Pages

Thursday, 5 July 2012

HORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1


HORROR  படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1

பார்வையாளர்களின் மனதில் ஒரு வித பயத்தையும் ,அவர்களின் எண்ண ஓட்டத்தில் ஒரு பரபரப்பையும் எற்படுதுபவையே HORROR படங்களின் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.அதற்காக படத்திற்கு தேவை இல்லாத ,திணிக்கப்பட்ட கட்சிகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இதில் பல தீம்கள் உண்டு. பேய் ,ரத்தக்காட்டேரிகள் ,தெரியாத இடத்தில மாட்டிகொள்ளுதல்,அமானுஷ்ய வீடு,அதீத வன்முறையுடன் கொடுமை படுத்துதல்,ஆளை கொள்ளும் வைரஸ்,மனநலம் பாதிக்க பட்ட கொலைகாரன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழில் இதுவரை என்ன மொத்தம் இதுவரை ஒரு முப்பது திகில் படம் வந்திருக்குமா ?அதில்  அதே கண்கள், யார் நீ (ஜெய்சங்கர் நடித்தது),உருவம் (மோகன்),யாவரும் நலம் என்று மிக சில படங்களே தேறும்.மற்றவை ஆங்கில பட தழுவல்களே.மலையாளத்தில் சில படங்கள் உண்டு.தெலுங்கில் சமீப காலங்களில்  A FILM BY ARAVIND என்ற படம் நல்ல முயற்சி.ஹிந்தியில் எனக்குதெரிந்து பெரும்பாலும் ஆங்கில ,உலக படங்களில் இருந்தே உருவபடுகின்றது.
இனி 1970 கள் முதல் இன்று வரை சில தீம்கள்  பற்றியும் அந்த வகையில் சிறந்த படங்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க பார்கிறேன்.1960 களில் நான் பார்த்ததில் HITCHCOCK IN PSYCHO, ROMAN POLANSKI IN REPULSION இவையே சிறந்தவை.இனி எழபதுக்கு வருவோம்.

1970 கள் :
எழுபதுகளின் தொடக்கத்தில் 1973 இல் THE EXORCIST படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பீதியை கிளப்பியதை தொடர்ந்து வரிசையாய் அதே போன்ற படங்கள் வந்தது.அதோடு 76 இல் THE OMEN படம் மட்டுமே சொல்லிகொள்ளும்படியாக இருந்தது.இதை ஜென்ம நட்சத்திரம் என்று நம்ம ஊரில் சீன் மாறாமல் எடுத்தார்கள்.அதன் பின் ஆங்கில படங்கள் ஒரு புது விதமான தீம் பிடித்தார்கள்.அதாவது கொடூரமான ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறைகளோடு படங்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.THE HILLS HAVE THE EYES,TEXAS CHAINSAW MASSACRE போன்ற படங்கள் ஒரு குழுவாக அல்லது குடும்பமாக போய் மாட்டி கொள்வதை மையமாக கொண்டு வந்து வெற்றி பெற்றது.STEPHEN KING என்ற பிரபல எழுத்தாளர் பல வித்யாசமான திகில் கதைகள் எழுதி வந்தார்.அவரது CARRIE என்ற கதையை அதே பேரில் எடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் கதைகளுக்கு கிராக்கி ஏற்பட்டது.

1980, 1990 அடுத்த பகுதிகளில் 


Wednesday, 4 July 2012

சமீபத்தில் பார்த்த சில ஆங்கில படங்கள்

சமீபத்தில்  பார்த்த சில ஆங்கில படங்கள் :

SHALLOW GRAVE (1994):
                  ஒரு அபார்ட்மெண்டில்   குடியிருக்கும் மூவர் தங்களுடன் இன்னும் ஒருவரை சேர்த்துக்கொள்ள முடிவெடுத்து பலகட்ட நேர்முகங்களுக்கு பின் ஒருவனை சேர்த்துக்கொள்கின்றனர்.மறுநாள் அவன் தன் அறையில் இறந்து கிடக்கிறான்.ஒரு பெட்டி நிறைய பணம்.இனி என்ன? ரொம்ப ஆவலாக பார்த்த படம்,காரணம் நம் slumdog millionare ஆஸ்கார் பட டைரக்டர் டானி பாயல் இயக்கிய முதல் படம்.படம் செம மொக்கை .பார்த்து விடாதீர்கள்.

