Pages

Friday, 14 September 2012

AMERICAN PIE REUNION (2012) -18+ ஆங்கிலம்


AMERICAN PIE REUNION (2012) -18+  ஆங்கிலம் 


1999 வந்த AMERICAN PIE படத்தை நான் 2003 இறுதில் தான் ஒரு நண்பனின் அறையில் கணினியில் பார்க்க நேர்ந்தது.அதற்க்கு முன் JURRASIC PARK,MATRIX  சில ஜாக்கிசான் படங்கள் இவை மட்டுமே ,அதாவது இந்தியாவில் அரங்குகளில் வரும் பிரபலமான படங்கள் மட்டுமே பார்த்திருந்தவன் நான்.AMERICAN PIE படம் பார்க்க தொடங்கியதும் ஒரு வெளி படுத்த முடியாத மகிழ்ச்சியோடு படம் பார்த்தேன்.என்ன இது இதை ஆற்றி எல்லாம் கூடவா படத்தில் சொல்வார்கள்.இதற்க்கு முன் இதை பற்றி எல்லாம் பேசிய படம் இல்லையே என்று ஆச்சர்யத்துடன் படம் பார்த்தேன்.அப்போது என்  நண்பன் இந்த படம் மூன்று பாகங்கள் கொண்டது என்றும் அந்த படங்களும் உள்ளது என்று சொன்னான்.அடுத்த சில நாட்களில் அவற்றையும் அவன் புண்ணியத்தில் பார்த்தேன்.

அதன் பின் நான் ஆங்கில படங்களை தொடர்ச்சியாக தேடி தேடி பார்க்க தொடங்கியது 2007 முதல் தான்.அப்போது ஒரு டி.வி.டியில் ஆறு AMERICAN PIE படங்களையும் விற்றார்கள்.அதை வாங்கி தினமும் ஒரு படமாக திகட்ட திகட்ட பார்த்து முடித்தேன்.எது எந்த படத்தில் என்ன காட்சி என்பவை கூட ஞாபகம் இல்லாதபடி பார்த்தேன்.2010 இல் ஆறாவது பகுதியாக  BOOK OF LOVE பார்த்தேன்.ஆனால் நான் பார்த்த புதிய நான்கு  படங்களிலும் பழைய நடிகர்கள் இல்லை.நாயகனின்  அப்பா மட்டும் சில படங்களில்  வந்தார்.அதோடு சமீபத்தில் பதிவர் ஹாலிவுட் ரசிகன் இந்த புதிய AMERICAN REUNION பற்றி எழுதியதால் தான் அடுத்த பகுதி வந்ததே தெரியும்.சென்ற வாரா இறுதியில் படம் பார்த்தேன்.


கதை என்றால் திசைக்கு ஒருவராய் பிரிந்து விட்ட நண்பர்கள் 13 ஆண்டுகளுக்கு பின் நால்வர் (எப்போதும் வம்பில் சிக்கும் STIFLER தவிர ) மீண்டும் சந்தித்து ஒரு வார இறுதியை கொண்டாட முடிவெடுக்கின்றனர்.விதி விட்டதா STIFLER தற்செயலாக அவர்களுடன் சேர்கிறான்.மற்றவர்கள் ஒரு வித சங்கடத்துடன் அவனை சேர்த்து கொள்கிறார்கள்.(முந்தய படங்கள் பார்த்தவர்கள் STIFLER செய்யும் அட்டகாசங்கள் அறிந்திருப்பார்கள்)இனி என்ன ? அடுத்தடுத்து அவன் செய்யும் வம்புகளில் சிக்கி ஒவ்வொருவரும் அதில் மீள்கிறார்கள்.இதற்கிடையில் ஜிம்மின் தாய் இறந்து விட்டதால் துணை இன்றி தவிக்கும் அவன் தந்தைக்கு ஒரு கம்பெனி கிடைக்க அவரையும் பார்ட்டிக்கு அழைத்து வருகிறார்கள்.அப்புறம் ஒரே கூத்துதான் .நால்வருடைய  துணைவிகளும் கோபித்து கொள்கிறார்கள் பின் சமாதானம் அடைகிறார்கள்.

