Pages

Thursday, 26 April 2012

என்னை கவர்ந்த த்ரில்லர் படங்கள் : பாகம் 3


என்னை கவர்ந்த த்ரில்லர் படங்கள் : பாகம் 3 




என் முதல் பதிவு பிப்ரவரியில் ,ஏப்ரல்இல் 10 வது பதிவு.அதற்குள் 2155 ஹிட்ஸ் கொடுத்த ப்ளாக் ரசிகர்களுக்கு நன்றி.இது அதிகமா என்று தெரியவில்லை.என்னை பொறுத்தவரை நான் எழுதியதை இதனை பேர் படித்திருகிறார்கள்  என்பதை எண்ணி மகிழ்ச்சி.

COLD PREY:

ஐந்து நண்பர்கள் விடுமுறைக்காக பனிமலைக்கு செல்லும்போது,அங்கே ஒருவருக்கு கால் உடைந்து விடுகிறது.பனிமலைக்கு நடுவே தனியாக ஒரு கட்டடம் தனியாக தெரிகிறது.உள்ளே சென்றபின் தான் தெரிகிறது அது 1970 களில் ஒரு தங்கும் விடுதியாக இருந்திறகிறது.விடுதியின் மேலாளரின் மகன் காணாமல் போனதால் அந்த விடுதி மூடப்பட்டதாக தெரிந்துகொள்கிறார்கள்.எல்லோரும் களைப்பாக இருபதனால் ஓய்வு எடுக்க அறைகளுக்கு  செல்கிறார்கள். அனால் அவர்களை தவிர மேலும் ஒருவர் அந்த விடுதியில் இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை.இனி என்ன? அதேதான்.ஒவோருவாராக கொல்லபடுகிறார்கள்.விஷயம் அதுவல்ல இந்த படத்தை சிறப்பு அம்சமே அந்த பனிமலை விடுதியும் அந்த அமைதியான மர்மமும்தான்.THRILLER பட ரசிகர்கள் தவரவிடகூடாத படம்.
IMDB RATING :6 .3 





THEM :
இந்த படத்தில் கதை என்றால் ஒன்றும் இல்லைதான்.அனால் HORROR THRILLER  படத்திற்கேற்ற மூட் 100 சதவிகிதம் உள்ளது என்று அடித்து சொல்லலாம்.ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்குமோ என்று பதற வைக்கும் படம்.இப்படி ஒன்று நமக்கு நடந்தால் ? முடிவு ஒன்று உங்களுக்கு சப்பென்று இருக்கும் அல்லது யோசிக்க வைக்கும்.
IMDB RATING : 6 .6 




JOY RIDE (PART 1 ):
    ஒரு காதல் ஜோடியும் காதலனின் அண்ணனும் காரில் நெடுந்தூர பயணம் செய்கிறார்கள்.அங்கெல்லாம் காரில் WIRELESS ரேடியோ வைத்திருப்பார்கள்.வழி தெரியாவிட்டாலோ,விபத்து ஏற்பட்டாலோ,வண்டி ரிப்பேர் ஆனாலோ நீங்கள் ரேடியோ மூலம் உதவிக்கு அழைக்கலாம்.அப்படி காரில் போகும் போது அண்ணன் ரேடியோ எடுத்து கண்டபடி பெண்குரலில் யாரிடமோ பேசிவிடுகிறான்.உடன் பேசியவன் சைக்கோ .இவர்களை தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறான்.நான் சென்ற பதிவில் எழுதிய DUEL படம் பிடித்தால்  இதுவும் நிச்சயம் பிடிக்கும்.
IMDB RATING : 6 .5 


REINDEER GAMES :
       சிறையில் இரு நண்பர்கள்,ஒருவன் பலே திருடன்.மற்றொருவன் சாதாரண திருடன்.பலே திருடன்  பார்க்காமலே கடிதம் மூலம் ஒரு பெண்ணை காதலிக்கிறான்.அதை பற்றி மற்றவனிடம் முழுவதும் சொல்லி இருக்கிறான்.வெளியே போகும் முன் பலே திருடன் சிறை கலவரத்தில் கொள்ளபடுகிறான்.அவன் நண்பன் வெளியே போகிறான்.கொல்லப்பட்டவனின் காதலி இவன்தான் தன் காதலன் என்று நினைத்து இவனை கட்டி பிடித்துவிடுகிறாள்.இவனுக்கும் அவளை பிடித்துவிட இவனும் ஒன்றும் சொல்லாமல் தான்தான் அவன் என்று சொல்லி நடிக்கிறான்.காதலியின் அண்ணன் ஒரு திருடன் ,அவன் தன் தங்கையின் காதலன் ஒரு பலே திருடன் என்று தெரிந்து தன் குழுவோடு வந்து ஒரு கொள்ளைக்கு திட்டம் போடுகிறான்.அதை செயல் படுத்தினால் தான் இருவரையும் வாழவிடுவேன் என்று பயமுறுத்துகிறான்.இனி என்னே? கொள்ளை அடிக்க  தெரியாத நாயகன்.எப்படி சமாளிக்கிறான் என்பதே மீதி.நல்ல படம் .முடிவு நீங்கள் யோசிக்க முடியாத ஒன்று. பாருங்கள்.
 IMDB RATING : 5 .6 


தொடரும் 





10 comments:

  1. சார், வர வர கலக்குறீங்க..நீங்க பார்த்து ரசித்த திரில்லர் படங்களை என்னால நினைத்துக்கூட பார்க்க முடில..இனிமேல நீங்க எனக்கு திரில்லர் படங்களுக்கு குரு ..நிறைய நல்ல படங்களை தேர்ந்தெடுத்து எழுதுறீங்கனு நினைக்கிறேன்...தொடருங்கள்..இந்த நான்கு படத்தையும் உடனே டவுன்லோடு போடுறேன்..மிக்க நன்றி.

    ReplyDelete
  2. உங்கல கேட்காமல் தமிழ்மனத்துல பதிவை இணைத்துட்டேன் சார்..தவறா இருந்தா மன்னிச்சுருங்க.

    ReplyDelete
  3. thanks dear am searching this kind of movies....

    ReplyDelete
  4. nantri solliten aanaal vote epdi podrathunu theriyala???

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு நண்பரே...

    ReplyDelete
  6. தமிழ்மணம் ஒட்டு பிரச்சனைக்கு உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி உள்ளேன்.. அதன் படி மாற்றங்கள் செய்யவும்..அப்பொழுது தான் அனைவரும் ஒட்டு போட முடியும்..

    ReplyDelete
  7. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..
    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete
  8. அருமையான பட்டியல் (01,02,03 சேர்த்து)... பாதிக்கு மேல் பார்த்துள்ளேன். மீதியை இன்றே டவுண்லோட் போட்டுவிட்டேன். பட்டியல் இன்னும் இருக்கிறது என்று நம்புகிறேன்... நன்றி!

    ReplyDelete