Pages

Monday 2 April 2012

மொக்கை + ரம்பம்+ பிளேடு = 3 பட விமர்சனம்

மொக்கை + ரம்பம்+ பிளேடு = 3    பட விமர்சனம்)






(நான்)எதிர் பார்த்தது  போலவே , 3  படம் படு மொக்கை. முதலில் ஏன்  த்ரீ  என்ற டைட்டில் என்று  புரிய வில்லை. முதலில் பள்ளி காதல்,பின்னர் திருமணம் ,பின் ஒரு நோயோடு என்று மூன்று முக்கிய நிகழ்வுகளுக்காக த்ரீ என்று தலைப்பு வைத்திருப்பார்களோ? கதை என்று பார்த்தால்  சின்ன  கதைதான். தனுஷ்,ஸ்ருதி இருவரும்  காதலித்து பெற்றவர்களை எதிர்த்து  திருமணம் செய்துகொள்கிறார்கள்.பின் பெற்றவர்கள்  சேர்கிறார்கள்.தனுஷுக்கு  bipolar disorder என்ற  நோய் வந்தவுடன்  ஸ்ருதிக்கு தெரியாமல் ட்ரீட்மென்ட் எடுக்கிறார். பின் பயத்தில்  தற்கொலை செய்துகொள்கிறார்.




தனுஷ் நடிப்பை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.முதல் பாதி போல் இவரின் ஆரம்ப கால படங்களிலும்,நோய் வந்தவுடன் மயக்கம் என்ன படத்தில் நடித்தவைதான்.ஸ்ருதி ஓகே.படத்தி ஓரளவேனும் முதல் பாதியில் உட்கார வைப்பவர் சிவ கார்த்திகேயன் தான்.பின் பாதியில் அவரும் இல்லை.
பிரபு,பானுப்ரியா,ரோகினி போன்றவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசை தான் படத்தின் opening இக்கு முக்கிய காரணம்.பாடல்கள் ஓகே.படத்தில் பார்க்கும் போது கொலைவெறி பாடலை விட மற்றவை நன்றாக உள்ளன.கொலைவெறி பாடலை இதை விட கேவலமாக எடுக்க முடியாது. இந்த பாடல் ஹிட் ஆகியிருக்கா விட்டால்,இந்த படத்தை ஒருவர் சீண்டி இருக்க மாட்டார்.




எழுதி இயக்கியவர், ஐஸ்வர்யா தனுஷ். முடிந்த வரை,முதல் பட டைரக்டர்,போல் இல்லாமல் இயக்கியுள்ளார். படம் மிக மிக மெதுவாக செல்கிறது.காரணம் ,இந்த கதையை இப்படித்தான் எடுக்க முடியும்.
தனுஷுக்கு இன்னொரு தோல்வி படம்.
3.5 / 10 


விஜய் 

5 comments:

  1. நண்பரே விமர்சனம் கச்சிதமாக சூப்பர்..நீங்கள் உணர்ந்தவற்றை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்..
    ஆனால், ஒரு சந்தேகம் ?/ ரேட்டிங் கண்ண கட்டுது.படம் அவ்வளவுவா மொக்க..ச்சேச்சே தெரியாம போச்சே..
    மிக்க நன்றி பகிர்வுக்கு சார்,

    ReplyDelete
  2. செம தலைப்பு பாஸ் !!
    நானும் படம் பார்த்து ரொம்ப நொந்து போனேன். !!
    சும்மா நச்சுனு சொல்லி இருக்கேங்க..!!

    ReplyDelete
  3. Another flop for danush.... so sad.....But i feel he is better than simbu..

    ReplyDelete
  4. சூப்பர் மாமா ரெடி .... ஒன் டூ த்ரீ போர்.. பா பா பா பாஆஅ பா பா பா பா பா பா ..... எங்க வாசி ?

    ReplyDelete