Pages

Tuesday 6 August 2013

THE CONJURING --- டெம்ப்ளட் பேய் படம்

THE CONJURING --- டெம்ப்ளட் பேய் படம் 




எனது 100 வது பதிவு. இது.பதிவு எழுத தொடங்கும்போது 100 பதிவு போடுவேன் என்று நினைத்ததில்லை.ஒரு ஆசையில் ரொம்ப நாளாய் படித்து கொண்டே இருக்கிறோமே நாமே எழுதுவோம் என்று தொடங்கியது.என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கும் ,அவ்வபோது படிப்பவர்களுக்கும் நன்றி.


சமீப காலங்களில்  இப்படி ஒரு பேய் படம் பார்த்ததில்லை .
ஆஹா ,மிரட்டி இருக்கிறார்கள்.
இந்த படம் பார்த்துவிட்டு வந்தால் பகலிலேயே பயமாக இருக்கிறது.
THE EXORCIST, THE AMITYVILLE HORROR போன்ற படங்களை பார்த்தது போல் இருந்தது.
IMDB RATING -8.0
ROTTEN TOMATOES- 97% FRESH
படம் வந்த 2 வாரங்களிலேயே $ 136,000,000 வசூல்.
மேலும் 
நம்ம ஊரில் 

TIMES OF INDIA-- 3.5/5
THE HINDU-- VERY GOOD SCARY FILM 
CNN IBN -3.5 

இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் ,ஆஹா அற்புதம் என்று பேச்சு.HORROR பட ரசிகனாய் இருந்துவிட்டு இந்த படத்தை ;பற்றி இப்படி கேள்விப்பட்டு அஹா செம வேட்டை நமக்கு என்று நினைத்தேன் ,இதுவரை ஆங்கில HORROR படத்தை திரை அரங்கில் போய்  பார்த்தது கிடையாது.பெரும்பாலும் இந்தியாவில் ரிலீஸ் இருக்காது.இந்த படம் இப்போது இங்கே வந்துள்ளது.போகலாமா என்று எண்ணம் தோன்றியது.

டவுன்லோட் செய்ய நல்ல பிரிண்ட் சப் டைட்டில் எல்லாம் வர சில வாரங்களாவது பிடிக்கும்.அதற்குள் பார்த்தாக வேண்டுமே.சரி என்று என் நண்பன் செல்வாவிற்கு போன் செய்து இந்த படத்தை பற்றி சொன்னேன்.அவனும்  ட்ரைலர் பார்த்து ஆர்வமாகி இன்று போகலாமா பார் என்றான்.சரி என்று நெட்டில் எந்த தியேட்டர் என்று தேடினேன்.கீழ்பாக்கம் சங்கம் அரங்கம் என்று முடிவு செய்து நேற்று 5-AUG  இரவு 7 மணி காட்சி  போனோம்.அரங்கம் முக்கால்வாசி நிரம்பியது.

சரி படம் எப்படி ? அதானே .அதை பற்றி எழுத ஒன்றும் இல்லாததால் தானே இவ்வளோ போன கதை எல்லாம் எழுதி கொண்டிருக்கிறேன்.அட என்ன சொல்றே என்று கேட்கிறீர்களா ?  நீங்கள் இது வரை ஒரு பேய் படத்தில் ஒரு தனி வீடு,அங்கே வரும் ஒரு குடும்பம் ,அந்த வீட்டில் ஏற்கனவே உள்ள பேய் .அங்கே நடக்கும் சம்பவங்கள் என்று ஏதாவது படம் பார்திருகிறீர்களா ? அட அதான் எல்லா பேய் படத்திலும் இருக்கிறதே என்று கேட்கிறீர்களா ? இந்த படமும் அதே கதை தான்.


