தமிழ் சினிமா 90 களில், எதில் இருந்து தொடங்குவது? படங்களில் இருந்தா? அல்லது கதாநாயகர்களில் இருந்தா? சரி அதை விட்டுவிடுவோம். 80 களின் இறுதி அக்னி நட்சத்திரம் ,அபூர்வ சகோதரர்கள்,குரு சிஷ்யன் ,கரகாட்டக்காரன்,மாப்பிள்ளை,புதிய பாதை,ராஜாதி ராஜா ,புது புது அர்த்தங்கள்,வருஷம் 16 என்று ரஜினி கமல் படங்களும் சில எதிர்பாராத படங்களும் வெற்றி அடைந்தன.மிகவும் எதிர்பார்க்க பட்ட தர்மத்தின் தலைவன்,கொடி பறக்குது,சத்யா,உன்னால் முடியும் தம்பி,சிவா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தன.
சரி 90 க்கு வருவோம்.
இந்த 90 களுக்கு வரும்போது,மணிரத்னம் ஒரு ஹிட் இயக்குனராகவும் பாலச்சந்தர் போராடிக்கொண்டும் இருந்தனர்.பாலச்சந்தருக்கு ஜான் ஏறினால் முழம் சறுக்கும் அளவுக்கு கஷ்டப்பட்டு ஒரு ஹிட் கொடுத்தால் பின்னர் சில தோல்விகள் தொடர்ந்து வந்தது.பாரதிராஜா ஏற்கனவே 80 கள் இறுதியில் என் உயிர் தோழன்,கொடி பறக்குது, மூலம் ஏகத்துக்கு சறுக்கி இருந்தார்.இப்போது மீண்டும் புது நெல்லு புது நாத்து மூலம் தோல்வி.ராம நாராயணன்,மணிவண்ணன்,விசு,கங்கை அமரன் போன்றவர்கள் சரமாரியாக படங்கள் எடுத்து தள்ளினார்கள் .ராமராஜன்,பாண்டியராஜன்,சத்யராஜ், போன்றவர்கள் மினிமம் கேரண்டி ஹீரோவாக வளம் வந்து கொண்டிருத்த நேரம். P .வாசு,R .K .செல்வமணி ,கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்களின் தொடக்க காலம்.சொல்லவே வேண்டியது இல்லை ரஜினி ,கமல் , இளையராஜா போன்றவர்களின் உச்ச நேரம்.
1990 -1995 :
90 இன் தொடக்கத்தில் ரஜினியா கமலா என்றால் ஜெயித்தது கமலே.ரஜினிக்கு அதிசயபிறவி,பணக்காரன் போன்று பிளாப்,சுமாரான படங்களே.அனால் கமலோ மைக்கல்,மதன,காமராஜன் ஹிட் மூலம் நின்றார்.
அடுத்த ஆண்டும் அதாவது 1991 உம் ரஜினி,கமல் இருவருக்கும் சுமாரே.தளபதி,தர்மதுரை ,நாட்டுக்கு ஒரு நல்லவன் இதில் தளபதி மட்டும் தப்பித்தது.கமலுக்கு குணா தளபதியோடு மோதி வீழ்ந்தது.இந்த ஆண்டின் ஆச்சர்யம் சின்ன தம்பி மற்றும் கேப்டன் பிரபாகரன் ஹிட் ஆனது.சின்ன தம்பி தான் ஆண்டின் அதிக வசூல் ( 7 கோடி) செய்த படம்.
92 இல் ரஜினி மன்னன் என்ற சுமாரான ஹிட்டோடு தொடங்கினார்.அண்ணாமலை மூலம் சிக்ஸர் அடித்துவிட்டார் .பாண்டியன் சொதப்பியது.கமலுக்கு சிங்காரவேலன் சறுக்கினாலும் தேவர் மகன் கம்பீரமாக எழுந்து நின்றது.மற்ற ஹிட் படங்கள் என்றால் செம்பருத்தி ,சின்ன கௌண்டர்,சூரியன்,வானமே எல்லை. குறிப்பிட தக்க படம் ரோஜா.அறிமுகம் நம்ம ரகுமான்.அதோடு நம்ம இளைய தளபதி விஜய் இந்த ஆண்டுதான் அறிமுகம் ஆனார்.
1993 இல் நம்ம அஜித் அறிமுகம் ஆகிறார்.இந்த ஆண்டு ரஜினி ,கமல் இருவருக்கும் சிறப்பாக இல்லை.எஜமான்,உழைப்பாளி இரண்டும் ஓகே என்ற அளவில் தான் ஓடின.இந்த ஆண்டும் சூப்பர் ஹிட் படமாக ஸ்டார் யாரும் இல்லாத கிழக்கு சீமையிலே,gentleman ஓடியது.கமல் கலைஞன் என்று பேர் எடுத்தார்.வால்ட்டர் வெற்றிவேல் நன்றாக ஓடியது.93 சருக்கிவிட்டதால் 94 இல் ரஜினி வீராவோடு நிறுத்திவிட்டார்.கமல் மகாநதி என்ற காவியத்தை எடுத்தார்.ஓடவில்லை.விட்டேனா பார் என்று நம்மவர் எடுத்தார்.மகளிர் மட்டும் தயாரித்தார்.ஊஹும்.செல்ப் எடுக்கவில்லை.அமைதிப்படை ,நாட்டாமை,காதலன்,ஜெயஹிந்த் ஆகியவை ஹிட்.
1995 முக்கியமான ஆண்டு.
