Pages

Friday, 19 October 2012

மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?


மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?

முந்தைய கே.வி.ஆனந்தின் படங்களான அயன்,கோ இரண்டுமே எனக்கு பிடித்த படங்கள்.ஒரு கதையை லாஜிக் அது இது என்று மற்ற விஷயங்களை பற்றி யோசிக்க விடாமல் பரபர திரை கதையால் அதே நேரம் ஹரி படம் போல் வீண் பரபரப்பு இல்லாமல் இளமை ததும்பும் வசனங்களோடு கொஞ்சம் விரசமான வசனங்களோடும் ,பாடல்களை வித்யாசமான இடங்களில் படமாக்குவதும் என்று ஒரு ஸ்டைல் ஏற்படுத்தி கொண்டவர்  கே.வி.ஆனந்த்.அவரது கவனிக்க படாத படமான கனா கண்டேன் படமே நல்ல படம் தான் .சூர்யா தற்போதைய தமிழ் சினிமாவின் விராத் கோஹ்லி .ஹிட் பாடல்களுடன் ஹாரிஸ் ஜெயராஜ் என ஜோராக களம் இறங்கிய மாற்றான் வெள்ளி கிழமை முதல் பதிவுகளில் கிழித்து தொங்கவிடபட்டு கொண்டு இருக்கிறது.நான் ஏற்கனவே இந்த படம் திரை அரங்கில் பார்க்க முடிவு செய்தபடியால் அதன்படி சென்றேன்.முக்கால் வாசி அரங்கம் காலியாக இருந்தது.படம் வந்து ஐந்தாவது நாள் .

ஆனால் படம் அந்த அளவு மோசம் இல்லை என்றே சொல்வேன்.ஆனால் நிச்சயம் எதோ குறைகிறது .கதை வலுவில்லை .இந்த கதைக்கு ஒட்டி பிறந்த மேட்டர் எல்லாம் தேவை இல்லை.ஆனால் ஆனந்த் இந்த ஒட்டி பிறந்த ரெட்டை விஷயத்தை முதலில் வைத்து கொண்டு பிறகே அதற்க்கு ஏற்றாற்போல் இந்த கதை உருவாக்கி உள்ளார் என்பதை அவர் படம் தொடர்பாக கொடுத்த பேட்டிகளில் மூலம் அறியலாம் .

படத்தின் நீளம் பெரிய குறை.படம் முடிவதற்குள் நிறைய விஷயங்கள் ஒரே அடியாக நிறைய நமக்குள் அழுத்த படுகிறது.ஒரு கதை இயல்பாக நம்முள் தொடருவதற்கும் ஒரு விஷயத்திற்கு கதை பண்ணுவதற்கும் இருக்கும் வித்யாசத்தை இந்த படம் காட்டிவிட்டது.கனா கண்டேன் -2005,அயன்- 2009,கோ-2011.இப்படி ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் நிறைய நேரம் எடுத்து அதை சீர்படுத்தி எடுத்த ஆனந்த் இதில் கோ முடித்த கையேடு அவசரமாக களம் இறங்கி  விட்டாரோ ? 

தன்  பட ஹீரோக்கள் வகிடு எடுத்து தலை வாரி நெற்றியில் மூன்று முடிகளை விட வேண்டும் என்பது வரை கவனமாக பார்க்கும் ஆனந்த்  திரை கதையிலும் இன்னும் உழைத்திருக்கலாம்.

Tuesday, 2 October 2012

தாண்டவம் : படதேர்வில் மீண்டும் சறுக்கிய விக்ரம்


தாண்டவம் : படதேர்வில் மீண்டும் சறுக்கிய விக்ரம் 

படம் மொக்கை என்று தெரிந்தே இந்த படத்திற்கு போனேன்.காரணம் தெரியவில்லை.பதிவர் நண்பர் ராஜ் சொன்னது போல் மூணு மாதம் கழித்து  விஜய் டி.வியில் போடும்போது பார்த்திருக்கலாம்.விக்ரம் மீண்டும் படதேர்வில் சறுக்கி இருக்கிறார்.அவரை சொல்லி குற்றமில்லை.தெய்வ திருமகள் எடுத்த இயக்குனருடன் என்பதால் ஓகே சொல்லி இருப்பார்.தெய்வ திருமகள் சீன் பை  சீன் IAM SAM ரெடி ஆக இருந்தது.

