LE TROU -- பார்த்தே ஆக வேண்டிய பிரெஞ்சு படம்
ஒரு படம் உங்களை எவ்வளவு தூரம் படத்தினுள் இழுக்கும்? சரி சிறைச்சாலை பற்றி ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன.PRISON ESCAPE FILMS என்று ஒரு சின்ன GENRE கூட உண்டு.எல்லோருக்கும் தெரிந்த படம் THE SHAWSHANK REDEMPTION .அதை விட அருமையான PAPILLON,THE ESCAPE FROM ALCATRAZ,THE GREAT ESCAPE (நான் பார்த்தவரையில் ) போன்ற படங்களும் ஒன்று.நான் இப்போது சொல்ல போகும் படம் எல்லாவற்றிற்கும் தலை .இது ஒரு பிரெஞ்சு மொழி படம்.1960 வந்த கருப்பு வெள்ளை படம்.அப்படி என்ன படத்தில்? .படத்தில் நடித்த ஒரு நடிகர் நிஜ கைதியாய் இருந்தவர்.அவர் சிறையில் இருந்து தப்பிய உண்மை அனுபவங்களே படம்.
ஒரு படம் உங்களை எவ்வளவு தூரம் படத்தினுள் இழுக்கும்? சரி சிறைச்சாலை பற்றி ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன.PRISON ESCAPE FILMS என்று ஒரு சின்ன GENRE கூட உண்டு.எல்லோருக்கும் தெரிந்த படம் THE SHAWSHANK REDEMPTION .அதை விட அருமையான PAPILLON,THE ESCAPE FROM ALCATRAZ,THE GREAT ESCAPE (நான் பார்த்தவரையில் ) போன்ற படங்களும் ஒன்று.நான் இப்போது சொல்ல போகும் படம் எல்லாவற்றிற்கும் தலை .இது ஒரு பிரெஞ்சு மொழி படம்.1960 வந்த கருப்பு வெள்ளை படம்.அப்படி என்ன படத்தில்? .படத்தில் நடித்த ஒரு நடிகர் நிஜ கைதியாய் இருந்தவர்.அவர் சிறையில் இருந்து தப்பிய உண்மை அனுபவங்களே படம்.
அந்த நிஜ பாத்திரம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு 1947 இல் தான் சந்தித்த நிகழ்வுகளே படம் என்ற அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது.பிரான்ஸ் நாட்டில் 1947 இல் "ல சாண்டே" என்ற மிக பெரிய சிறையில் ஒரு கைதி கஸ்பர்ட் .மனைவியை கொள்ள முயற்சி செய்த புகாரில் சிறையில் இருக்கிறான்.ஒரு சின்ன தப்புக்காக வேறு ஒரு செல்லுக்கு மாற்ற படுகிறான்.அவன் சென்ற அறையில் ஏற்கனவே 4 பேர் இருக்கின்றனர்.அவர்களிடம் அன்பாக பழகும் கஸ்பரட் தான் சிறை வந்த காரணத்தை சொல்கிறான்.
சில நாட்களுக்கு பின் அந்த நால்வரும் தாங்கள் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இருப்பதாக அவனிடம் சொல்கிறார்கள்.ஆர்வம் அடையும் அவன் தானும் வருவதாக சொல்கிறான்.அந்த சிறையில் அறைகளில் தினமும் அதிகாலையில் ஒரு போலீஸ் வந்து சோதனை இட்டு செல்லும்.அதன் பின் நாள் தோறும் அவ்வபோது ,மீண்டும் இரவு உறங்கும் போது அவர்கள் அறை கதவை தட்டி கதவு ஓட்டை வழியே பார்க்கும்போது கைதிகக் கை அசைக்க வேண்டும்.இது தான் அங்கே விதி.
முதலில் ஒரு சிறிய கண்ணாடி அவர்களிடம் கிடைக்கிறது .அதை ஒரு பிரஷ்ஷில் கட்டி அதை கதவு ஓட்டை வழி வைத்து யாரவது வருகிறார்களா என்று பார்க்க பயன்படுத்தி கொள்கிறார்கள்.பின் சிறையில் அட்டை பெட்டி செய்யும் வேலை அவர்களின் அறையிலேயே செய்து வருகிறார்கள்.அதற்காக பெரிய அளவில் அட்டைகளை ஒரு மூலையில் அடுக்கி வைக்கிறார்கள்.அவ்வபோது அந்த அட்டைகளை நகர்த்தி கட்டிலின் காலில் இருந்து எடுத்த இரும்பால் தரையை இடித்து குழி தோண்டுகிறார்கள்.
அவர்கள் தோண்டும் மணலை என்ன செய்தார்கள்? உள்ளே வழி அவ்வளோ எளிதாக உள்ளதா? அங்கே வழியில் போலீஸ் இல்லையா? இவர்கள் தோண்டும்போது போலீஸ் இவர்கள் அறைக்கு வரவில்லையா? இரவு போலீஸ் கதவு தட்டினால் இவர்கள் கை அசைக்க வேண்டுமே அதற்க்கு ? இப்படி எண்ணற்ற கேள்விகள் வருகிறதா? அப்போது நிச்சயம் படம் பாருங்கள்.நான் மேலே கொஞ்சம் காட்சிகளை சொன்னதே படம் பார்க்கும் ஆவலை தூண்டத்தான்.
கொஞ்சமும் போர் அடிக்காத ஆனால் அழுத்தமான படம் .கிளைமாக்ஸ் எனக்கு கொஞ்சம் திருப்தியில்லை ,இருந்தாலும் எற்றுக்கொளும்படி இருக்கும் .
படத்தை பற்றி சில விஷயங்கள்- படத்தின் இயக்குனர் படத்தை எடுத்து முடித்த 2 வாரங்களில் மரணம் அடைந்து விட்டார்.பெரும்பாலும் தொழில் முறை நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.மொத்த படமும் 10 வாரத்தில் எடுத்து முடிக்கப்பட்டது.படத்தில் இசையே கிடையாது.இதுவரை நீங்கள் இதுபோல் எத்தனை படம் பார்த்திருந்தாலும் இது இன்னும் fresh ஆக இருக்கும்.தவற விட கூடாத படம்.2 மணி நேரம் ஓடும் படம்.
IMDB RATING- 8.4
HIGHLY RECOMMENDED
கதையை படிக்கும் போதே படம் பார்க்கனும் போல உள்ளது..கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமுனு வேற சொல்லிட்டீங்க..இப்பைக்கு பார்க்கிறதா இல்லங்க.டவுன்லோடு லிஸ்ட்டுல சேர்த்துக்குறேன்.உங்க விமர்சனம் வழக்கம் போல சூப்பர்.ஷோர்ட்-டா இருந்தாலும் நல்லாருக்கு.ரொம்ப நன்றி.
ReplyDeleteகுமரன் நான் உன்னிடம் ஏற்கனவே இந்த படத்தை பற்றி சொல்லி இருக்கேன்.மறந்து விட்டாயா?
DeletePrison Movies எப்பவுமே சிறப்பு தான். Escape மாதிரி இல்லாம வேற டைப் Prison படங்கள்ல Carandiru, The Experiment எல்லாம் நல்லா இருக்கும்... பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteLE TROU டவுண்லோட் போட்டாச்சு, பழைய படங்கள நான் அவ்வளவா பாக்குறதில்ல, உங்கள நம்பி இத நாளைக்கு பாக்கலாம்னு இருக்கேன் :-)
வாங்க ஆனந்தன்.ஜெயில் படங்கள் எனக்கு பிடிக்கும்.the experiment படம் பார்த்திருக்கேன்.நிச்சயம் இந்த படத்தை பாருங்கள்.நானும் பழைய ஆங்கில படங்கள் பார்ப்பது கிடையாது.இந்த படம் பற்றி கேள்வி பட்டு பார்த்தேன்.நீங்கள் பார்த்துவிட்டு எழுதவும்.
Deleteபடம் பார்க்க ஆவலைத் தூண்டும் சுருக்கமான விமர்சனம்....
ReplyDeleteநன்றி...
tm1
மச்சி PAPILLON,THE ESCAPE FROM ALCATRAZ,THE GREAT ESCAPE இந்த மூன்றில் எது எது கலர் படங்கள்?
ReplyDeletepappilon கலர் படமா என ஞாபகம் இல்லை. மற்ற இரண்டும் கலர் தான்.the great escape அந்த அளவு படம் சூப்பர் என்று சொல்ல முடியாது.--
Delete