Pages

Sunday, 16 December 2012

1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு


1981 இல்  ரஜினி -கமல் இடையே நடந்த  கை கலப்பு :


தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால் கட்டி அனைத்து கொள்வதும் பின் அவருக்கே குழி பறிக்கும் வேலைகளும் கருப்பு வெள்ளை காலங்கள் முதலே தெரிந்தது தான்.எம்.ஜி.ஆர் -சிவாஜி இருவரும் நேரில் தம்பி-அண்ணே என்று பாசத்தால் கட்டி அனைத்தாலும் சிவாஜிக்கு முன்பிருந்தே சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து அப்போதுதான் எம்.ஜி ஆரின் வளர்பிறை நேரம் .ஆனாலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை.ஒரு படம் ஓடினால் பின் சில சரிவுகள்.அதன் பின் வந்த சிவாஜி பராசக்தி மூலம் மின்னல் போல நுழைந்து தடதடவென மேலே வந்து விட்டார்.ஆமாம் எம்.ஜி ஆரை முந்தி முதல் இடத்தில இருந்தது அவர் நிலை. தொடர்ச்சியாக சிவாஜியை வைத்து மட்டுமே படம் எடுத்து கொண்டிருந்தனர் பி.ஆர்.பந்துலு போன்ற சில தயாரிப்பாளர்கள்.எம்.ஜி ஆர் தனது முறை வந்ததும் சிவாஜியை வைத்து படம் எடுத்த அனைவரையும் தன்னை நோக்கி வரவைத்தார்.மேலும் தேவர் போன்ற தயாரிப்பாளர்கள் சிவாஜியை நாடாமல் பார்த்துகொண்டார்.ஒரு நேரம் எம்.ஜி ஆர் குரூப் நடிகர்கள் ,சிவாஜி குரூப் நடிகர்கள் என்று இரு பிரிவாக நடிகர்கள் இருந்தார்கள்.எம்.ஜி ஆர் க்ரூபில் அசோகன் ,வி.எஸ்.ராகவன்,தேங்காய் ஸ்ரீனிவாசன்  இன்னும் சிலர் .சிவாஜியிடம் மேஜர் சுந்தர்ராஜன்,பாலாஜி போன்றோர் .இவர்களை ஒரு க்ரூப் நடிகர் பெரும்பாலும் இன்னொரு நடிகர் படத்தில் நடிக்க மாட்டார்.இருந்தாலும் நேரடியாக எம்.ஜி.ஆர் -சிவாஜி நட்பு பாராட்டி கொள்வார்கள் ..


காலம் கடந்து அடுத்த செட் நடிகர்கள் முன்னணிக்கு வருகிறார்கள்.கமல்-ரஜினி  என்று தொடங்கியது.இருவரும் சேர்ந்து பல படங்களில் நடிக்கிறார்கள்.நட்பு பலப்படுகிறது .பின் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து பிரிகிறார்கள்.இருவருமே அடுத்தடுத்து ஹிட்கள் கொடுத்து முன்னணிக்கு வருகிறார்கள்.இருந்தாலும் பழைய பழக்கத்தில் நட்புடனே இருக்கிறார்கள்.இனி விஷயத்திற்கு வருவோம்.இது என் கற்பனையோ அல்லது வேறு எதுவோ இல்லை.நான் ஒரு புத்தகத்தில் படித்ததை இங்கே விவரிக்க்றேன்.அப்போது குமுதம் வார புத்தகம் இருவரையும் நேரடியாக பேர் சொல்லாமல் இந்த விஷயத்தை குறிப்பிட்டு இருந்தது.பின் கமல் ஒரு பேட்டியில் நேரடியாகவே அதை ஒப்புக்கொண்டு அதன் பின் நடந்தவற்றை விவரித்துள்ளார்.அந்த சம்பவங்களை அப்படியே 

தயாரிப்பாளர் கே.பாலாஜி .பில்லா,தீ ,விடுதலை போன்ற ரஜினி படங்களும் சவால்,சட்டம்,வாழ்வே மாயம் போன்ற கமல் படங்களும் தயாரித்தவர்.

