்கள் வேறு தனி ட்ராக்கில் விமர்சனம் போடுகிறார்கள் .நான் கேட்கிறேன் அப்படி இதுவரை அசத்தும் படங்கள் எத்தனை கொடுத்துவிட்டார்.அவர் படங்களுக்கு ஏன் இவ்வளோ எதிர்பார்ப்பு.என் எதிர்பார்ப்பு இந்த படத்தை பொறுத்தவரை அவர் படம் தொடங்கும் போதே முடிவு செய்துவிட்டேன்.இது லவ் படம்.ரொம்ப மெதுவாக போகும்.பாட்டு அருமையாய் இருக்கும்.ஆனால் படம் மொக்கையாய் இருக்கும்.என்று.

கௌதம் மேனன் இதுவரை இரண்டு வகையான படங்களே அதிகம் எடுத்து உள்ளார்.
1.slow moving love stories
2.partly fast paced police stories.

இதுவரை 13 படங்கள் எடுத்துள்ளார்.

1.மின்னலே , 2.மின்னேலே (ஹிந்தி).3.காக்க காக்க 4.காக்க காக்க (தெலுகு) 5.வேட்டையாடு விளையாடு  6.பச்சைக்கிளி முத்துச்சரம் 7.வாரணம் ஆயிரம் 
8.விண்ணை தாண்டி வருவாயா 9.தெலுகு 10.ஹிந்தி 11. நடு  நிசி நாய்கள் 12.நீதானே என் பொன்வசந்தம் 13.தெலுகு 

ரீமேக் கழித்தால் 8 படம் .

1.மின்னலே :  முதல் படம் ஓரளவு பார்க்கும்படி இருந்தது.கதையோ,திரைக்கதையோ எதுவும் புதிதில்லை.இருந்தாலும் அலைபாயுதே மாதவன் ,ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று கரை ஏறிய படம்.இன்று அவர் எடுக்கும் படங்களுக்கு மின்னலே பரவாயில்லை 

2.காக்க காக்க : அவரது முழு ஸ்டைல் வெளியே வந்த படம்.இன்றும் போலீஸ் படங்களில் இடம் உண்டு.எனக்கு முழு திருப்தி தந்த படம்.சூர்யாவை வெளி காட்டிய படம்.

3.வேட்டையாடு விளையாடு: கமலுக்கு  அப்படியொரு அறிமுக காட்சி ரொம்ப நாட்களுக்கு பின்.அடக்கி வாசித்த கமல்,ஆர்பாட்டம் செய்யும் வில்லன்கள் ,கௌதமின் அமெரிக்கா என்று படம் விளையாடியது.சரி கௌதம் என்று ஒரு ஆள் வந்துவிட்டார் என்று நினைத்தேன்.

4.பச்சைக்கிளி முத்துச்சரம்: எனக்கு பிடித்த படம்.சரத் படத்திற்கு பொருந்தவில்லை.இந்த கதையை முதலில் கமலிடம் வேட்டையாடு விளயாடுவிர்க்கு முன் சொன்னாராம்.கமலுக்கு பிடிக்கவில்லை .நிறைய பேருக்கு படம் பிடிக்க வில்லை.

இதற்க்கு பின் வந்த படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கவில்லை 

5.வாரணம் ஆயிரம்: ரொம்ப போர்,படம் ரொம்ப நீளம்.கடத்தல் காட்சிகள் என்று தேவை இல்லாத நிறைய காட்சிகள் படத்தில் உண்டு.படம் முடிவதற்குள் ஒரு வித அயர்ச்சி வந்து விட்டது.வழக்கம் போல ஹாரிஸ் காப்பாற்றினார்.

6.விண்ணை தாண்டி வருவாயா :  இந்த படம் சிலருக்கு பிடித்திருக்கிறது என்று கேள்வி பட்டு ஆச்சர்யம் அடைந்தேன்.எப்பா செம போர்.ரகுமான் இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும். ரெட் ஜியான்ட் -உதயநிதி இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்காவிட்டால் படம் ஊத்தி கொண்டிருக்கும்.நான் இந்த படத்தை டி.வி.டியில் பார்க்க தொடங்கி போர் அடித்தால் பொறுமை இழந்து நிறுத்தி நிறுத்தி அடுத்த நாள் அடுத்த நாள் என்று 5 நாள் பார்த்தேன்.இன்றும் கிளைமாக்ஸ் என்ன என்று நினைவில்லை .