முதல் மூன்று படங்களுக்கு பின் இந்த படம் தான் ஓரளவு திருப்தி தருகிறது.எல்லாருமே அருமையாய் நடித்து இருக்கிறார்கள்.இந்த படத்தின் அடுத்த பகுதி என்றால் என்ன எதிர் பார்த்து வருவார்கள் என்பதை நன்கு உணர்ந்து தந்திருக்கிறார்கள்.சிலர் ரொம்பவும் வயதாகி போனது போல் தெரிகிறார்கள்(நாயகி).இந்த படம் போல் நம்மூரில் படம் எடுத்தால் ? ஊஹும் .பாய்ஸ் படத்துக்கே துரத்தி துரத்தி அடித்தவர்கள்.

ஜாலியாக ஒரு வார இறுதி நாளில் ஒரு படம் பார்க்கலாம்,சிரிக்கலாம்  என்றால் ஓகே .

இந்த செக்ஸ் காமெடி வகை படங்கள் பிடிக்கும் என்றால் நான் பரிந்துரைக்கும் படங்கள்:
ROAD TRIP (2000),EURO TRIP(2004),MILF (2010),OLD SCHOOL (2003),SEX DRIVE (2008).
மேலும் DOWNLOAD செய்பவர்கள் UNRATED VERSION இருந்தால் அதை பதிவிறக்குங்கள்.

Thursday, 13 September 2012

T20 உலக கோப்பை -அணிகள் ஒரு பார்வை -PART 2

T20 உலக கோப்பை அணிகள் -பாகம் 2

கிரிக்கெட் மோகம் குறைந்து விட்டதா தெரியவில்லை.தமிழ் படங்கள் பற்றி எழுதினால் மட்டுமே அதிகம் பேர் படிக்கிறார்கள்.ஆங்கில படங்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தொடர்ந்து வருகிறார்கள்.நான் கிரிக்கெட் பற்றி எழுதிய முதல் முழு பதிவு சென்ற t20 உலக கோப்பை அணிகள் பற்றிய பதிவு. மிக குறைந்த பேரே படித்துள்ளார்கள்.சரி படிப்பவர்களுக்காக எழுதுவோம்.
சென்ற பதிவில் பாகிஸ்தான்,இலங்கை ,தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளின் நிலை பற்றி பார்த்தோம் .இனி 

AUSTRALIA : கிட்டத்தட்ட கிரிக்கெட்டில் அமெரிக்கா போல் யாரையும் ஜெயிக்க விடாமல் ஆளுமை செய்து வந்தது.நம் இந்திய கிரிகெட் போர்டு கிரிக்கெட் வியாபார வியாபார விஷயங்களில் மட்டும் அமெரிக்கா போல் இருக்கிறது.நம்மை பகைத்து கொள்ள எந்த கிரிக்கெட் போர்டும் தயார் இல்லை.ஆஸ்திரேலியாவின் ஏகாதிபத்தியம் முடிந்து விட்டது .டெஸ்ட் ,ஒரு நாள் போட்டி போன்றவற்றை போல் அவர்கள் T20 போட்டிகளை அவ்வளவு தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. முதல் T20 உலக கோப்பை முதலே ஏனோ தானோ என்று ஆடி வருகிறார்கள்.அப்போவே அவர்கள் ஜிம்பாப்வே உடன் தோல்வி அடைந்து உள்ளார்கள்.தோல்வியை வெறுக்கும் அந்த அணியின் வீரர்கள் பொதுவாக வாய் சவடால் மூலம் தன்னோடு நன்றாக விளையாடும் வீரரை சாடுவார்கள்.மேக்ரத், பாண்டிங் எல்லாம் இந்த விஷயத்தில் கில்லாடிகள்.இப்போதுள்ள ஆஸ்திரேலியா T20 கேப்டன் ஜார்ஜ் பெய்லி  அணியில் இருக்கவே தகுதி இல்லாதவர்.அவரை போய் எப்படி கேப்டன் ஆகினார்கள் என்று ஆஸ்திரேலியாவிலேயே குழம்பி கொண்டிருக்கிறார்கள்.எந்த விதமான போட்டியிலும் சொல்லும்படி ஆடி இருக்காத அவர் கேப்டன்.சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் உள்ளார்.நான்கு ஆண்டுகளில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே இதுவரை விளையாடி உள்ளார்.தற்போதைய T20 ரேங்கிங்கில் பத்தாவது இடத்தில் உள்ளனர்.இதனால் கோபம் அடைந்த கேப்டன் "ரேங்கிங் சிஸ்டம் சரியில்லை.அப்போ அயர்லாந்து ஆஸ்திரேலியாவை வென்று விடும் என்று சொல்லிவிட முடியுமா என்று கேட்டு உள்ளார்.பதிலுக்கு அயர்லாந்து கோச் அயர்லாந்து ஆஸ்திரேலியாவை வெல்லும் என்று சொல்லி இருக்கிறார்.