ரஜினி பாட்ஷா மூலம் உச்சத்தை அடைந்த ஆண்டு.அப்பவே ஐம்பது கோடி வரை வசூல் .இந்த ஹிட் மூலம் அதை தக்க வைக்க சென்ற ஆண்டு ஹிட் ஆன நாட்டாமையின் டைரக்டர் யும் காதலன் இசை அமைபாளறையும் தன்னோடு இணைத்து முத்து எடுத்தார்.பாட்ஷா அளவுக்கு இல்லை என்றாலும் ஹிட் தான்.கமல் பாவம் குருதிபுனல் என்ற வித்யாசமான படம் எடுத்தார்.ஓடிவிடுமா என்ன.பம்பாய் மூலம் இந்தியா எங்கும் மணிரத்னம் பேசப்பட்டார்.அஜித் ஆசை என்ற ஹிட் கணக்கை தொடங்கியதும் இந்த ஆண்டு தான்.
1990 முதல் 1995 வரை ஏற்றம் என்று பார்த்தால் ரஜினி ,எ.ஆர்.ரகுமான்,ஷங்கர்,மணிரத்னம்,ரவிக்குமார் ஆகியோர் குறிபிடத்தக்க ஏற்றம் கண்டனர்.இறக்கம் என்றால் கமல்,இளையராஜா,ஆகியோர் இறக்கம் கண்டனர். ராமராஜன்,டி.ராஜேந்தர் ஆகியோர் பீல்ட் அவுட் ஆனர .சரி என்னதான் கமலை ரஜினி முந்திவிடாலும் கமலை பார்த்து சில விஷயங்கள் செய்துபார்க்க தொடங்கினார்.கமல் தேவர் மகன் ஹிட் ஆனதும்,கமல் கதை,திரைகதை,வசனம், பின்னல் இருந்து படத்தை இயக்குவது போன்ற வேலைகள் மூலம் பேர் பெற்றார்.ரஜினிக்கும் அப்படியொரு ஆசை வந்தது. வள்ளி என்ற படம் மூலம் அதை செய்து பார்த்தார்.தனக்கு அதெல்லாம் வராது என்று விட்டு விட்டார்.
பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய விஜயகாந்த் தொடர்ந்து அறிமுக பிலிம் இன்ஸ்டிடுட் மாணவர்களுக்கு வாய்ப்பு தந்து சரியான படங்களை தேர்வு செய்ய தவறி விட்டார்.அவர் மட்டும் புதிவர்களுக்கு வாய்ப்பு தராமல் ரஜினி போல் ஹிட் கூட்டணி அமைத்ருந்தால் வேறு மாதிரி ஆகியிருக்கும்.
இந்த ஆண்டுகளில் பொதுவான ஒருவர் கவுண்டமணி. நாயகிகளில் குஷ்பூ உச்சம் பெற்றனர்.
சரி பதிவு ரொம்பவும் பெரிதாக போய்கொண்டே இருக்கிறது.
1996 -2000 வரை அடுத்த பதிவில் சந்திபோம்.
தொடரும்
வந்துட்டேனே வந்துட்டேனே..கொஞ்சம் லேட்டு..மன்னிச்சிருங்க.
ReplyDeleteஇருங்க படித்துட்டு வந்துருறேன்..
ReplyDeleteவிஜய் சார், அழகான பதிவு..கலக்கலான அலசல்/
ReplyDeleteநீங்க சொன்ன மாதிரி 94, 95 ஆண்டுகளில் எல்லாம் நான் குழந்தையா தவழ்ந்துகிட்டு இருந்தேன்..ஹி..ஹி/
அப்படி தவழும் போது அன்னிக்கு சினிமாவில் நடந்துக்கொண்டிருந்த தகவல்களை சுருங்க தெரிந்துக்கொண்டேன்.நான் பெரிய ஹிட் என்று நினைத்த குணா, வீரா போன்ற படங்கள் தோல்வியா ? நம்ப முடியவில்லை..எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்த படம் பாட்ஷா..மறக்கவே முடியாது, வீடியோ டேப்பை போட்டு தேய்த்திடுவேன்/எனக்கு அண்ணாமலை, ரோஜா, மஹாநதி போன்ற படங்கள் என்னிக்குமே ஃபேவரட்.
நீங்க சொல்வதை பார்த்தால்..90 ஆண்டு சினிமா பல பேருக்கு தொடக்க புள்ளியாக அமைந்துள்ளது..மேலும் பல விடயங்களை அறிந்துக்கொள்ள ஆசையாக உள்ளேன்..சீக்கிரம் அடுத்த பாகத்தை வெளியிடுங்கள்.மிக்க நன்றி.
உங்கள் கமெண்டுக்கு நன்றி.
ReplyDeleteவீரா சுமாராக ஓடியது. பெரிய ஹிட் இல்லை. குணா படு தோல்வி.
இதன் தொடர்ச்சி சில நாட்களில்.
நல்ல மலரும் நினைவுகள்...படிக்க சுவாரிசியம்மா இருக்கு,,,
ReplyDeleteமன்னன் மெகா ஹிட்.. கோவை ராயல் தியேட்டரில் மன்னன் 175 நாட்கள் மேல் ஓடியது.. :)
நான் அந்த படத்துக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து பார்த்தேன்.. மறக்க முடியாத அனுபவம்....
நன்றி ராஜ்.
Deleteமன்னன் பிளாப் என்று சொல்லவில்லை.அண்ணாமலை,பாட்ஷா,படையப்பா போல் சூப்பர் ஹிட் இல்லை என்றுதான் சொல்ல வரேன்.மன்னன் சுமாரான ஹிட்.அப்போதெல்லாம் ரஜினி படம் போடும் தியேட்டர்கள் கண்டிப்பாக 100 நாட்கள் ஓட்டுவார்கள்.
Intresting!!! Waiting for next seris/continuation of tamil Movies...
ReplyDelete