கமல் நடித்த தசாவதாரம் படத்தில் தொடக்கத்தில் வந்த நம்பி கதை அருமையாய் இருக்கும் .அதை தனி படமாகவே எடுத்திருக்கலாம் என்று சில .விமர்சனத்தில் படித்தேன்.இந்த படத்தின் ஆரம்பத்தில் ஒரு கதை வருகிறது .ஒரு பொம்மை அதில் பேய் .அந்த பொம்மை தூக்கி போட்டாலும் திரும்ப வருவது என்று கொஞ்சம் அதுவே நன்றாக இருந்தது.அதையே முழு படமாகே எடுத்து இருக்கலாம் போல.அதன் பிறகு வேறு ஒரு குடும்பம் என்று போர் அடிக்க தொடங்குகிறது.இறுதி 15 நிமிடங்கள் கொஞ்சமா ஓகே.என்ன கதை 1971 இல் நடப்பது போல் இருப்பதால் கொஞ்சம் ரசனையாக படம் இருக்கு.திரை அரங்கில் என்னவோ மக்கள் கை தட்டி ஆரவாரத்தோடு தான் பார்கிறார்கள்.எங்களுக்கு தான் அவ்வளாக ஒன்று தெரியவில்லை.

மொத்தத்தில் நீங்கள் தீவிர பேய் பட ரசிகர்,பேய் படங்கள் நிறைய பார்த்திருக்கேன் என்றால் இந்த படம் உங்களுக்கு சப்பையாய் போய் விடும்.இது வரை ஒரு சில பேய் படங்களே பார்த்திருப்பேன் என்பவர்கள் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்( எந்த பேய் படத்தையும் ).உங்களுக்கு பிடிக்கலாம்.

நம்பி ஏமார்ந்தோம்.

8 comments:

  1. செஞ்சுரி அடித்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  2. 100 பதிவுகளை வெற்றிகரமாய் முடித்தற்கு வாழ்த்துக்கள் நண்பா !!!.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் டா.சில பதிவுகள் எழுத நீதான் காரணம்.

      Delete
  3. நுறு பதிவு எழுதியதறக்கு வாழ்த்துக்கள் விஜய். நான் தொடர்ந்து படிக்கும் சிலரது பதிவுகளில் உங்கள் ப்ளாக்கும் ஒன்று. ரொம்ப எளிமையா புரியமாதிரி எழுதுறது உங்க பலம். ஹிட்ஸ், வோட்ஸ் பத்தி பெருசா கவலைபடாம உங்களுக்கு தோணுறதை மட்டுமே நீங்க எழுதுறது எனக்கு ரொம்பவே பிடிச்ச ஒன்னு. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.
    அப்புறம் THE CONJURING படத்தை பத்தி, இந்த ஊருல ரொம்ப ஓவர் ஹைப் குடுத்துடாங்க. கொலைவெறி பாட்டு சம்பந்தமே இல்லாம ஹிட் ஆச்சே, அது மாதிரி தான் இந்த படமும். எப்பவாது இது மாதிரி ஓவர் ஹைப்ல சில படங்கள் ஹிட் ஆகறது தான். :(:(

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ். நான் தொடர்ந்து எழுத நீங்கள் செய்த சில உதவிகளும் காரணம்.தொடர்ந்து என்னை ஊக்க படுத்திவருகிரீர்கள்.(நிறைய புது பதிவர்களையும் )
      நான் எழுத்து நடை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.சொல்ல வந்ததை புரியும்படியும் ,நேரடியாகவும் வந்த வார்த்தைகள் ரிப்பீட் ஆகதபடியும் இருக்கவே முயற்சி செய்கிறேன்.அதே போல் பதிவின் நீளம் பற்றியும் கவலை படுவதில்லை. சொல்ல நினைத்ததை சொன்னோமா.பதிவு சின்னதாய் இருக்கே என்று யோசிப்பதில்லை.எதாவது மாற வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள் .
      cojuring எப்படி ஹிட்டாக ஓடுகிறது என்று ஆச்சர்யமாக உள்ளது

      Delete
  4. Congrats...Your blog is very nice...Keep it up...

    ReplyDelete