DREAM HOUSE -- டேனியல் கரைக் நடித்த த்ரில்லர் படம்
வழக்கமான ஹாரர் படங்களை போல் ஹீரோ தன் குடும்பத்தோடு புதிய வீட்டிற்கு குடி வருகிறார்.அங்கே நடக்கும் சில புதிரான சம்பவங்களுக்கு பின் அந்த வீட்டில் அதற்க்கு முன் இருந்தவன் தன மனைவியையும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்போது மன நல காப்பகத்தில் இருப்பதாக தெரிய வருகிறது.நாமாக இருந்தால் என்ன செய்வோம் அந்த வீடு வேண்டாம் என்று காலி செய்து வேறு வீடு ஓடி வந்திருப்போம்.ஆனால் இந்த திகில் பட ஹீரோக்கள் அப்படி ஒரு நாளும் செய்ய மாட்டார்கள்.இதிலும் நம் ஹீரோ போலீஸ் உதவியை நாடி அந்த வீட்டில் என்ன நடந்தது என்று கேட்கிறான்.
போலீஸ் ஒரு மாதிரி பூசி மொழுகி பயப்படாமல் இருக்க சொல்லி அனுப்பி விடுகிறது.அதன் பின் எதிர் வீட்டில் இருக்கும் பெண் தன்னை பார்த்து ஒரு மாதிரி நடந்து கொள்வதை பார்த்து அவளை நாடுகிறான்.அவள் அவன் வீட்டில் நடந்த சம்பவங்களுக்கு காரணமான அந்த ஆளின் பேரை (பீட்டர் வார்டு) சொல்லி , ஒரு மருத்துவமனை பேரை சொல்லி அங்கே அனுப்புகிறாள்.அங்கே செல்லும் நாயகன் காண்பது என்ன? (படத்தில் ஒரு முக்கிய திருப்பம் அங்கே) அங்கே அவன் கண்டது தான் நிஜமா? (இறுதியில் மீண்டும் ஒரு ட்விஸ்ட் ).
இது போல் சில படங்கள் நிறைய வந்திருந்தாலும் சில இடங்களில் வரும் ட்விஸ்ட் படத்தை தனித்து காண்பிக்கிறது.டேனியல் கிராக் ஓகே என்று சொல்லும்படி தான் இருக்கு நடிப்பு.நாயகி மம்மி படத்தில் வந்தவர்.எதிர் வீடு பெண்ணாக கிங் காங் படத்தில் வந்தவர்.
படம் பிளாப் ஆன படம் தான்.படத்தின் இயக்குனர்,நாயகன் ,நாயகி ஆகியோர் படத்தின் இறுதி வடிவம் பார்த்து அதிருப்தி ஆகி படத்தின் விளம்பர நிகழ்சிகளுக்கு வரவில்லை.படத்தின் பெரிய திருப்பம் ஒன்று ட்ரைலரில் வந்து விட்டதாலும் பெரிய சறுக்கல்.உங்களுக்கு டேனியல் கிராக் ரொம்ப பிடிக்கும்,ஒரு லீவ் நாளை கொஞ்சம் த்ரில்லான படம் பார்க்கலாம் என்றால் பார்க்கலாம்.இல்லையா எஸ்கேப் .2011 இல் வந்த படம் 1.30 மணி நேரம் ஓடும்.
திரில்லர் விருப்பம் தான்.. நேரம், DVD கிடைக்கையில் பார்த்திடலாம்
ReplyDeleteஅவ்வளவு திரில் இருக்காது...
ReplyDeleteநன்றி...
tm1
டேனியல் கரைக் எனக்கு பிடிக்கும் அதனால பார்க்கலாம் எனக்கு
ReplyDeleteவிமர்சனம் நல்லாருக்குங்க..படம் பார்ப்பேனானு தெரில.பார்க்கலாம்
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
ReplyDeleteஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
வணக்கம் நண்பரே மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள் பல பல !
ReplyDelete