வருஷம் ---1981. மே மாதம். பாலாஜி ரஜினின் திருமணத்தையொட்டி ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார்.ரஜினி ,கமல்,பாலாஜி,ஜெய்சங்கர் ,விஜயகுமார் ,ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .நட்சத்திரங்களின் சங்கமத்தில் மது கரை புரண்டு ஓடியது .கமல் ஏக துஜே கேலியே மூலம் உச்சத்தில் இருந்தார்.ரஜின்க்கும் நல்ல  மார்க்கெட். புகழ் மயக்கம் எல்லோருக்கும் இயல்பே.மகிழ்ச்சி உற்சாகத்தில்  தனி நபர் தாக்குதல் விமர்சனங்கள் தலை தூக்கின .

ஏழுமலையான் பெயர் கொண்ட தயாரிப்பாளர் பார்டியில் இரண்டு பெரிய நடிகர்கள் மோதிக்கொண்டதை  பற்றி எல்லா பத்திரிக்கைகளும் செய்தி வந்தது.

"ஸ்டைல் நடிகர் கமலாரின் சட்டை காலரை பிடித்தாராம்.அதுவரை பொறுமையாய் இருந்த அவர் இதற்குமேல் இடம் கொடுக்க கூடாது என்று விட்டாராம் ஒரு குத்து .தடால் என்று விழுந்து விட்டாராம் முரட்டு காளை " (குமுதம் லைட்ஸ் ஆன் ,28.05.1981)

பிறகு நடந்தவை கமல் வார்த்தைகளில் :

ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலகி இருவரையும் சமாதனம் செய்தார் .அதற்காகவே ஜெய் சாரை எங்கள் இருவருக்குமே பிடிக்கும்.இந்த சம்பவம் நடந்த மறு நாள் நான் வாகினி ஸ்டுடியோவில் இருந்தேன்.என்னை பார்க்க ரஜினி வேகமாக வந்துகொண்டிருந்தார் .வந்த வேகத்தை பார்த்தல் தகராறு செய்யத்தான் வருகிறார் போலிருக்கு ,சரி வரட்டும் வந்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்து கொண்டிரும்போதே அருகில் வந்து ரஜினி என் கையை அழுத்தமாக பிடித்தார்."சாரி ..நேத்து நடந்தை மறந்திடுங்க என்றார்.எனக்கு வெட்கமாகி விட்டது.அவரது பெருந்தன்மை என்னை சுட்டது.

மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக்கொண்டிருந்தவர்களிடம் "கமலிடம் மன்னிப்பு கேட்க்க போனபோது பகை உணர்ச்சியை மாற்ற மாட்டாரோ என்று நினைத்தேன்.பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்று கூறி இருக்கிறார்.அதை கேள்வி பட்டதும் நாம் முந்தி கொள்ளாமல் போனோமே என்று என்னையே நொந்து கொண்டேன் ..



17 comments:

  1. கை கலப்பு நடந்து இருக்கலாம். இது உண்மையாவே இருக்கலாம்..

    ஆனால் நம்ம ஒலகநாயகன், கமல், ஒரு இண்டெர்வியூவில் (ஜெயா அல்லது விஜய்) சொன்னாரு.. அதை அடுத்த பின்னூட்டத்துல சொல்றேன்..

    ReplyDelete
  2. "இந்தமாரி மன்னிப்பு கேட்கும் ரஜினியின் செய்கை, அவருடைய பெருந்தன்மை/உயர் குணமா இல்லைனா "தந்திரமா"/க்ளெவெர்னெஸா னு எனக்குத் தெரியலை"னு சொன்னாரு இந்த மேதாவி! என்ன ஒரு குதற்க சிந்தனை இந்தாளுக்கு!!!!

    ReplyDelete
    Replies
    1. நாமும் ஒரு நண்பருடன் பயங்கரமாக சண்டையிட்டு,சில நாட்களில் அவரே வந்து உங்களிடம் வந்து மன்னிப்பு கோரினால் என்ன நினைப்போம் முதலில் என்னே பெருந்தன்மை என்று நினைப்போம்,சில நிமிடத்தில் மன்னிப்பு கேட்டதில் எதாவது குத்து இருக்கா என்று யோசிப்போம் .இது எல்லோருக்கும் தோன்றும் நினைப்புதான்.இதை எல்லாம் குதர்க்க சிந்தனை என்று சொன்னால் எப்படி?

