ஜகல்பந்தி ----விகடன் ஏப்ரல் பூல்,KD பில்லா எப்படி ,IPL 6
முன்பே அதாவது பதிவு எழுத தொடங்கிய போதே கேபிள்இன் கொத்து பரோட்டா ,வீடு திரும்பலின் வானவில் போல் பல விஷயங்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து அதே போல் ஜகல்பந்தி என்று பேர் எல்லாம் வைத்து ஜரூராக 2 வாரம் எழுதி இருப்பேன் என்று நினைக்கிறன்.அதோடு தொடர்ச்சியாக எழுத முடியவில்லை.இப்போது ஆசை .எத்தனை நாளோ தெரியவில்லை.
ஊடகங்களின் அலும்பு : சென்ற வார விகடனில் எப்போதும் வரும் இன்பாக்ஸ் பகுதியில் பல விஷயங்களை பற்றி சொல்லி இருந்தார்கள்.ஓவொன்றும் கொஞ்சம் ஆச்சர்யம் தரும் விஷயங்கள் தான் .1.டிர்டி பிக்சர் தமிழ் ரீமேக் படத்தில் நடிக்க மறுத்து வந்த நயன்தாராவை அஜித் அறிவுரை சொல்லி அந்த படத்தில் நடித்தால் நல்ல பேர் பெறுவாய் என்று சொல்லி அவரை நடிக சம்மதிக்க வைத்தாராம்.2.விஜயகாந்த் மகன் அறிமுகம் ஆகும் படத்தை சிங்கம் இயக்குனர் ஹரி இயக்குகிறார் .இப்படி சில செய்திகள்.இப்படி போட்டு பின் சிறிய எழுத்துகளில் 83ம் பக்கம் பார்க்க என்று சொல்லி அந்த செய்திகள் எல்லாம் ஏப்ரல் பூல் ஆக்க போடப்பட்ட என்று இருந்தது.இது இப்படி இருக்க மறுநாள் முதலே பல சினிமா இணைய தளங்களிலும் ஏன் இப்போது டி.விக்களில் வழக்கமாகிவிட்ட சினிமா செய்திகளில் எல்லாம் கூட அந்த ஏப்ரல் பூல் செய்திகள் உண்மை என்று முழுதும் படிக்காமல் அப்படியே ஒப்பித்து விட்டார்கள்.உங்களில் பலரும் அந்த செய்திகள் பற்றி கேள்விபட்டிருக்கலாம்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் பற்றி எனக்கு எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் இருந்தது.காரணம் அந்த இயக்குனர் பாண்டிராஜின் பசங்க எனக்கு ஓகே என்ற அளவில் தான் பிடிக்கும் .வம்சம் பார்க்கவில்லை.மெரினா பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்நிலையில் கேடி பில்லா படம் வெளிவந்தது.கேபிள் ,சி.பி செந்தில் ,இன்ன பிற பதிவர்கள் படம் மொக்கை என்று சொல்லி விட்டனர்.ஆனாலும் வீடு திரும்பல் மோகன் சார் ,இன்னும் சிலர் சூப்பர் காமெடி என்று சொல்லிவிட்டதால் ஒரே குழப்பம் .எனக்கு ஓகே ஓகே பிடிக்கவில்லை .கலகலப்பு பிடித்தது.லட்டு பிடித்தது.ஒருவேளை நல்ல காமெடி படமோ ,நாம் பார்க்காமல் இருக்கிறோமோ என்று குழப்பம்.
என்ன எதற்கென்று தெரியவில்லை சிலரை பார்த்தாலே பிடிக்காது.எனக்கு அப்படி பாய்ஸ் சித்தார்த்(நிச்சயம் சமந்தா விஷயம் இல்லை) .காரணமும் தெரியவில்லை .என் நண்பன் ஒருவனுக்கு மோகன்லால் என்றாலே பிடிக்காது.சிலரை ஏன் எதற்கு என்று தெரியாமலே பிடிக்கும்.
போகிற போக்கை பார்த்தல் இருக்கும் ஒன்றிரண்டு ஓட்டையும் இல்லாமல் செய்துவிடுவார்கள் தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் போல.மாணவர்களை அடிப்பதும் ,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதிய தலைமுறை டி.வியில் லைவில் மைக்கை பிடுங்கி எரிந்து சிபிஐ வரும் என்று எச்சரித்து சென்றதெல்லாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.
ஐ.பி.எல் 6 தொடங்கிவிட்டது. 1 1/2 மாதத்திற்கு ஒரே ரகளை தான்.சன் டிவி ஒரு டீமை வாங்கிவிட்டார்கள்.பார்த்து கொண்டே இருங்கள் சன் டிவிக்காக தமிழ் நாட்டு ரசிகர்கள் ஹைதராபாத் அணிக்கு ஆதரவாக மாறி விட்டார்கள் என்று சன் செய்திகளில் வந்தாலும் வரும்.
ஜகல் பந்தி நல்லா தான் இருக்கு.. (ஜகல் பந்தினா என்ன பாஸ்?? )
ReplyDeleteபந்திக்கு தலைப்பு போட்டால் இன்னும் மெருகேறும் அண்ணா..
கலக்குங்க அடிக்கடி தொடருங்க
ரைட்டு தொடருங்கள்
ReplyDeleteமொத்தமாய் எழுதாமல் குட்டி குட்டி பாராவாய் தலைப்பு கொடுத்து எழுதவும்
Visit my blog kaliaperumalpuducherry.blogspot.com.Expecting your comments and suggestions
ReplyDelete//சன் டிவிக்காக தமிழ் நாட்டு ரசிகர்கள் ஹைதராபாத் அணிக்கு ஆதரவாக மாறி விட்டார்கள் என்று சன் செய்திகளில் வந்தாலும் வரும்// >>இது கண்டிப்பா உண்மை தான் ... சன் நெனச்சா எதுவும் பண்ணுவானுங்க
ReplyDelete