7.நடுநிசி  நாய்கள் :  எப்பா படமா அது .உவ்வே .

எனக்கு தெரிந்து கௌதமிடம் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை.அவர் படம் இப்படிதான் இருக்கும் என்று தெரியும் .பல உலக சினிமா கரைத்து குடித்த பல பதிவர்கள் நீதானே என் பொன்வசந்தம் பார்த்து ஏன் புலம்புகிறீர்கள் ? கௌதம் படத்தை ஏன் எதிர்பார்க்க வேண்டும்.?கிட்டத்தட்ட அதே மன நிலையோடு
மணிரத்னத்தின் கடல் படத்தையும் எதிர்பார்த்து ஏமாற போகிறீர்கள்.வாழ்த்துக்கள்.கௌதமின் அடுத்த படம் சூர்யா உடன் .செம ஜாலி .

Sunday, 16 December 2012

1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு


1981 இல்  ரஜினி -கமல் இடையே நடந்த  கை கலப்பு :


தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால் கட்டி அனைத்து கொள்வதும் பின் அவருக்கே குழி பறிக்கும் வேலைகளும் கருப்பு வெள்ளை காலங்கள் முதலே தெரிந்தது தான்.எம்.ஜி.ஆர் -சிவாஜி இருவரும் நேரில் தம்பி-அண்ணே என்று பாசத்தால் கட்டி அனைத்தாலும் சிவாஜிக்கு முன்பிருந்தே சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து அப்போதுதான் எம்.ஜி ஆரின் வளர்பிறை நேரம் .ஆனாலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை.ஒரு படம் ஓடினால் பின் சில சரிவுகள்.அதன் பின் வந்த சிவாஜி பராசக்தி மூலம் மின்னல் போல நுழைந்து தடதடவென மேலே வந்து விட்டார்.ஆமாம் எம்.ஜி ஆரை முந்தி முதல் இடத்தில இருந்தது அவர் நிலை. தொடர்ச்சியாக சிவாஜியை வைத்து மட்டுமே படம் எடுத்து கொண்டிருந்தனர் பி.ஆர்.பந்துலு போன்ற சில தயாரிப்பாளர்கள்.எம்.ஜி ஆர் தனது முறை வந்ததும் சிவாஜியை வைத்து படம் எடுத்த அனைவரையும் தன்னை நோக்கி வரவைத்தார்.மேலும் தேவர் போன்ற தயாரிப்பாளர்கள் சிவாஜியை நாடாமல் பார்த்துகொண்டார்.ஒரு நேரம் எம்.ஜி ஆர் குரூப் நடிகர்கள் ,சிவாஜி குரூப் நடிகர்கள் என்று இரு பிரிவாக நடிகர்கள் இருந்தார்கள்.எம்.ஜி ஆர் க்ரூபில் அசோகன் ,வி.எஸ்.ராகவன்,தேங்காய் ஸ்ரீனிவாசன்  இன்னும் சிலர் .சிவாஜியிடம் மேஜர் சுந்தர்ராஜன்,பாலாஜி போன்றோர் .இவர்களை ஒரு க்ரூப் நடிகர் பெரும்பாலும் இன்னொரு நடிகர் படத்தில் நடிக்க மாட்டார்.இருந்தாலும் நேரடியாக எம்.ஜி.ஆர் -சிவாஜி நட்பு பாராட்டி கொள்வார்கள் ..


