TRIANGLE (2009) --குழப்பும் ஆங்கில த்ரில்லர் படம்
நீங்கள் பெர்முடா முக்கோணம் பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு கடற்பகுதியே அது.அந்த பகுதியில் போன பல கப்பல்கள் மாயமாய் காணாமல் போய் உள்ளது.அதை ஆராய சென்ற பறக்கும் விமானங்கள் உள்ளே இழுக்கப்பட்டு காணமல் போயின.அதற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நீங்கள் "MOMENTO" " THE MACHINIST " போன்ற படங்களின் ரசிகரா? அதற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தம்.உங்களை குழப்பி அடிக்கும் படம் திரும்ப திரும்ப ஒவ்வொரு காட்சியிலும் உங்களுக்கு எதோ ஒன்றை காண்பித்து சென்று அதை பின்னர் தெளிவு படுத்தும்( எனக்கு தெளியவில்லை.)
கதையை எப்படி சொல்லி அறிமுக படுத்துவது என்று தெரியவில்லை.சரி பாயிண்ட் பை பாயிண்ட் என்று போவோம்.
1.ஒரு பெண்.அவளுக்கு மன குறைபாடோடு ஒரு சின்ன பையன்.
2.அவனை பள்ளியில் விட்டு அவள் ஒரு கப்பல் பயணத்திற்கு சில நண்பர்களோடு போகிறாள்.
3.நடுக்கடலில் அவள் சென்ற கப்பல் விபத்து ஏற்பட, அங்கே வரும் ஒரு பெரிய கப்பலில் எல்லோரும் ஏறுகிறார்கள்.
4.கப்பல் முழுக்க தேடியும் யாரும் காணோம்.ஓட்டுபவரும் இல்லை.
5.நாயகி தான் இந்த கப்பலில் ஏற்கனவே வந்தது போல் உள்ளதாகவும் அந்த இடங்களை உணருவதாகவும் சொல்கிறாள்.
6.அடுத்தடுத்து ஒவ்வொருவராக கொள்ள படுகிறார்கள்.இறப்பவர்கள் இவளை கொலையாளி என்று சொல்லி இறக்கிறார்கள்.
7.புரியாமல் சுற்றி வரும் வரும் இவள் மீண்டும் தாங்களே இந்த கப்பலில் ஏறுவதை பார்க்கிறாள்.
8.மீண்டும் பாயிண்ட் 4- பாயிண்ட் 7
9.கடைசியில் திரும்ப பாயிண்ட் 1 முதல் ஆரம்பம் .
எனக்கு உண்மையில் படம் தெளிவாக என்ன நடக்கிறது என்று புரியவில்லை.ஆனால் நல்ல படம் தான்.எனக்குதான் புரியவில்லை.அது மட்டும் எனக்கு புரிந்து போனது.குழப்பறேனா? நான் படம் பார்த்து ரொம்ப குழம்பி போய் இருக்கேன்.இது என்ன படம் ,இது கூட புரியலையா என்று சிலர் கேட்கலாம்.இருந்தாலும் நான் அவ்வளதான்.
படமாக்கப்பட்ட இடங்கள் (ஆஸ்திரேலியா ) அருமை.அந்த கப்பல் ,படத்தின் கேமரா எல்லாமே பாராட்டும்படி உள்ளது.
படத்தை பற்றி சில விஷயங்கள் :
99 நிமிடங்கள் ஓடும் படம் 2009 இல் வெளி வந்தது.
படத்தை எழுதியவர் திரைகதை எழுதி முடிக்க 2 ஆண்டுகள் ஆனதாக கூறியுள்ளார்.
விமர்சகர்களால் பலத்த பாராட்டை பெற்றாலும் படம் வசூலில் சுமார்தான்.
ஏறக்குறைய எல்லா விமர்சனங்களும் சராசரியாக 4 OUT OF 5 RATING கொடுத்துள்ளது.
ROTTEN TOMATOES -81% FRESH
IMDB- 6.8
இப்போது வரும் எளிதில் யூகிக்க கூடிய படங்கள் பார்த்து வெறுத்து போய் உள்ளீர்களா? MIND TWISTING வகை படங்கள் பிடிக்குமா ? நிச்சயம் பாருங்கள்.
TIME CRIMES என்று ஒருபடம் சென்ற வருடம் பார்த்தேன்.அதுவும் எனக்கு புரியாத படம் தான்.ஒரு நண்பரிடம் கேட்டபோது கொஞ்சம் கவனித்து பார்த்தல் புரியும் என்றார்.
Triangle மூன்று பார்ட்ஸாக என்னிடம் உள்ளது. பார்க்கணும். Time Crimesஉம் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். சீக்கிரம் பார்த்துவிட்டு பிடித்திருந்தால், முக்கியமாக புரிந்தால் எழுதுகிறேன்.
ReplyDeletetriangle 3 பாகங்கள் வந்துள்ளதா?
Deleteசாரி தல ... நான் சொல்ல வந்தது The Triangle என்று 2005ல் வந்த, பெர்முடா முக்கோணி பற்றிய மினி சீரிஸ். இது 2009 ... இந்தப் படமும் இருக்கிறது (இப்போழுது தான் நோட் பண்ணினேன்)
Deleteசாரி.. :)
பார்க்க வேண்டிய படம்னு கேள்விப்பட்டிருக்கேன்..உங்க விமர்சனம் அருமை..படத்தை கண்டிப்பா நான் பார்க்குறேன்.நன்றி.
ReplyDeleteசொல்லும் போதே கொஞ்சம் வித்தியாசம் புரிகிறது.. நொன்-லீனியர் வகை படம் போல..
ReplyDeleteநண்பரே இந்த படத்துக்கு நான் படித்த இரண்டாவது தமிழ் விமர்சனம். (முன்னே எழுதியவர் நியாபகமில்லை). விமர்சனம் எழுதும்போதே எப்படி எழுதவேண்டும் என்று குழப்பும் திரைப்படம். சரியாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். அவளுக்கு ஒரு மன நோய்/ஒரு வகையான தனிப்பட்ட உலகில் வாழ்ந்துவருபவள். இது நான் லீனியர் அல்ல நான்-என்டிங் / கிளைமாக்ஸ் இல்லா திரைப்படம். இந்த படம் உன்னிப்போடு பார்த்தால் பலநாட்களுக்கு இந்த படத்தை பற்றியே சிந்தித்துகொண்டே இருப்பீர்கள்.
ReplyDelete