ஒரு கல் ஒரு கண்ணாடி ---சினிமா விமர்சனம்
ஹீரோ சந்தானம் ஒரு கல்யாண கார் ஓட்டுபவர் .அவரது நண்பர் பட தயாரிப்பாளர் உதயநிதி சென்னை சத்யம் திரை அரங்கில் டிக்கெட் கிழிப்பவர்.அவர் ஹன்சிகாவை காதலிக்கிறார்.அவர் இவரை காதலிக்கவில்லை .அவருக்கு நம் ஹீரோ சந்தானம் எப்படி உதவுகிறார் என்பதே படமா என்றால் ஆம்.ச்சே ச்சே இல்லை. தெரியலேங்க.நீங்க படம் பார்த்தால் இப்படி தான் சொல்வீங்க.
என்னடா படத்தில் உதயநிதி தான் ஹீரோ என்று கேள்விபட்டோமே என்று நினைக்கவேண்டாம். பாஸ் (எ)பாஸ்கரன் போலவே இதிலும் ஹீரோ டம்மிதான்.அதனால் தான் ஹீரோ சந்தானம் என்று சொன்னேன்.
இந்த படத்தை கதையாகவும் நீங்கள் படம் பார்காதவர்களிடம் சொல்ல முடியாது.சீன் ஆகவும் சொல்ல முடியாது.ஏனென்றால் இரண்டுமே இல்லை.காட்சியாகவும் நீங்கள் ஞாபகம் வைத்து சொல்ல முடியாது.ஏனென்றால் வந்த காட்சியே திரும்ப வருவது போல் உள்ளது.
ஆனால் நம் ஜனங்கள் இந்த படத்தை மிகுந்த உற்சாகத்தோடு ரசிக்கிறார்கள்.இதிலிருந்து ஜனங்கள் ரொம்ப காஞ்சிபோய் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.நல்ல அழகான கதாநாயகி இல்லாமல்
அமலபால் எல்லாம் ரசிக்கபடுவது போல் ஏப்ரல் இல் நல்ல படம் இல்லாமல் இந்த படத்தை ரசிக்கிறார்கள் .
காசு இருந்தால் யார் வேணுமின்னாலும் நடிக்க வரலாம் என்ற உதயநிதி கோட்பாடுபடி அதே போல் கொஞ்சம் பணமும் 20 ஹிட் படமும் கொடுத்தால் யார் வேணுமுன்னாலும் அரசியலுக்கு வரலாம் என்பதை உதயநிதி குடும்பம் ஏற்றுகொள்ளுமா?
இசை பற்றி ஒன்னும் சொல்ல இல்லை.என்னனா ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட பாடல்களே இதிலும் repeat .அமலாபால் உதாரணம் தான் இதற்கும்.வேற இல்லை என்றால் எதை வேண்டுமானாலும் நம் ஆட்கள் ரசிக்கிறார்கள்.
காமெடி என்று பார்த்தால் முதல் பாதியில் ஒரு 4 நல்ல காமெடி.இரண்டாம் பாதயில் ஒரு 5 நல்ல காமெடி. மற்றவை எல்லாம் வெறும் புன்னகைக்க வைக்கும் காமெடி.
ஒரு கல் ஒரு கண்ணாடி --இந்த கண்ணாடி உடைய இன்னும் சில கற்கள் தேவை
பதிவை ரசித்தவர்கள் கமெண்ட் போடவும்.
உங்கள் ஓட்டை குத்தவும்.
ஏப்ரல் இல் நல்ல படம் இல்லாமல் இந்த படத்தை ரசிக்கிறார்கள் @@
ReplyDeleteஅட..இது நல்லாருக்கே..நம்மாளுங்க டேஸ்ட்டையே புரின்ஞ்சிக்க முடில/
சரி இங்க எங்கங்க அமலாபால் வந்தாங்க ?
நல்ல சாட்டை அடி - உங்க விமர்சனம்..படம் எடுத்தவன் படிச்சாங்கனா கொஞ்சம் நொந்து போர்ருவாங்க..அவ்வளவா ? படம் மோசம்.பார்த்துட்டு சொல்றேன்.மற்றப்படி செம்மையான பகிர்வு.நன்றி.
நச் review..
ReplyDelete//காமெடி என்று பார்த்தால் முதல் பாதியில் ஒரு 4 நல்ல காமெடி.இரண்டாம் பாதயில் ஒரு 5 நல்ல காமெடி//
ReplyDeletei can't aggree this. For me first half 2 comedy and second half 4 comedy. Rest all moka comedy.