காலம் கடந்து அடுத்த செட் நடிகர்கள் முன்னணிக்கு வருகிறார்கள்.கமல்-ரஜினி  என்று தொடங்கியது.இருவரும் சேர்ந்து பல படங்களில் நடிக்கிறார்கள்.நட்பு பலப்படுகிறது .பின் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து பிரிகிறார்கள்.இருவருமே அடுத்தடுத்து ஹிட்கள் கொடுத்து முன்னணிக்கு வருகிறார்கள்.இருந்தாலும் பழைய பழக்கத்தில் நட்புடனே இருக்கிறார்கள்.இனி விஷயத்திற்கு வருவோம்.இது என் கற்பனையோ அல்லது வேறு எதுவோ இல்லை.நான் ஒரு புத்தகத்தில் படித்ததை இங்கே விவரிக்க்றேன்.அப்போது குமுதம் வார புத்தகம் இருவரையும் நேரடியாக பேர் சொல்லாமல் இந்த விஷயத்தை குறிப்பிட்டு இருந்தது.பின் கமல் ஒரு பேட்டியில் நேரடியாகவே அதை ஒப்புக்கொண்டு அதன் பின் நடந்தவற்றை விவரித்துள்ளார்.அந்த சம்பவங்களை அப்படியே 

தயாரிப்பாளர் கே.பாலாஜி .பில்லா,தீ ,விடுதலை போன்ற ரஜினி படங்களும் சவால்,சட்டம்,வாழ்வே மாயம் போன்ற கமல் படங்களும் தயாரித்தவர்.

வருஷம் ---1981. மே மாதம். பாலாஜி ரஜினின் திருமணத்தையொட்டி ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார்.ரஜினி ,கமல்,பாலாஜி,ஜெய்சங்கர் ,விஜயகுமார் ,ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .நட்சத்திரங்களின் சங்கமத்தில் மது கரை புரண்டு ஓடியது .கமல் ஏக துஜே கேலியே மூலம் உச்சத்தில் இருந்தார்.ரஜின்க்கும் நல்ல  மார்க்கெட். புகழ் மயக்கம் எல்லோருக்கும் இயல்பே.மகிழ்ச்சி உற்சாகத்தில்  தனி நபர் தாக்குதல் விமர்சனங்கள் தலை தூக்கின .

ஏழுமலையான் பெயர் கொண்ட தயாரிப்பாளர் பார்டியில் இரண்டு பெரிய நடிகர்கள் மோதிக்கொண்டதை  பற்றி எல்லா பத்திரிக்கைகளும் செய்தி வந்தது.

"ஸ்டைல் நடிகர் கமலாரின் சட்டை காலரை பிடித்தாராம்.அதுவரை பொறுமையாய் இருந்த அவர் இதற்குமேல் இடம் கொடுக்க கூடாது என்று விட்டாராம் ஒரு குத்து .தடால் என்று விழுந்து விட்டாராம் முரட்டு காளை " (குமுதம் லைட்ஸ் ஆன் ,28.05.1981)

பிறகு நடந்தவை கமல் வார்த்தைகளில் :

ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலகி இருவரையும் சமாதனம் செய்தார் .அதற்காகவே ஜெய் சாரை எங்கள் இருவருக்குமே பிடிக்கும்.இந்த சம்பவம் நடந்த மறு நாள் நான் வாகினி ஸ்டுடியோவில் இருந்தேன்.என்னை பார்க்க ரஜினி வேகமாக வந்துகொண்டிருந்தார் .வந்த வேகத்தை பார்த்தல் தகராறு செய்யத்தான் வருகிறார் போலிருக்கு ,சரி வரட்டும் வந்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்து கொண்டிரும்போதே அருகில் வந்து ரஜினி என் கையை அழுத்தமாக பிடித்தார்."சாரி ..நேத்து நடந்தை மறந்திடுங்க என்றார்.எனக்கு வெட்கமாகி விட்டது.அவரது பெருந்தன்மை என்னை சுட்டது.

மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக்கொண்டிருந்தவர்களிடம் "கமலிடம் மன்னிப்பு கேட்க்க போனபோது பகை உணர்ச்சியை மாற்ற மாட்டாரோ என்று நினைத்தேன்.பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்று கூறி இருக்கிறார்.அதை கேள்வி பட்டதும் நாம் முந்தி கொள்ளாமல் போனோமே என்று என்னையே நொந்து கொண்டேன் ..



