Pages

Friday, 21 June 2013

தில்லு முல்லு --தீயா வேலை செய்யணும் எது பெட்டர் ? ஒரு ஒப்பீடு

தில்லு முல்லு  --தீயா வேலை செய்யணும் எது பெட்டர் ? ஒரு ஒப்பீடு 


இரண்டு படங்களும் ஒரே நாளில் வந்துள்ளது  .இரண்டு படங்களின் மீதும் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.என் நண்பனிடமும் இரண்டுமே தேறாது என்று தான் சொல்லி கொண்டு இருந்தேன்.இப்போதெல்லாம் காமெடி படம் என்று தெரிந்தால் நம் ஆட்கள் தியேட்டர் உள்ளே போகும்போதே சிரிக்க தயார் ஆகிவிடுகிறார்கள் போல. பணம் கொடுத்து உள்ளே வந்துள்ளோம் சிரிக்கவிடால் எப்படி என்று நினைக்கிறார்களோ என்னவோ இன்னைக்கு சனிக்கிழமை என்றாலும் சிரிக்கிறார்கள் (நன்றி- சுஜாதா) சமீபத்தில் கேடி பில்லா படத்தில் நான் எங்குமே சிரிக்க வில்லை.படத்தில் உட்காரவே முடியவில்லை.ஆனால் அரங்கம் அதிர சிரித்து கொண்டிருக்கிறது.அப்போதுதான் ஒன்று நன்றாக உரைத்தது.காமெடி கூட ரசனை மாறுபடும் என்று.நான்  23 ஆம் புலிகேசி,ஓகே ஓகே போன்ற படங்களை சிரிப்பு வராமல் பார்த்துவிட்டு வந்தேன்.கலகலப்பு பிடித்தது.சமீப கால முழுநீள காமெடி என்று அந்த படத்தை சொல்லலாம்.

சென்ற வெள்ளி கிழமை பதிவுகளில் மதியம் முதலே தில்லு முள்ளு ,தீய வேலை செய்யணும் 2 படங்களின் விமர்சனம் வர தொடங்கிவிட்டன.தில்லு முள்ளு செம காமெடி ,தீயா வேலை செய்யணும் வயிற்றை பதம் பார்த்தது என்று 2 படங்களுமே பாசிடிவ் ரிசல்ட். 2 நாள் கேப்பில் 2 படங்களையும் பார்த்தேன்.இரண்டை பற்றியும் எழுதும் எண்ணம் இல்லை.அதுவும் இல்லாமல் ஒரு வாரம் ஆகிவிட்டது இனி ஏன் என்று. திடீர் என இரண்டும் காமெடி ,இந்த வார இறுதியில் இரண்டில் ஒன்றை  பார்க்க திட்டம் போட்டிருக்கும் நண்பர்களுக்கு உதவும்படி இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்து எது பெட்டர் என்று எழுதலாம் என்றி ஐடியா.இதோ நீங்கள் படித்து கொண்டிருகிறீர்கள்.தில்லு முல்லு 

1. ரீமேக் படம் .தெரிந்த கதை .புதிதாய் சேர்த்த விஷயங்களும் பெரிதாய் ஈர்க்கவில்லை. 
2.சிவா அடிக்கும் சில காமெடிகள் ஜஸ்ட் ஓகே.
3.ஹீரோயின்  சரியில்லை.
4. பழைய தில்லு முள்ளில் காட்சிகளில் ஒரு அழுத்தத்தோடு ஒன்றி பார்த்து சிரிக்கலாம்..இதில் காட்சிகளில் அது மிஸ்ஸிங்.வேகமாக கடந்து செல்கிறது.
5.முதல் ஒரு 20 நிமிஷம் ஓகே. நடுவில் பெரிய மொக்கை. இறுதி 15 நிமிடம் சந்தானம் வருகிறார்.ஓகே. கொஞ்சம் யோசித்திருந்தால்  சந்தானம் வரும் அந்த காட்சிகளை இன்னும் சிறப்பாக (சிரிப்பாக ) எடுத்திருக்கலாம்..
6.படத்தில் ஒரு 4, 5 இடங்களில் Instant சிரிப்பு .படம் அவ்வளவே.

தீயா வேலை செய்யணும் குமாரு :

1. ஆரம்ப அறிமுகம் RJ பாலாஜி கொடுக்கிறார்.அதுவே படத்தில் ஒன்ற வைத்துவிடுகிறது. நல்ல தேர்வு.அவர் பேசும் சில காமெடிகளும் சூப்பர்.சந்தானம் வரும் வரை அவர் தான் கலகலப்பு . ( கணேஷ் வெங்கட்ராமை செல்வராகவன் படத்து 2nd ஹீரோ என்று சொல்வது செம.
2.எனக்கு சித்தார்த் பிடிக்காது.அதனால் சொல்ல ஒன்றும் இல்லை.ரொம்பவும் இளைத்த ஹன்சிகா மற்ற படங்களை விட அழகாக காட்டி இருக்கிறார்கள்? இல்லை இளைத்ததால் அழகாகிவிட்டாரா  தெரியவில்லை.
3.சந்தானம். இவரை கொடுத்த கால் சீட்டுக்கு நன்றாக பயன் படுத்தி இருக்கிறார்கள்.(ஒரு நாள் சம்பளம்  17 லட்சமாமே?)  ஒவ்வொரு ரூபாயும் வொர்த் .
4.ஒரே சீனில் வந்தாலும் டெல்லி கணேஷ் இன்னொரு ஒரு சீனில் வரும் மனோபாலா இருவரும் கலக்கி இருக்கிறார்கள்.அதிலும் மேட்டர் புரோக்கர் ஏன் வேட்டி  கட்டுகிறார்கள் என்று மனோபாலா சந்தானத்திற்கு புரிய வைக்கும் இடம் அவர் புரிய வைக்கும் முன்பே அரங்கம் அதிர்கிறது.
5.படத்தில் ஒரு 15 இடங்களில் Instant சிரிப்பு .4, 5 இடங்களில் நினைத்து நினைத்து சிரிப்பு .
6.படம் முடிந்து வெளியே வரும் போது தில்லு முள்ளு தராத நிறைவை தீயா வேலை செய்யணும் தருகிறது .

மொத்தத்தில் 

தில்லு முள்ளு ------   BELOW JUST OK 

தீயா வேலை செய்யணும் குமாரு  ------  BETTER THAN OK 

No comments:

Post a Comment