SHANE WATSON: நம்பிக்கை அளிக்க கூடிய வீரர் என்றால் இவரை மட்டுமே சொல்லலாம்.காரணம் ஓரளவு CONSISTENT ஆக ரன் அடிப்பார்.எந்த விதமாகவும் ஆடக்கூடியவர்.பௌலிங் செய்வார்.கேப்டன் ஆக தகுதி உள்ளவர்.நீண்ட நாளாக அணியில் உள்ளவர்.

DAVID WARNER : நம் சேவாக் போன்ற ஆட்டக்காரர்.பட்டால் பாக்கியம்.அடித்தால் ஒரே அடி .இல்லையா .அவ்வளவுதான்.ஐ.பி.எல் போட்டியில் சதம் எல்லாம் அடித்து உள்ளார்.விரைவாக ஓடி பௌண்டரி தடுப்பதில் சிறந்தவர்.எப்போ அவுட் ஆவர் என்று சொல்ல முடியாது.
DAVID HUSSEY : உலகில் அதிக T20 போட்டிகள் விளையாடி இருப்பவர்.ஆள் ரவுண்டர் .விரைவாக ரன் அடிப்பார்.இறுதி ஓவர்களில் கை கொடுப்பார்.ஸ்பின் பௌலிங் போடுவார்.

ENGLAND: என்னதான் கிரிகெட்டின் தாயகம் என்று சொன்னாலும்,அதே பழைய டெஸ்ட் போட்டிகளின் பழக்கத்தில் இருந்து வர முடியாதவர்களாக இருக்கிறார்கள்.சமீப காலங்களாக பரவாயில்லை.பீட்டர்சன் கழட்டிவிட பட்டது பெரும் சரிவு.அவர்கள் பலத்தில் ஒரு 30% கழிந்து விட்டதாகவே நினைக்கிறேன்.சென்ற முறை சாம்பியன் .அவர்கள் வென்ற ஒரே ICC TROPHY அது மட்டும் தான்.தற்போது ரேங்கிங்கில் முதல் இடத்தில் உள்ளனர்.பாப்போம்.
KIESWETTER : கீப்பர் .தொடக்க ஆட்டக்காரர்.இதுவரை ஓரளவு கை கொடுத்து உள்ளார்.கீப்பிங்கும் பரவாயில்லை.
GRAEME SWAN : பாகிஸ்தானின் அஜ்மலுக்கு பின் தற்போதைய சிறந்த சுழற பந்து வீச்சாளர்.இலங்கையில் போட்டிகள் நடப்பதால் இவர் பந்து வீச்சு கை கொடுக்கலாம்.பந்து வீச்சில் பெரிதும் இவரை நம்பி உள்ளது இங்கிலாந்து.மட்டையும் சுழற்றுவார்.
RAVI BOPARAA: நல்ல அனுபவம் உள்ளவர்.தேவைக்கு ஏற்ப மாற்றி ஆடுவார்.ஓரளவு ஸ்பின் தாக்கு பிடிப்பார்.மித வேக பந்து வீச செய்வார்.