படத்தின் கதை இந்நேரம்  எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.கடந்த மூன்று நாட்களாக எல்லா ஊடகங்களிலும் இந்த பட விமர்சனம் தான் ஓடுது அதனால் நான் அதற்குள் போக போவதில்லை.படத்தின் பிளஸ் ,மைனஸ் இவை மட்டுமே பார்க்கலாம்.

படத்தின் பிளஸ்; 
விக்ரம் : கடும் உழைப்பு .பார்வை இல்லாதவரின் உடல் மொழி அப்படியே .WELL DONE.
ECHOLOCATION என்ற தமிழுக்கு புதிய விஷயம் .
இசை 

மைனஸ் :
கதை : எளிதில் யூகிக்க கூடிய ,திருப்பங்கள் அற்ற கதை.
திரைக்கதை ( படம் கொஞ்சம் கூட நகரவே மாட்டேன் என்கிறது)
எல்லோரும் ஏன் ரொம்ப மெதுவாக பேசுகிறார்கள்.? அதுவும் விக்ரம் கண்  தெரியும் போது கூட அப்படியே தான் பேசுகிறார். (கண் தெரியாத போது சோகத்தில் இருக்கிறார்)
அனுஷ்கா -அழகாகவே இருக்கிறார்.ஆனால் முத்திபோய் மூணு குழந்தைகளுக்கு அம்மா ஆன ஆண்டி போல் இருக்கிறார்.
சந்தானம்: ரொம்ப பிஸி ஆக இருக்கும் அவரை போய் ஏன் இந்த வேடத்திற்கு ? சுத்தமாக ஒன்றும் இல்லை.இதற்க்கு தெய்வ திருமகள் படத்தில் அனுஷ்காவின் தோழியை லவ் பண்ணும் கிஷோரை கூட நடிக்க வைத்திருக்கலாம்.
படத்தின் நீளம் .
வேகம்: தொடக்கத்தில் ஆமை வேகத்தில் நகரும் படம் ,கிராமத்து காட்சி கொஞ்சம் செல்ல டெல்லி வந்ததும் படுத்து லண்டனில் தூங்கி விடுகிறது.


மொத்தத்தில் செண்டிமெண்ட் படமான தெய்வ திருமகள் படத்தையே ஓரளவு பார்க்கும்படி நகர்திசென்ற விஜய் ,த்ரில்லர் படம் என்று சொல்லி இப்படி இழு இழுவென இழுத்துவிட்டார்.கொஞ்சம் கூட வொர்த் இல்லாத படம் .பதிவர் ராஜ் சொன்னதையே வழி மொழிகிறேன்.பார்க்க விருப்பம் உள்ளவர்கள் விஜய் டி.வியில் போடும் வரை காத்திருக்கலாம்.

இந்த ஆண்டு என்ன ஆச்சு ? ஓடும் என்று பெரிதாக எதிர்பார்க்க பட்ட அரவான்,மூணு,சகுனி,பில்லா 2,முகமூடி என எல்லா படங்களுமே ஏமாற்றி விட்டது.இன்னும் இந்த ஆண்டு மிச்சம் இருப்பது துப்பாக்கி,மாற்றான் மட்டுமே.விஸ்வரூபம் இந்த ஆண்டு வெளி வரும் என்று நான் நினைக்கவில்லை.பார்க்கலாம் துப்பாக்கி ,மாற்றான் இரண்டும் என்ன செய்கிறது என்று.

Monday, 1 October 2012

விக்ரம் -சூர்யா ---குறிக்கோள் கமல் நாற்காலி

விக்ரம் -சூர்யா ---குறி  கமல் நாற்காலி 



விக்ரம் -வயது 46 
சூர்யா- வயது 37 
விக்ரம் ,சூர்யா இருவரும் இன்றைய தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருப்பவர்கள்.எடுத்துக்கொண்ட கதையின் கதாபாத்திரங்களுக்காக உடலை எப்படியும் மாற்ற முயற்சித்து வருபவர்கள்.ரஜினின் இடத்திற்கு ஆசைப்படாமல் கமலின் நாற்காலி மேல் ஆசை கொண்டு உழைத்து வருபவர்கள்.இருவருமே ஒரே இடத்திற்கு முயல்பவர்கள்.இருவரின் முயற்சிகள் ,வெற்றிகள் ,எதிர்காலம் பற்றி பார்க்கலாம்.

விக்ரம் .முதல் படம் வெளிவந்தது 1990.முதல் வெற்றியை பார்த்தது 1999.ஸ்ரீதர்,பி.சி.ஸ்ரீராம்,விக்ரமன் போன்றவர்களின் படங்களில் நடித்தபோதும் தோல்வியே கண்டார்.பட வாய்ப்பு இல்லாமல் மலையாளம்,தெலுங்கு படங்களில் துணை நடிகர் லெவலுக்கு போனவர்.தமிழில் ,பிரபுதேவா, அப்பாஸ் ,அஜீத் (அமராவதி ) போன்றவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.பம்பாய் படத்தில் நடிக்க தேர்வு செய்யபட்டு பின் வாய்ப்பை இழந்தார்.ஒரே எதிர்பார்பான உல்லாசம் தோல்வி அடைந்தது.விக்ரமின்  தந்தை நடிகர் என்றாலும் பெரிய பின்புலம் எல்லாம் இல்லை.விக்ரமின் அம்மாவின் அண்ணன் நடிகர் தியாகராஜன் (நடிகர் பிரசாந்தின் அப்பா) என்ற போதும் பெரிதாக இவருக்கு உதவவில்லை.

ராதிகாவுடன் லண்டனில் எடுக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி படத்தில் நடிக்கும் நேரம் .சேது படம் பாதி முடித்த நிலையில் உள்ளது.ராதிகா அடுத்த தொடரில் முக்கிய வேடம் தருவதாக அழைக்கிறார்.விக்ரம்"ஒரு நல்ல படம் (சேது) நடித்துகொண்டிருக்கிறேன்.அது கை கொடுக்கும் என்று நினைக்கிறன்".ஒரு வழியா சேது ஹிட்.அதன் பின் கவனமாக படம் தேர்வு.தில்,ஜெமினி,தூள்,சாமி,பிதாமகன்,அந்நியன் இவை அதன் பின் இவர் கொடுத்த ஹிட் படங்கள்.ஆனாலும் போலீஸ் வேடமா முடியை ஓட்ட வெட்டி ,உடம்பை முறுக்கேற்றி காட்டுதல்.காசியில் பார்வையற்ற பாடகன்.அதிலும் இவரது அற்பணிப்பை பார்க்கலாம்.சமுராய்,கிங்,அருள்,மஜா,பீமா,கந்தசாமி,ராவணன்,ராஜபாட்டை இவை (இன்னும் சில)சறுக்கிய படங்கள்.

சூர்யா -தந்தை 70-80 களின் நாயகன்.முக்கியமாக நல்லபேர் பெற்றவர்.சூர்யாவின் அறிமுகம் எளிதாகவே இருந்தது.அஜீத் வெளியேறிய நேருக்கு நேர் படத்தில் நடிக்க தொடங்கினார்.அந்த படத்தில் ஒழுங்காக நடிப்பு  வராமல் கஷ்டப்பட்டவர்.பாடல் எடுக்க கல்கத்தா போனபோது இங்கே பிரியாணி நல்லயிருன்னு கேள்விபட்டேனே என்று சொல்லி டைரக்டர் வசந்திடம் வாங்கி கட்டிகொண்டார்.அத பட விமர்சனத்தில் (குமுதமோ ,விகடனோ ) சூர்யா நடனம் ஆடுவது அவருக்கும் கஷ்டம் ,அதை பார்க்கும் நமக்கு கஷ்டம் என்று எழுதினார்கள்.எதோ ஒரு விழாவுக்கு எல்லா நடிகர்களோடும் ரயிலில் சென்றபோது தூங்கிகொண்டிருந்த இவரையும் அப்பாஸையும் அதட்டி எழுப்பிய நடிகர்  ரகுவரன் "எப்படிடா உங்களுக்கு தூக்கம் வருது ? சினிமாவில் என்ன சாதிச்சுட்டு தூங்கறீங்க ? என்று திட்டி இவரை உசுப்பி விட்டார்.போய் சேரும்வரை கடும் வார்த்தைகளால் திட்டி அறிவுறுத்தி இருக்கிறார்.அதன் பின் மனதில் உறுதி எடுத்த சூர்யா தன் தனி வெற்றிக்காக(விஜய் இல்லாமல் ) ஆறு ஆண்டுகள் நந்தா வரும்வரை காத்திருந்தார்.அதன்பின் அஜீத் விலகியதால் ஜோதிகா சிபாரிசில் காக்க காக்க நடிக்கிறார்.தொடர்ந்து பிதாமகன்,கஜினி,வாரணம் ஆயிரம்,அயன்,சிங்கம் போன்ற வெற்றி படங்களை தந்துள்ளார்.நந்தாவுக்கு பின் என்றால் உன்னை நினைத்து,ஸ்ரீ,பேரழகன்,ஆயுத எழுத்து,மாயாவி,போன்ற படங்கள் சரிக்கி விட்டது.சில சுமாரான படங்களும் ( ஆறு,வேல்,ஆதவன் )உள்ளன.

இருவருமே படத்திற்கு படம் கடும் உழைப்புடன் செயல்படுகிறார்கள். இருவருமே நடுநடுவே கமல் எண்பதுகளில் முயற்சித்து போல் வணிக மசாலா படங்களிலும் அவ்வபோது நடிக்கிறார்கள்.இருந்தாலும் இருவரின் குறியும் ஒன்றுதான்.அது கமல் நாற்காலி.இதில் வயது சூர்யாவிற்கு கை கொடுக்கிறது.அவர் இன்னும் நாற்பதை தொடவில்லை.அதனால் உடல்,மனம் இரண்டும் பல பரீட்சைகளுக்கு ரெடி.ஐம்பது வயதை நெருங்கும் விக்ரம் உடல் அளவில் தயார் என்றாலும் இயற்க்கை வயதை முகத்தில் காட்டிவிடுகிறது.இன்றைய தமிழ் சினிமாவில் படங்களை தேர்வு செய்வதில் சூர்யாவை மிஞ்ச ஆளில்லை.அவசரப்படாமல் நாள் எடுத்துக்கொண்டு யோசித்து படங்களை தேர்வு செய்கிறார்.அந்த விஷயத்தில் விக்ரம் இன்னும் பொறுமையுடன் செயல் பட வேண்டும்.ராஜபாட்டை எல்லாம் தேவையே இல்லை.ஆனாலும் சூர்யா ஒப்பனையில் ,உடல் தோற்றத்தில் காட்டும் அக்கறை நடிப்பில் விக்ரமை ஒப்பிட்டால் குறைவு என்றே சொல்ல வேண்டும்.உடல் மொழி ,குரல், நடிக்கும் போது  சில PAUSE என்று சொல்லப்படும் அமைதி போன்றவற்றை விக்ரம் சூர்யாவை விட நன்றாக வெளிபடுத்துகிறார்.

என்ன இருந்தாலும் இருவருமே தன் நேரத்திற்காக காத்திருந்து ,கிடைத்ததும் அதில் முழுமையாக வெளிப்படுத்தி,அதில் வெற்றி கண்டதும் அதன் பின்னும் பொறுமையாக படங்களை தேர்வு செய்து வெற்றி பெறுவது என்று ஒரு "வெற்றி கதையை " நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.எந்த துறைக்கும் அந்த வெற்றி கதைகள் ஒரு பாடம் தான்.