TRESPASS (2011)  :   சில நடிகர்கள் காலம் போக போக மொக்கை படங்களாக நடிப்பர்.நம்ம நிக்கோலஸ் கேஜ் அப்படிதான்.90 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர்.இந்த படத்தில் வைர வியாபாரியான இவர் வீடு ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது.மனைவி மற்றும் மகளோடு வாழ்ந்து வருகிறார்.அந்த வீட்டுக்கு cctv கேமரா செட் செய்ய வருபவன் ,இவன் மனைவியோடு  கள்ள தொடர்பு  கொண்டு வீட்டை கொள்ளை அடிக்க தன் கும்பலுடன் வந்து இவர்களை மிரட்டுகிறான். ரொம்ப சுமார்.வெட்டியாக இருந்தால் மட்டும் பாருங்கள்.

THE EXPENDABLES (2010):
                சில விமர்சங்களை படித்து இத்தனை நாள் பார்க்காமல் இருந்தேன்.சரி பார்த்து தொலைத்தால் டெலிட் செய்யலாம் என்று பார்த்தேன்.படம்  ஏகப்பட்ட எதிர்பார்போடு ஒரு பட்டாளத்தோடு  வந்தது.படத்தில் ஒன்றுமே இல்லை.80 களில் வந்த படங்கள் போன்ற கதை.இதே போல் நம்மூரில் 90 கதைகளில் விஜய் நடித்தால் தோல்வி அடைகின்றது .எப்படி அங்கே ஹிட் என்பது தெரியவில்லை.இதில் இரண்டாம் பாகம் வேறு வர உள்ளது. 
         
DONNER PASS (2012)
          நான்கு நண்பர்கள் ,வார இறுதி .ஒரு பயணம் .அங்கே ஆபத்து. திகில் படம் எடுக்க ஈசி ஆன பார்முலா. இந்த வகையில் நானே ஏராளமான படங்கள் பார்த்துள்ளேன்.இந்த படம் சில குட்டி குட்டி கதை திருப்பத்தின் மூலம் வித்தியாச படுகிறது.ஒரு முறை பார்க்கலாம்.



Tuesday, 3 July 2012

STUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்


STUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம் 

இது உண்மை சம்பவம் என்று தொடங்குகிறது.நள்ளிரவு நேரம் ,சாலை வெறிச்சோடி  கிடக்கிறது,வேகமாக வரும் கார் ,பாதையை கடக்கும் ஒருவனை இடித்து தள்ளி செல்கிறது.அடிபட்டவன் சாகாமல் பிழைத்துக்கொண்டு தன்னை இடித்தவனை கொள்ள முயற்சிப்பதாக நிறைய படங்கள் ( i know wnat you did last summer, hit and run உட்பட நிறைய) பார்த்திருக்கிறோம்.அதில் இருந்து இந்த படம் எப்படி வேறுபடுகிறது? பார்க்கலாம்.