INDIA :  ஒரு நாள் போட்டிகளின்  சாம்பியன் .கிரிக்கெட் பார்க்கும் மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சேர்த்தால் அந்த அளவுக்கு இந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள்.யாருமே எதிர்பார்க்கதபோது 2007 இல் முதல் t20 உலக கோப்பை கைப்பற்றியது.அனால் அதன் பிறகு அடுத்த இரண்டு உலக கோப்பைகளிலும் மோசமாக ஆடினார்கள்.இத்தனைக்கும்  கிரிக்கெட் உலகிற்கே  படியளக்கும் ஐ.பி.எல் வேறு நடத்துகிறோம்.கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடைவேளைக்கு பின் இலங்கையில் ஜூலையில் ஆடினோம் .அடிக்கடி இலங்கை செல்வதால் அந்த அணிக்கு பிறகு ஓரளவு பிட்ச்கள் பற்றி புரிதல் இருக்கும்.தோனி நேற்று "இலங்கை பிட்ச்கள் மாறி விட்டது.நான் ஆட தொடங்கிய 2005 காலங்களில் இருந்ததுபோல் இனி ஸ்பின் அங்கே உதவாது என்றும் ,இந்திய அணி யுவராஜ்,கோலி,ரெய்னா போன்ற பகுதி நேர பந்து வீச்சாளர்களை கொண்டே இறங்கும்.அதன் மூலம் ஏழு பாட்ஸ்மென்,நான்கு பவுலர் என்று இறங்குவோம் என்று கூறி இருக்கிறார்.
SEHWAG : ஒரு ஐந்து ஓவர் நின்று அடித்து கொடுத்து விட்டால் கூட போதும்.அதிலேயே போதுமான ரன் அடித்திருப்பார்.எல்லா வகையான போட்டிகளிலும் வேகமாகவே ஆடி வருவதால் T20 மோடு மாறுதல்  பிரச்சனை  இல்லை.தோனியோடு பிரச்சனை என்றதால் மட்டுமே மீடியாவில் பெயர் அடிபட்டது.மற்றபடி  சொல்லிகொல்லும்படி சமீப காலங்களில் ஆடவில்லை .தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

GAMBIR : சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறார்.கொஞ்சம் நம்பலாம்.இறுதி போட்டி போன்ற முக்கிய போட்டிகளில் சிறப்பாக ஆடுவார்.என்ன இவருக்கு எப்படி போட்டு அவுட் ஆக்கலாம் என்று சில அணிகள் தெரிந்து வைத்து கீபிங் கேட்ச் ஆக வைத்து விடுகிறார்கள்.

KOHLI : சினிமாவில் சூர்யா போல் தற்போதைய  ஹிட் இவர்.தொடுவதெல்லாம் ரன்.தன் LIFETIME FORM இல் இருக்கிறார்.தற்போதைய ஒரே நம்பிக்கை.பீல்டிங்கும் நன்றாக செய்வார்.என்ன ஆர்வ மிகுதியால் தன் கைக்கு வரும் பந்தை BATSMAN உள்ளே இருக்கனா வெளியே இருக்கனா என்று கூட கவனிக்காமல் ஸ்டாம்பில் அடித்து ஓவர் த்ரோ கொடுத்து விடுவார்.கவாஸ்கர் வர்ணனையில் அடிக்கடி கடிந்து கொண்டுள்ளார்.

YUVRAJ : புற்று நோயில் இருந்து குணமாகி நியூசிலாந்து போட்டியில் 34 ரன்கள் அடித்தார்.தோனி பெரிதும் நம்பும் ஐந்தாவது பந்து வீச்சாளர்.

RAINA : T20 வீரர் என்று சொல்லலாம்.சமீபமாக சரியாக ஆடவில்லை.ஆனால் டோனி இவரை நம்புகிறார்.

ROHIT SHARMA : ஏகப்பட்ட பேர்,வர்ணனையாளர்கள் ,மீடியா போன்றவை மிகவும் சப்போர்ட் செய்யும் வீரர்.சொல்லும்போதே MUCH TALENTED என்று சொல்லித்தான் சொல்வார்கள்.இருந்தும் தரப்பட்ட எக்கச்சக்க வாய்ப்புகளை  வீணடித்து உள்ளார்.இவரை போல் இன்னும் வாய்ப்பு கிடைக்கும் வீரர் இனி இருப்பாரா என்று சொல்ல முடியாது.

TIWARY : அதிகம் வாய்ப்பு கிடைக்காத வீரர்.கிடைத்த சில போட்டிகளில் நிருபித்து உள்ளார்.பாட்டிங் வரிசையில் கடும் போட்டி இருப்பதால் யாரவது சரியாக ஆடாவிட்டால்,காயம் ஏற்பட்டால் அணியில் இடம் பெறலாம்.