      Delete
  3. Padikka suvarasiyamaga irunthathu.

    ReplyDelete
  4. சண்டை வராத, பிரிவு ஏற்ப்படாத நட்பு, உறவு ஏது ? புது விஷயம்..கேள்விப்படாதது..
    ரொம்ப நாள் கழித்து பதிவு போட்டு இருக்கீங்க.தொடருங்கள்.நன்றி.

    ReplyDelete
  5. புதிய விஷயம்

    ReplyDelete
  6. "இந்தமாரி மன்னிப்பு கேட்கும் ரஜினியின் செய்கை, அவருடைய பெருந்தன்மை/உயர் குணமா இல்லைனா "தந்திரமா"/க்ளெவெர்னெஸா னு எனக்குத் தெரியலை"னு சொன்னாரு இந்த மேதாவி! என்ன ஒரு குதற்க சிந்தனை இந்தாளுக்கு!!!!"

    இதுக்கு ஆதாரம் இருக்கா? சும்மா அடிச்சு விடக்கூடாது வருண். உங்களை பற்றி எனக்கு நல்ல தெரியும்.
    சும்மா கமலை தாக்குவதுதான் உங்க வேலை. ஆதாரத்துடன் கதைக்கவும்.

    இந்த பதிவர் ஆதாரத்துடன் தகவல் தந்துள்ளார் . "ஸ்டைல் நடிகர் கமலாரின் சட்டை காலரை பிடித்தாராம்.அதுவரை பொறுமையாய் இருந்த அவர் இதற்குமேல் இடம் கொடுக்க கூடாது என்று விட்டாராம் ஒரு குத்து .தடால் என்று விழுந்து விட்டாராம் முரட்டு காளை " (குமுதம் லைட்ஸ் ஆன் ,28.05.1981)


    ஆனால் நீங்கள் ??

    ReplyDelete
    Replies
    1. 1999 ல் உலகறிய விஜய் டி வி ல ஒலகநாயகன் சொன்னது இது. க்ளெவெர்னெஸ் என்கிற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினார். பொய் சொல்லிப் பொழைப்பு நடத்த உம்மை மாரி நெறையப்பேரு இருக்கலாம். அதெல்லாம் என்னைமாரி ஆட்களுக்குத் தெரியாது. நீர் நம்பனும்னு எவனும் இங்கே கெஞ்சவில்லை! உம் உலகத்திலே நீர் வாழலாம்! :)

      Delete
    2. ***சும்மா கமலை தாக்குவதுதான் உங்க வேலை. ஆதாரத்துடன் கதைக்கவும்.***

      சும்மா ஆதாரம் மண்ணாங்கட்டினு கூறுகெட்டதனமா ஒளறக்கூடாது. டி வி ல வந்த காணொளினு சொல்றேன் இல்ல? நீர் நம்பலைனா இங்கே எதுவும் குடி முழுகிப் போகலை! புரியுதா?

      வருண் பொய் சொன்னான்னு சொல்லிக்கிட்டு அலையும். என்ன இப்போ? உம்முடைய சான்றதழெல்லாம் எனக்கு தேவையில்லை. அது எப்படிப் பட்டதாக இருந்தாலும் குப்பை தொட்டிக்குத்தான் போகும்! அவன் அவனுக்கு பெரிய மேதை னு நெனைப்பு!

