Pages

Tuesday 27 March 2012

வா தலைவா !

வா தலைவா !





                           தலைவா என்றவுடன் எம்.ஜி.ஆரையோ ,ரஜினியையோ சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் சொல்வது  கவுண்டமணியை பற்றி.ஆளில்லாத ஊரில் பழமொழி போல் சந்தானம் எல்லாம் கவுண்டமணி போல்  நடிக்கும் போது,பார்க்க வருத்தமாக உள்ளது. என்.எஸ்.கே. முதல்  சந்தானம் வரை பலரை பார்த்துவிட்ட தமிழக மக்கள்,கவுண்டமணியை மறந்தது ஆச்சர்யம். 


  எனக்கு தெரிந்து 90 களில் கவுண்டமணி மூலம் கரை சேர்ந்த படங்கள் ஏராளம்.அவைகளில் அதிகம் பிரபு,சரத் குமார்,கார்த்திக் படங்கள்  அதிகம். சுமாரான கதை வலுவான காமெடி சேர்த்தால் 25 நாள் ஓடுவது கேரன்ட்டி . இவரின் உச்ச காலம் என்றால் 1988 முதல் 1998 வரை. அதற்க்கு பின்னும் சில படங்களில் நடித்தாலும் பழைய பெப் இல்லை. இவருக்கு பின் வந்த விவேக் 5 வருடமும் ,வடிவேலு பத்து வருடமும் உச்சத்தில் இருந்தாலும், இன்னும் கூட கவுண்டமணி கவுண்டமணிதான் என்று சொல்லுபவர்கள் ஏராளம்.செந்தில் இல்லாமலும் இவரால் களம் தள்ள முடிந்தது.அனால் கவுண்டமணி இல்லாமல் செந்திலால் காலம் தள்ள முடிய வில்லை.  

        சில வருடங்களுக்கு முன் சிம்புவோடு மன்மதன் படத்தில் நடித்து இவரின் பல காட்சிகள் வெட்டப்பட்டு பின் சிம்புவோடு மோதி,பின் இளைய நடிகர்கள் படத்தில் நடிக்காமல், அர்ஜுன் ,சத்யராஜ் போன்ற இவரின் நண்பர்கள் படங்களில் மட்டும் வந்து போனார்.பின்பு அதுவும் இல்லை.சென்ற ஆண்டு திடீரென்று கவுண்டமணி இறந்துவிட்டார் என்று செய்தி பரவியது.எனக்கு பயங்கர அதிர்ச்சி. சில மணிநேரங்கள் கழித்து டிவி பார்த்தல் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி என்று செய்தி.பின் சரியாகி விட்டார். அவர் மீண்டும் வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம். அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் பெரும்பாலும் அடிமட்ட தொழிலாளியாக , டீ கடை நடத்துபவராக , பெடர்மஸ் லைட் விற்பவராக ,மற்றும் பல வேடங்களில் நடித்துள்ளார். 

இவரின் வெற்றிக்கு காரணம் எளிமை.

4 comments:

  1. கவுண்டமணியின் அதி தீவிர ரசிகன் நான்... அவரை கிங் ஆப் காமெடி என்று சொல்லலாம்...

    ReplyDelete
  2. கவுண்டமணி மூலம் கரை சேர்ந்த படங்கள் ஏராளம். >>> exactly correct. Eg: Ullathai Allithaa.

    ReplyDelete
  3. கவுண் சாரோட பயங்கர ரசிகன் நான்..பயப்படாதிங்க அவ்வளவு ரத்தம் கிடையாது..ஹி..ஹி.அவருடைய காமெடி என்னிக்கும் சலிக்காது.என்றும் இளமை.அவர் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும்.நன்றிங்க சார் பதிவுக்கு.

    ReplyDelete
  4. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....அவரோட பேமஸ் டயலாக்

    ReplyDelete