PATHAN: சில தொடர்காளாக நன்றாக விளையாடி வருகிறார்.பார்க்கலாம்.
ASHWIN: ஐ.பி.எல் போட்டிகளில் பந்து வீசி அனுபவம் உள்ளதால் நெருக்கடி தரலாம்.டோனி நம்பும் வீரர்.

ZAHEER: இருக்கும் ஒரே உலக தர பந்து வீச்சாளர்.T20 யில் பெரிதாக சாதித்ததில்லை.உலக கோப்பை முடிந்ததும் T20 யில் ஓய்வு பெறுவார் என்று சொல்கிறார்கள்.

BALAJI,DINDA,HARBAJAN  போன்றோர் இருக்கிறார்கள்.
DHONI: சென்னையில் நடந்த நியூசிலாந்து  போட்டியில் இவரது ஆமைவேக பாட்டிங்கினால் தோற்றோம்.இருந்தும் கை கொடுப்பார் என்று நம்பலாம்.இங்கிலாந்த் ,ஆஸ்திரேலியா தொடர்களில் தோற்றதால் நெருக்கடியில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.அதன் பிறகு இலங்கையில் ஒரு நாள் தொடர் வென்று உள்ளோம்.இதில் தோற்றாலும் அவர் பதவி தப்பிவிடும்.

இதர அணிகள்: WEST INDIES அணியில் GAYLE,POLLARD,BRAVO ஆகியோருடன் SUNIL NARAINE அந்த நாளில் நன்றாக விளையாடினால் வெற்றி பெறலாம்.IRELAND, BANGLADESH போன்றவை அதிர்ச்சி தரலாம். AFGANISTAN அணியில் ஒரு பவுலர் பயங்கரமாக பந்து வீசுவதாக சொல்கிறார்கள்.
மற்றொரு சிறப்பு அம்சம் STAR CRICKET இல் ஒளிபரப்பாவது.அதில் கிரிக்கெட் பார்த்தல் தான் பிடிக்கிறது.மற்றவை இது போல் இல்லை.அதுவும் தூர்தர்ஷனில் பார்ப்பதை விட சும்மா இருக்கலாம்.

இந்த பதிவின் முதல் பாகம் லிங்க் : http://scenecreator.blogspot.in/2012/09/t20.html

Wednesday, 12 September 2012

T20 உலக கோப்பை -அணிகள் ஒரு பார்வை :


T20 உலக கோப்பை -அணிகள் ஒரு பார்வை :

இதோ மீண்டும் ஒரு உலக கோப்பை கிரிக்கெட் .இந்த முறை T20.இலங்கையில் நடக்க இருக்கிறது .செப் -18 அதாவது வரும்  செவ்வாய் தொடங்குகிறது.இப்போது நடக்க இருப்பது நான்கவது T20 உலக கோப்பை.கிரிக்கெட் என்றாலே இன்று (பலர்) பார்க்க விரும்புவது T20 மட்டும் தான்.காரணம் 3.30 மணி நேரத்தில் மொத்த போட்டியும் முடிந்து விடும்.சாவகாசமாக ஐந்து நாள் டெஸ்ட்,ஒரு நாள் போட்டிகள் வேகமாக  ஈர்ப்பு குறைந்து வருகின்றன.மேலும் பலமான அணியோ பலம் குறைந்த அணியோ அந்த நாளில் அந்த இருபது ஓவர்களில் பேட்டிங் ,பௌலிங் ,பீல்டிங் யார் சிறப்பாக செய்கிறார்களோ அவர்கள் ஜெயிக்க முடியும்.அதனால் தான் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை எளிதில் இதில் வீழ்த்தி உள்ளது.நம்மிடம் சுருண்டு வரும் நியூசீலாந்து இதுவரை நம்மோடு விளையாடிய அணைத்து (நான்கு) T20 போட்டிகளில் நம்மை வீழ்த்தி  உள்ளது.வேகம் வேகம் வேகம் இதுவே T20.

இதுவரை நடந்துள்ள மூன்று உலக கோப்பைகளில் இந்தியா,பாகிஸ்தான்,இங்கிலாந்த் இவை சாம்பியன் ஆகி உள்ளன.இந்த முறை அணிகள் நிலைமை ஒரு மாதிரி தெளிவில்லாமல் இருக்கிறது.பல வீரர்கள் இப்போது இல்லை.பல புதிய வீரர்களை கொண்டு களம் இறங்குகிறது.மொத்த அணிகளை அலசுவதை விட குறிப்பிட்ட சில அணிகளை பற்றி அதன் பலம் பலவீனம் ,கவனிக்க வேண்டிய வீரர்கள்,வெற்றி வாய்ப்பு பற்றி பார்க்கலாம்.
SOUTH AFRICA
SRI LANKA
.PAKISTAN
AUSTRALIA 
ENGLAND 
INDIA 
மற்றும் இதர அணிகள் .
மேற்சொன்ன அணிகளை பற்றி ஒவ்வொரு பதிவிலும் பார்க்கலாம்.உலக கோப்பை தொடங்க இன்னும் ஆறு  நாட்களே உள்ள நிலையில் முதல் மூன்று அணிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

SOUTH AFRICA:
               எந்த ஒரு உலக கோப்பை தொடங்கும் போதும் வெல்ல வாய்ப்புள்ள அணியாக ,அதிகம் பேர் வெல்லும் என்று சொல்லும் அணியாக இருக்கும்.அவர்களும் அதற்க்கு ஏற்றாற்போல் முதல் ரவுண்டு தோல்வியே இல்லாமல் பெரும் வெற்றிகளோடு முழு புள்ளிகளோடு  அடுத்த சுற்றுக்கு வருவார்கள்.நாக் அவுட் ரவுண்டு தான் அவர்களுக்கு ஆப்பு வைத்து விடும்.அதுவும் எளிதாக வென்று விடுவார்கள் என்று தான் முதல் பாதி ஆட்டமும் இருக்கும்.ஆனால் எதோ ஒரு சாபம் அவர்களை தடுத்து விடுகிறது.ஒரு ICC CHAMPIONS TROPHY தவிர பெரிதாக எந்த ICC கோப்பையும் வென்றதில்லை.இந்த முறை பாப்போம்.
AB DEVILLERS : கேப்டன்.இவர் களத்தில் இருக்கும் வரை எந்த இலக்கும் முடியாதல்ல.முக்கிய விக்கெட் இவர்.சென்ற ஐ பி எல் போட்டியில் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட ஆட்டத்தை இவர் வென்று கொடுத்ததே சான்று.
HASIM AMLA : இவர் ஒரு டெஸ்ட் வீரர் என்று சொல்லலாம்.எப்படியோ அட்ஜஸ்ட் செய்துகொண்டு பால் -ரன் சரி செய்து விளையாடி விடுகிறார்.அச்சுறுத்தும் வீரர் என்று சொல்ல முடியாது.ஒரு பக்கம் நின்று விட்டால் அவ்வளவுதான்.அவுட் ஆக்குவது கஷ்டம்.ஜாக் காலிஸ் கூட இப்படிதான்.
JP DUMINY : ஐந்து அல்லது ஆறாவது களம் இறங்கும் வீரர்.விரைவாக ரன் அடிப்பார்.கிட்ட அடித்துவிட்டு ரெண்டு ரன்கள் ஓடிவிடுவார்.பௌலிங் செய்ய கூடியவர்.என்ன எப்போதும் ரன் அடிப்பார் என்று சொல்ல முடியாது.ஆனால் தவிர்க்க முடியாதவர்.
DALE STEYN : டெஸ்ட் வீரர் தான்.ஒரு நாள் போட்டியில் கூட பரவாயில்லை .இவர் சாதனைகள் எல்லாம் டெஸ்டில் தான்.இருந்தாலும் இவர் பௌலிங் ரன் அடிக்க சிரமம் ஏற்படுத்தும்.

SRI LANKA :

அவர்கள் நாட்டில் உலக கோப்பை நடப்பது அவர்களுக்கு பிளஸ்.சென்ற ஒரு நாள்  உலக கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றத்தில் இருந்து ரொம்பவும் அதிர்ச்சியில் இருந்தார்கள்.அந்த வெறி இருக்கும்.சரியான நேரத்தில் FORM வந்துவிடுவார்கள் .