Friday, 2 November 2012

DREAM HOUSE -- டேனியல் கரைக் நடித்த த்ரில்லர் படம்


DREAM HOUSE -- டேனியல் கரைக் நடித்த த்ரில்லர் படம் 


இப்போது ஜேம்ஸ் பாண்ட் படம் வந்துள்ளது.அதன் ஹீரோ டேனியல் கிராக் உங்களுக்கு பிடித்தால்,அவரது வேறு படம் ஏதாவது பார்க்கலாம் என்றால்,இந்த படத்தை பார்க்க யோசிக்கலாம்.படம் ஒரு மிஸ்டரி த்ரில்லர் வகை படம்.நீங்கள் இதுவரை (நானும் தான்) டேனியல் கிராகை அடிதடியில் மட்டும் பார்த்து இருந்தால் ,ஒரு மாற்றத்திற்காக இந்த படத்தை பார்க்கலாம்.இதில் கொஞ்சம்(?) நடித்தும் உள்ளார்.

வழக்கமான ஹாரர் படங்களை போல் ஹீரோ தன் குடும்பத்தோடு புதிய வீட்டிற்கு குடி வருகிறார்.அங்கே நடக்கும் சில புதிரான சம்பவங்களுக்கு பின் அந்த வீட்டில் அதற்க்கு முன் இருந்தவன் தன மனைவியையும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்போது மன நல காப்பகத்தில் இருப்பதாக தெரிய வருகிறது.நாமாக இருந்தால் என்ன செய்வோம் அந்த வீடு வேண்டாம் என்று காலி செய்து வேறு வீடு ஓடி வந்திருப்போம்.ஆனால் இந்த திகில் பட ஹீரோக்கள் அப்படி ஒரு நாளும் செய்ய மாட்டார்கள்.இதிலும் நம் ஹீரோ போலீஸ் உதவியை நாடி அந்த வீட்டில் என்ன நடந்தது என்று கேட்கிறான்.

போலீஸ் ஒரு மாதிரி பூசி மொழுகி  பயப்படாமல் இருக்க சொல்லி அனுப்பி விடுகிறது.அதன் பின் எதிர் வீட்டில் இருக்கும் பெண் தன்னை பார்த்து ஒரு மாதிரி நடந்து கொள்வதை பார்த்து அவளை நாடுகிறான்.அவள் அவன் வீட்டில் நடந்த சம்பவங்களுக்கு காரணமான அந்த ஆளின் பேரை (பீட்டர் வார்டு) சொல்லி , ஒரு மருத்துவமனை பேரை சொல்லி அங்கே அனுப்புகிறாள்.அங்கே செல்லும் நாயகன் காண்பது என்ன? (படத்தில் ஒரு முக்கிய திருப்பம் அங்கே) அங்கே அவன் கண்டது தான் நிஜமா? (இறுதியில் மீண்டும் ஒரு ட்விஸ்ட் ).

இது போல் சில படங்கள் நிறைய வந்திருந்தாலும் சில இடங்களில் வரும் ட்விஸ்ட் படத்தை தனித்து காண்பிக்கிறது.டேனியல் கிராக் ஓகே என்று சொல்லும்படி தான் இருக்கு நடிப்பு.நாயகி மம்மி படத்தில் வந்தவர்.எதிர்  வீடு பெண்ணாக கிங் காங் படத்தில் வந்தவர்.

படம் பிளாப் ஆன படம் தான்.படத்தின் இயக்குனர்,நாயகன் ,நாயகி ஆகியோர் படத்தின் இறுதி வடிவம் பார்த்து அதிருப்தி ஆகி படத்தின் விளம்பர நிகழ்சிகளுக்கு  வரவில்லை.படத்தின் பெரிய திருப்பம் ஒன்று ட்ரைலரில் வந்து விட்டதாலும் பெரிய சறுக்கல்.உங்களுக்கு டேனியல் கிராக் ரொம்ப பிடிக்கும்,ஒரு லீவ் நாளை கொஞ்சம் த்ரில்லான படம் பார்க்கலாம் என்றால் பார்க்கலாம்.இல்லையா எஸ்கேப் .2011 இல் வந்த படம் 1.30 மணி நேரம் ஓடும்.