Pages

Sunday, 21 October 2012

BHOOT RETURNS -ஹிந்தி திகில் பட விமர்சனம் ---சரக்கு தீர்ந்து போன ராம் கோபால் வர்மா.

BHOOT RETURNS -ஹிந்தி திகில் பட விமர்சனம் ---சரக்கு தீர்ந்து போன ராம் கோபால் வர்மா.


ராம் கோபால் வர்மா .ரங்கீலா படம் மூலம் அசத்தலாக ஹிந்தியில் நுழைந்து சத்யா,கம்பெனி ,சர்கார் போன்ற பல புதுமையான படங்களை தந்து வழக்கமான மூன்றை மணி நேர குடும்ப ஹிந்தி பட பார்முலாவை தகர்த்து பல தளங்களில் ,பல உண்மை சம்பவங்களை ,பல நிஜ கதா பாத்திரங்களை தன்  படங்களில் உலாவ விட்டு கலக்கி கொண்டிருந்தவர். அமிதாப் சில வருட இறக்கங்களுக்கு பின் வெற்றி பெற துவங்கிய பின் மீண்டும் சர்கார் படம் மூலம் மாஸ்  சேர்த்தவர்.


இப்படி தான் இவர் படம் இருக்கும் என்று கணிக்க முடியாதபடி படம் எடுப்பவர்.படம் எடுப்பது குடிசை தொழில் போல என்று டிஜிட்டல் கேமரா ,ஒரு ஐந்து பேர் பணம் போடுவது என்று நடிகர்களுக்காக காத்திராமல் கிடைத்தவர்களை கொண்டு படம் எடுத்து பேச வைத்தவர்.மேலும் தென் இந்திய தெலுங்கு ,கன்னட ,தமிழ் நடிகர்களை தன ஹிந்தி படங்களிலும் பயன் படுத்தி அவர்களுக்கும் அங்கே ஒரு முகவரி தந்தவர்.தன்  வெளிபடையான பேச்சு ,நடிகர்களை பற்றிய விமர்சனம்,குடும்ப உறவுகள் பற்றி தன் எண்ணம் என்று எதற்கும் அஞ்சாமல் தான்  நினைத்ததை சொல்பவர்.ஹிந்தி சினிமாவில் செல்லமாக "ராமு ".

சில வருடங்களுக்கு முன் 'பூத் ' என்று ஒரு பேய் படம் எடுத்தார்.ஹிட் ஆன படம்.அதை தமிழில் நம்ம பிரசாந்த் "ஷாக் " என்று ரீமேக் செய்தார்.இப்போது ராமுவுக்கு தொட்டதெல்லாம் காலி ஆகும் நேரம்.வரிசையாய் அடி.இருந்தாலும் சராமரியாக படம் எடுத்து தள்ளி கொண்டிருக்கிறார்.அந்த படங்கள் ஓடுவதும் இல்லை.கடைசியாக அவர் படம் எது ஹிட் என்று அவருக்கே மறந்து போய் இருக்கும்.இப்போது அவருக்கு ஹிட் தேவை.என்ன செய்வது என்று யோசித்தவர்,தன்  ஹிட் படமான பூத் படத்தின் இரண்டாம் பாகம் என்று எடுத்துள்ளார்.ஏதாவது ஒரு கன்றாவியை எடுத்து அதற்க்கு எப்போதோ ஓடிய தன்  ஹிட் படத்தின் பேரை போட்டால் கல்லா நிரம்பிவிடும் என்று நினைத்து விட்டார்.(இங்கே நம் பில்லா 2 உங்களுக்கு நினைவுக்கு வரணும் ).

ஒரு பேய் வீடு .
அங்கே வரும் குடும்பம்.
அவர்கள் குழந்தை கண்ணுக்கு மட்டும் தெரியும் பேய்.
அதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபரீதங்கள்.
இறுதியில் முடிக்க கூடாது அந்த பேய் எங்கோ மீண்டும் செல்வது போல் முடிக்க வேண்டும் .
ஒரு பேய் படம் ரெடி.

கொஞ்சமும் மாறாமல் அதே கதை தான்.என்ன கொஞ்சம் இந்திய சினிமாவிற்கு புதிதாய் cctv  அந்த வீட்டில் இணைத்து பேய் உலாவுவதை காட்டுகிறார்கள்.
நான்கே நடிகர்கள்.இரண்டு குழந்தைகள்,ஒரு பொம்மை .படத்தில் நிறைய நேரம் யாரவது ஏதாவது சத்தம்  கேட்டு வீட்டில் இருட்டில் உலாவுகிறார்கள்.தேவைக்கு அதிகமாய் சவுண்ட்என்ஜினியர் சத்தம்  கொடுத்துள்ளார்.ஒரே ஆறுதல் பாடல் ,காதல் என்று எதுவும் இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் படத்தை முடித்தது .ராம் கோபால் வர்மாவிடம் சரக்கு தீர்ந்து விட்டது (நம்ம மணிரத்னம் போல ) என்று நினைக்க தோன்றுகிறது  .

3 comments:

  1. இதோட ட்ரெயிலர் பார்த்தப்பவே இது ஊத்திக்கும்னு தெரிஞ்சு போச்சு.. இதுல எதுக்கு தேவையில்லாம 3டியெல்லாம்..

    ReplyDelete
  2. பார்க்க வேண்டாம் மாதிரி சொல்லிட்டீங்க...

    நன்றி...
    tm1

    ReplyDelete
  3. மொக்க படம்

    ReplyDelete