கதை ஒரு வெள்ளி கிழமை பிற்பகல் தொடங்குகிறது.நடு வயதில் இருக்கும் வேலையை இழந்த நம் ஹீரோ டாம்,அறை வாடகை குடுக்க முடியாமல் அங்கிருந்து துரத்த படுகிறான்.வேலை வாய்ப்பு அலுவலகமும் அலை கழிக்க தங்க இடம் இன்றி ,ஒரு பூங்காவில் தஞ்சமடைகிறான்.இரவு இரண்டு மணி அளவில் போலீஸ் துரத்தி விடுகிறது.பூங்காவை விட்டு வெளியே வந்த டாம் மெல்ல சாலையில் நடந்து செல்கிறான்.
ஒரு முதியோர் இல்லத்தில் வேலை பார்க்கும் பிராண்டி தன் பதவி உயர்வுக்கு காத்திருக்கிறாள்.அதே வெள்ளி கிழமை இரவு தன் காதலனோடு ஒரு பாரில் நள்ளிரவு வரை குடித்துவிட்டு ஆட்டம் போட்டுவிட்டு கூடவே போதை மாத்திரையும் சாப்பிட்டு தள்ளாடியபடி தன் காரை எடுக்கிறாள்.நேரம் அதே இரண்டு மணி.தன் காதலனுடன் செல்போன் பேசியபடி வரும் பிராண்டி சாலையை கடக்கும் நம் டாமை மோதிவிடுகிறாள்.காலில் மோதப்பட்ட டாம் ,முன் புறம் கண்ணாடி உடைந்து ,அவன் உடல் கார் மீதே கிடக்க ,மோதிய பயத்தில் போதை தெளிந்த பிராண்டி அப்படியே அவன் உடலோடு தன் வீட்டு ஷெட்டில் நிறுத்துகிறாள்.மெதுவாக கண்முழிக்கும் டாம் உதவிக்கு அழைக்க இவள் பயந்து ஓடிவிடுகிறாள்.சிறிது நேரத்தில் காதலியோடு உல்லாசமாக இருக்கலாம் என்று பிராண்டி வீட்டிற்க்கு வரும் காதலனிடம் தான் ஒருவனை மோதிவிட்டதாக சொல்லும் பிராண்டி அவன் உடல் தன் கார் பான்நெட் மீது உள்ளதை சொல்லவில்லை.தன் சந்தோஷத்திற்கு இது இடைஞ்சல் என்று நினைக்கும் காதலன்,தான் இது போல் நிறைய விபத்துக்கள் ஏற்படுத்தி உள்ளதாகவும் ,யாரும் பார்க்காததால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி அவளுக்கு மீண்டும் ஒரு போதை மாத்திரை தந்து இருவரும் உல்லாசமாய் இருக்கிறார்கள்.மறுநாள் காலை தன் பணிக்கு செல்லும் பிராண்டி தன் செல்போன் காரில் இருப்பதை உணர்ந்து விரைகிறாள்.அதற்குள் போனை எடுக்கும் டாம் உதவிக்கு முயற்சிக்க battery தீர்ந்து விடுகிறது.அங்கே வரும் ப்ரண்டியிடம் டாம் தன்னால் அவளுக்கு பிரச்சனை இருக்காது என்றும் ,சரியாக பார்க்காமல் ரோட்டை கடந்தது தன் தவறு என்று போலீசில் சொல்லிவிடுவதாகவும் சொல்லி  கெஞ்சுகிறான்.உயிருக்கு போராடி உதவி கேட்க்கும் டாமிடம் போலீஸ் ,கேஸ் ,கோர்ட் இதெல்லாம் பயந்து தான் உதவ முடியாது என்றும் அவனை விரைவில் இறந்து விடசொல்கிறாள்.மேலும் தன் காதலன் உதவியுடன் டாமை கொன்று உடலை இரவில் அப்புறபடுத்த முயலுகிறாள்.இறுதியில் என்ன ஆனது என்பதை ரொம்பவும் ஜோராக காட்டியிருக்கிறார்கள் .நடிப்பும் குறை சொல்ல முடியாத ஒன்று.ஆரம்பம் முதலே அருமை.வள வள காட்சிகள் இல்லை.மொத படமே 85 நிமிடங்கள் தான்.


*texas நகரத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவமான  இதில் அந்த பெண் 50 வருடம் சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.
* 2007 வந்த இந்த படத்தை விடுவார்களா நம்ம ஆட்கள் .இந்த படத்தை இரண்டு வருடத்தில் Accident on hill road என்ற பேரில் ஹிந்தியில் சுட்டுவிட்டார்கள்.
* Rotten tomatoes- 72% fresh 
*IMDB-6.6 
* வயது வந்தவர்களுக்கான காட்சிகள் இருப்பதால் கவனம் .
* த்ரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.