என்னை கவர்ந்த த்ரில்லர் படங்கள் : பாகம் 2 :
ஒன்று மட்டும் புரிகிறது.தமிழ் பட விமர்சனம் எழுதும் பொது ஹிட்ஸ் அதிகமாகிறது.ஆனால் ஆங்கில படங்கள் பற்றி பதிவு போட்டால் ,ஹிட்ஸ் குறைவுதான்.
CALVAIRE(THE ORDEAL):
இது ஒரு பிரெஞ்சு படம். நாயகன் ஒரு பாடகன்.அகந்தயுடையவன்.கிறிஸ்துமசுக்கு சில தினங்கள் இருக்கும் பொது ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பும்போது ,வண்டி கோளாறு ஆகிறது.அங்கே தனது நாயை தேடி வரும் ஒருவர் இவரை பார்த்து இவரை ஒரு பாடகர் என்று தெரிந்து,தான் வண்டியை சரி செய்து தருவதாக சொல்லி இவரை தன் வீட்டில் தங்க வைக்கிறார்.தினமும் எதாவது சொல்லி வண்டியை ரிப்பேர் செய்யாமல் வைக்கிறார்.சில தினங்களில் பாடகரை சிறை வைக்கிறார். இறுதியில் தான் தெரிகிறது இவரும் ஒரு பாடகர் அங்கீகாரம் அற்றவர் என்பது. நல்ல தரமான படம்.அனால் மெதுவாக செல்லும்.
DUEL (1971):
STEVEN ஸ்பீல்பெர்க் இன் முதல் முழு நீள திரை படம்.இந்த படம் முதலில் டிவி க்காக எடுக்கப்பட்டு பின் திரைப்படமாக எடுக்கப்பட்டது. பாலைவன ரோட்டில் தனியாக பயணம் செய்யும் நாயகன் ஒரு டேங்கர் லாரியை முந்தி செல்ல முயலும் போது அவன் வழி விடாமல் தொடர்ந்து தன்னை இடித்து தள்ள முயலும் அந்த லாரி இடம் இருந்து தப்பிக்கும் பரபரப்பான படம். நாயகன் நடுவில் அந்த லாரியிடம் இருந்து தப்பித்து ஒரு ரெஸ்டாரண்டில் இருக்கும்போது அவனது பயம் கலந்த பார்வை நமக்கும் நிச்சயம் பிடித்துகொள்ளும். கிளாசிக் படம்.
THE SCORE( 2001):
உங்களுக்கு ITALIAN JOB,OCEANS ELEVEN போன்ற கொள்ளையை மையாமாக கொண்ட படங்கள் பிடிக்குமா? இந்த படம் நீங்கள் தவற விடகூடாத படம்.Robert De Niro,Marlon Brando,Edward Norton போன்ற பெரிய தலைகள் நடித்த படம்.மர்லன் பிராண்டோவின் (நம்மூர் சிவாஜி போன்றவர்) கடைசி படம். கிளைமாக்ஸ் ஒரு ஆச்சர்யம்.
THE UNINVITED GUEST( 2004):
நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். ஊருக்கு ஒதுக்கு புறமான வீடு. தனியாக நீங்கள். ஒருவர் அழைப்புமணி அடித்து உங்களிடம் நான் ஒரு போன் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு உங்கள் வீட்டு தொலைபேசியில் பேசுகிறார். சரி பேசட்டும் என்று நீங்கள் உள்ளே செல்கிறீர்கள்.சில நிமிடங்களில் பேச்சு சப்தம் கேட்கவில்லை.வெளியே வந்து பார்த்தல் வந்த ஆளை காணவில்லை.சுட்டுமுட்ட்ரும் பார்த்து விட்டு ஆள் போய் விட்டார் என்று நினைத்து வீட்டை தாளிட்டு கொண்டு வருகிறீர்கள்.சில நிமிடங்களில் மாடியில் இருந்து சப்தம்.
இதுவரை சொன்னதை வைத்து நீங்கள் ஒரு கதை நினைத்தால் அது இல்லை.இரவில் பார்த்தல் நலம்.
//ஒன்று மட்டும் புரிகிறது.தமிழ் பட விமர்சனம் எழுதும் பொது ஹிட்ஸ் அதிகமாகிறது.ஆனால் ஆங்கில படங்கள் பற்றி பதிவு போட்டால் ,ஹிட்ஸ் குறைவுதான்.//
ReplyDeleteஉண்மை தான்.... :)
உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்து உள்ளேன்.. "Submit To Tamilmanam" என்று இருந்தது, இணைத்தேன்..இனைந்து விட்டது.....
உங்கள் த்ரில்லர் படங்களின் தொகுப்பு அருமை.... நல்ல Collection...Duel மட்டும் பார்த்து உள்ளேன்..
நண்பரே, அருமையான தொடர்..திரைப்படங்களை குறித்த நச்சென்ற தகவல்கள் மிக்க நன்று..நீங்கள் தீவிரமான திரில்லர் ரசிகர் என நம்புகிறேன்..(இமெயிலில் நீங்கள் தந்த படமெல்லாம் பெஸ்ட்)..விரைவில் அடுத்த பாகம் வருமா ? காத்திருக்கிறேன்.நன்றி.
ReplyDeleteஇதில் டுயெல் படம் மட்டுமே என் கண்களில் தரிசனம் கண்டுள்ளேன்.ஸ்பீல்பெர்க்கோட தீவிர ரசிகன் நான்.இப்பக்கூட வார் ஹோர்ஸ் பார்க்க போகிறேன்.
குறிப்பு : நணபர், என்னை மன்னிக்கவும்..Tamil 10ல் தங்களை கேட்க்காது இப்பதிவை இணைத்து விட்டேன்.அழகான இந்த சினிமா தொகுப்பு பலருக்கும் போய் சேரட்டும்.
hello friend.. such a nice work... comparing with tamil movies of nowadays.. foreign movies are lot better.
ReplyDeleteplease continue...
THANKS.I TRY TO CONTINUE.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete