Pages

Wednesday 16 May 2012

ரொம்ப சுமாரான 2 ஆங்கில படங்கள் :

சமீபத்தில்  நான் பார்த்த ரொம்ப சுமாரான 2 ஆங்கில படங்கள் :

ரொம்ப நாட்களாக என்னிடம் இருந்த 2 ஆங்கில படங்களை பார்க்க நேரமில்லையோ ,பார்க்க ஆர்வமில்லையோ தெரியவில்லை.இத்தனய்க்கும்  அவை நான் ரசிக்கும் thriller படங்கள் தான்.ஒரு வழியாக இரண்டையும் பார்த்தாகி விட்டது.சரி அதற்க்கு என்ன.அவை இரண்டும் மக்களாலும்,விமர்சகர்களாலும் பெரிதும் ரசிக்கபட்டவை.சிலருக்கு இந்த படங்கள் ரொம்ப பிடித்திருக்கலாம்.ஏனோ எனக்கு அந்த அளவு பிடிக்கவில்லை.

1 . THE SILENCE OF THE LAMBS (1991):




நகரில் நடக்கும் தொடர் கடத்தல்களும் ,கடத்தப்பட்ட பெண்கள் பிணங்களாக கிடைப்பதும் தொடர்ந்து,விசாரிக்கும் அதிகாரி,கேசை நாயகியிடம் கொடுக்கிறார்.ஏற்கனவே சிறையில் உள்ள HANNIBAL எனப்படும் மனித மாமிசம் சாப்பிடும் நாயகனை சந்தித்து உதவி கேட்கிறார் நாயகி.அவரும் சில குறிப்புகளை கொடுத்து உதவுகிறார்.தொடந்து நடக்கும் சம்பவங்களும் கொலைகாரன் யார்,ஏன் கொலை செய்கிறான்,அவனை பிடித்தார்களா?சிறையில் உள்ள நாயகனின் கதி என்ன ? இப்படி எல்லா கேள்விகளுக்கும் நீட்டி முழக்கி சொல்லி இருக்கிறார்கள்.இந்த படம் சிறந்த நடிகர்,நடிகை,இயக்கம் ,உட்பட ஐந்து ஆஸ்கார் விருது பெற்றதாம்.அப்படி ஒன்றும் பெரிதாக நடிக்க வில்லை. மொத்தத்தில் நான் ரொம்பவும் அதிகமாக கேள்விப்பட்டு ரொம்ப சுமார் படம்.மேலும் ஆச்சர்யம் ஊட்டும் படி imdb யில் 8.7 பெற்றுள்ளது.


2 .THE GAME (1997):




இதுவும் நான் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டு ஏமாந்த படம். நாயகன் ஒரு வங்கி முதலீட்டாளர்,பணக்காரர். .ரொம்பவும் திமிர்,ஈகோ, கொண்டவர்.அதனால் தன் மனைவியை பிரிந்து வாழ்பவர். தன் பிறந்த நாளில் தன் தம்பி பரிசளித்த வவுச்சர் எடுத்து கொண்டு அதன் முகவரிக்கு செல்கிறார்.அதன் பின் அவர் வாழ்க்கையே மாறிவிடுகிறது.தொடர்ந்து ஓட்டம்,துறத்தல் ,கொலை முயற்சி என்று தொடர்கிறது.இறுதியில் என்ன நடக்கிறது யார் காரணம் என்று பார்த்தால்,பெரிய ஏமாற்றம்,அல்லது இன்ப அதிர்ச்சி.ஆனால் திருப்தியில்லை.ஆனால் முந்திய படத்துக்கு இது பரவாயில்லை.

தமிழ் நடிகர்களை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதி வருகிறேன்,விரைவில் உங்கள் பார்வைக்கு.


2 comments:

  1. இப்பதான் இதை படித்தேன்...ரெண்டுல முதலில் சொன்ன படத்தை பார்த்திருக்கிறேன்..தெ கேம் இன்னும் பார்க்கவில்லை..ரொம்பவும் சுருக்கமா அழகா விமர்சனம் பண்ணிருக்கீங்க.சரளமான எழுத்து நடை, படிக்க மேலும் சுவாரஸ்யத்தை வழங்குகிறது.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. Unmaithan , sila satharana padangal entha vidha ethiparpum indri pakkum pothu semayana padamaga thondralam , sila nalla padangal high expectationodu pakkum pothu ivlothana endru aavathum undu , vimarsanam seybavargal ithai purindhu kondu over hype kodukkamal irunthal nanraga irukkum.

    ReplyDelete