தாண்டவம் : படதேர்வில் மீண்டும் சறுக்கிய விக்ரம்
படத்தின் கதை இந்நேரம் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.கடந்த மூன்று நாட்களாக எல்லா ஊடகங்களிலும் இந்த பட விமர்சனம் தான் ஓடுது அதனால் நான் அதற்குள் போக போவதில்லை.படத்தின் பிளஸ் ,மைனஸ் இவை மட்டுமே பார்க்கலாம்.
படத்தின் பிளஸ்;
விக்ரம் : கடும் உழைப்பு .பார்வை இல்லாதவரின் உடல் மொழி அப்படியே .WELL DONE.
ECHOLOCATION என்ற தமிழுக்கு புதிய விஷயம் .
இசை
மைனஸ் :
கதை : எளிதில் யூகிக்க கூடிய ,திருப்பங்கள் அற்ற கதை.
திரைக்கதை ( படம் கொஞ்சம் கூட நகரவே மாட்டேன் என்கிறது)
எல்லோரும் ஏன் ரொம்ப மெதுவாக பேசுகிறார்கள்.? அதுவும் விக்ரம் கண் தெரியும் போது கூட அப்படியே தான் பேசுகிறார். (கண் தெரியாத போது சோகத்தில் இருக்கிறார்)
அனுஷ்கா -அழகாகவே இருக்கிறார்.ஆனால் முத்திபோய் மூணு குழந்தைகளுக்கு அம்மா ஆன ஆண்டி போல் இருக்கிறார்.
சந்தானம்: ரொம்ப பிஸி ஆக இருக்கும் அவரை போய் ஏன் இந்த வேடத்திற்கு ? சுத்தமாக ஒன்றும் இல்லை.இதற்க்கு தெய்வ திருமகள் படத்தில் அனுஷ்காவின் தோழியை லவ் பண்ணும் கிஷோரை கூட நடிக்க வைத்திருக்கலாம்.
படத்தின் நீளம் .
வேகம்: தொடக்கத்தில் ஆமை வேகத்தில் நகரும் படம் ,கிராமத்து காட்சி கொஞ்சம் செல்ல டெல்லி வந்ததும் படுத்து லண்டனில் தூங்கி விடுகிறது.
மொத்தத்தில் செண்டிமெண்ட் படமான தெய்வ திருமகள் படத்தையே ஓரளவு பார்க்கும்படி நகர்திசென்ற விஜய் ,த்ரில்லர் படம் என்று சொல்லி இப்படி இழு இழுவென இழுத்துவிட்டார்.கொஞ்சம் கூட வொர்த் இல்லாத படம் .பதிவர் ராஜ் சொன்னதையே வழி மொழிகிறேன்.பார்க்க விருப்பம் உள்ளவர்கள் விஜய் டி.வியில் போடும் வரை காத்திருக்கலாம்.
இந்த ஆண்டு என்ன ஆச்சு ? ஓடும் என்று பெரிதாக எதிர்பார்க்க பட்ட அரவான்,மூணு,சகுனி,பில்லா 2,முகமூடி என எல்லா படங்களுமே ஏமாற்றி விட்டது.இன்னும் இந்த ஆண்டு மிச்சம் இருப்பது துப்பாக்கி,மாற்றான் மட்டுமே.விஸ்வரூபம் இந்த ஆண்டு வெளி வரும் என்று நான் நினைக்கவில்லை.பார்க்கலாம் துப்பாக்கி ,மாற்றான் இரண்டும் என்ன செய்கிறது என்று.
ஒரே டேஸ்ட் விஜய்..உங்களுக்கும் எனக்கும்...
ReplyDelete//அனுஷ்காவின் தோழியை லவ் பண்ணும் கிஷோரை கூட நடிக்க வைத்திருக்கலாம்.///
நல்ல சாய்ஸ்....
கிட்டத்தட்ட எல்லாருமே ஒரே மாதிரி தான் விமர்சனம் செய்து இருக்காங்க.. அதுவும் நம்ம பயலுக ரொம்ப ஸ்பெசல்..
ReplyDeleteஅதிலயும் அனுஷ்காவ ஆண்டின்னு சொல்றதுல ஒரு சந்தோசம் வேற..
விகரமின் உழைப்பு வீணாகி விட்டது...
ReplyDeleteவேணாம் .... இந்தப் படத்தைப் பற்றி திட்டியே டயர்டாகிட்டேன். :)
ReplyDelete//அதுவும் விக்ரம் கண் தெரியும் போது கூட அப்படியே தான் பேசுகிறார். //உண்மை உண்மை எனக்கும் தோணியது
ReplyDeletethaandavm better thaan maattaan
ReplyDelete@ கிராமத்து காட்சி கொஞ்சம் செல்ல டெல்லி வந்ததும் படுத்து லண்டனில் தூங்கி விடுகிறது.@
ReplyDeleteவார்த்தை ஜாலம் பிடித்தது பாஸ்.உண்மைதான் நானும் படத்தை பார்த்தேன்.ஏதோ பெருசா நம்பி ஏமாந்ததுதான் மிச்சம்.விமர்சனம் நன்று..நன்றி.