      Delete
  7. இப்போ தமிழ் நாட்டில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவருக்கு MGR ராமாவரம் தோட்டத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்ததாக ஒரு வதந்தி. அது உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இப்போ பெரிய நடிகரை இருப்பவர் நடிகை லதாவை கரெக்ட் செய்ய முயற்சித்து தொந்தரவு கொடுக்க விஷயம் எம்ஜிஆர் காதுக்கு போய்,அந்த நடிகரை தூக்கி வந்து ராமவரம் தோட்டத்தில் வைத்து துவைத்து எடுத்துள்ளார்கள் .அடித்ததில் மூளை கலங்கி பிரம்மை பிடித்தது போல் ஆனவர் மருத்துவமனையில் தன்னை பார்க்கவந்து அறிவுரை சொன்ன தன குருநாதரையே அடிக்க பாய்ந்த சம்பவங்கள் எல்லாம் நடந்ததாக கேள்வி பட்டுள்ளேன்.அதை எல்லாம் சொன்னால் அந்த நடிகரின் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள்.

      Delete
    2. எப்படி எப்படி? அடிச்ச அடியிலே மூளை கலங்கிப் போயிடுச்சாக்கும்! அடப் பாவமே! :)))

      பார்த்துப்பா! அடுத்தவனை கேவலப்படுத்தணும்னு வீம்புக்கு எத்தனித்தால் அது உங்களுக்கே வினையாயிடப்போது! :-)

      Delete
    3. வருண் பெரிய நடிகர் எம்.ஜி.ஆரால் உதைக்கப்பட்ட சம்பவம் உலகறிந்தது.அவர் மனநல மருத்துவ மனையில் இருந்தது உண்மை.உங்கள் குடும்பத்திலோ அல்லது தெரிந்தவர்களோ அதாவது 80 களின் தொடக்கத்தில் நடந்த இந்த சம்பவத்தை பற்றி கேட்டுபார்ருங்கள்.இது அந்த நேரத்தில் எல்லோருக்கும் விஷயம்.நீங்கள் ரஜினி ரசிகராக இருக்கலாம். இருந்தாலும் சிலரிடம் கேட்டு பாருங்கள்.உண்மை என்று கேள்விபட்டால் எனக்கு சொல்லுங்கள்.
      விஷயம் இதுதான்--நான் அந்த விஷயம் பற்றி படித்தோ கேள்விபட்டோ இருக்கேன்,நீங்கள் அந்த விஷயம் பற்றி படித்தோ கேள்விபட்டோ இல்லை.அவ்வளவுதான்.

      Delete
  8. அண்ணே நான் போட்ட விஜய் த்ரிஷா பண்ணை வீட்டு மாட்டேர் உண்மையா எண்டு சொல்லாமலே comenta அளிச்சிட்டீங்களே ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்கஅண்ணே நான் போட்ட விஜய் த்ரிஷா பண்ணை வீட்டு மாட்டேர் உண்மையா எண்டு சொல்லாமலே comenta அளிச்சிட்டீங்களே ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. @karthik >>
      அண்ணே , ஊரு உலகத்துல எவனுமே ஓகியம் இல்ல . இந்த மேட்டர் உங்களுக்கும் தெரியும் . மாசம் அஞ்சாயிரம் சம்பாதிகிரவனே தம்மு, குடி , மேட்டர்னு. இருக்கான் . அப்ப பல கோடி சம்பதிக்கிற திரைப்பட தொரைல இருகிருவனுங்க எப்படி இருபாங்க ?

      ரஜினி - லதா மேட்டர் , கமல் - பல நடிகை மேட்டர் , விக்ரம் - ஜோதிகா படுத்தா தான் அருள் பட ஷூட்டிங் அடம் பிடிச்ச மேட்டர் , அஜித் - சுவாதி, ஹீரா , தேவயானி மேட்டர் , விஜய் - சங்கவி , சுவாதி,திர்ஷா மேட்டர் , சிம்பு - (சொல்லரதுகு இடம் இல்ல - அவளவு பெரிய லிஸ்ட் ) - நயன்தாரா . இன்னும் பல நடிக்ரர்கள் வண்ட வாளம் இருக்கு.

      இதை எல்லாம் விட்டுட்டு , என்ன விஜய் மேல தனி intrest உங்களுக்கு?

      இவன்

      விஜய் ரசிகன்.
      ( விஜய்யை , மற்றும் அவரது ரசிகனை கிண்டல் பண்ணும் கூட்டத்தை அடியோடு வெறுப்பவன் )

      Delete
  9. நீங்க வேற எடம் பாருங்கள்.

    ReplyDelete