DILSHAN: இவரை விக்கெட் எடுத்து விட்டால் பாதி வெற்றி.இதுவே போதும் இவர் பேர் சொல்ல.DILSCOOP என்று சொல்ல படும் இவர் கண்டுபிடித்த ஷாட் பால் செய்யப்பட்ட பின் கீப்பர் தலைக்குமேல் தூக்கி அடித்து பௌண்டரி அடித்து பந்து வீசுபரை வெறுப்பேற்றி விடும்.இவர் வீசும் பந்தும் சுலபமாக அடிக்க முடியாது.களத்தில் வெறியாக ஆடும் வீரர்.
JAYAWARDENE : கேப்டன் .பொறுப்பு ஒரு ரவுண்டு அடித்து மறுபடியும் இவரிடமே வந்து சேர்ந்து உள்ளது.கேப் பார்த்து பந்தை தள்ளி நோகாமல் ரன் எடுத்து விடுவார்.சாதுர்யமான வீரர்.பௌலிங் மாற்றம் ,பீல்டிங் மாறுதல் செய்வதில் வல்லவர்.
MALINGA : சிங்கம் மாதிரி சீறி வந்து யார்கர் போடுவார்.இன்னும் கூட நிறைய வீரர்கள் திணறி  வருவதை பார்க்கலாம்.இறுதி ஓவர்களில் பந்து வீசுவதில் இன்று உலகிலேயே சிறந்த வீரர்.அவ்வபோது சிக்ஸர்களும்  பறக்கவிட்டு பாட்டிங்கிளும்  அசத்துவார்.

PAKISTAN: 
          அது என்னவோ தெரியவில்லை உலக கோப்பை என்றவுடன் என்கிருந்தோ அவர்களுக்கு தெம்பு வந்து விடுகிறது.பற்பல சர்ச்சைகள் சூதாட்டம்,மற்ற நாடுகள் அந்த நாட்டிற்கு போகாமல் இருப்பது போன்றவை சேர்ந்து அவர்களுக்கு தங்களை நிருபிக்கும் உற்சாகம் வந்து விடுகிறது என்று நினைக்கிறேன் .பெரும்பாலும் செமி பைனல் கட்டத்தை அடைந்து விடுவார்கள்.கடந்த சில வருடங்களாக அவ்வளவாக டெஸ்ட் ஆடாமல் ஒருநாள் ,T20 ஆடி வருவதால் அதே மோடில் இருப்பார்கள்.அது ஒரு பிளஸ்.அவர்களின் பல வீரர்கள் வேறு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு T20 தொடர்களில் பங்கேற்று ஆட்டம் பழகி வந்ததும் ஒரு பிளஸ்.
AFRIDI : ஒரு நாள் போட்டியையே T20 போலதான் ஆடுவார்.ஒரு மூன்று ஓவர் நின்றால் கூட ஆட்டத்தின் போக்கே மாறி விடும்.பந்து வீச்சும் ரொம்ப டைட் லைன் .அடிப்பது கஷ்டம்.எதிர் அணியின் முக்கிய் விக்கெட் எடுத்து விடுவார்.SRILANKAN PREMIER LEAGUE ,BIG BASH உள்பட பல நாட்டு T20 தொடர்களில் பங்கேற்று அனுபவம் உள்ளவர்.
ABDUL RAZAQ :  நீண்ட வருடங்காக அணியில் உள்ளவர்.நடுவில் ICL போய் வந்தவர்.சில ஓவர்கள் பேட்டிங் ,சில ஓவர் பௌலிங் சில சிக்ஸர் இவை நிச்சயம் .இறுதியில் இவர் கட்டங்களில் இருந்தால் எந்த இலக்கையும் துரத்தலாம்.
SAEED AJMAL : உலகின்  தற்போதைய NUMBER : 1 சுழற் பந்து வீச்சாளர்.சுழற் பந்தை நான்கு சமாளிக்கும் ஆசிய அணிகளே இவர் பந்தை சமாளிக்க கஷ்டப்படுகிறார்கள்.மற்ற அணிகளை பற்றி சொல்ல வேண்டாம்.எதிர் அணிக்கு கடும் சவால் இவர் பந்துகள்.ரன் கொடுப்பதும் ரொம்பவும் குறைவு.கடைசி ஓவர்களில் ரொம்ப கஷ்டம்.

ஆஸ்திரேலியா ,இங்கிலாந்த் ,இந்திய மற்றும் இதர அணிகளின் தற்போதைய நிலைமை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.