Pages

Monday, 15 April 2013

ஜுகல்பந்தி : கதை, IPL COMEDY, SPECIAL 26, குமுதம் இளையராஜா

ஜுகல்பந்தி : கதை, IPL COMEDY, SPECIAL 26, குமுதம் இளையராஜா 

திரை படங்களில் கதை :
ஓர் திரை படத்திற்கு கதை எவ்வளவு முக்கியம்? அதானே உயிர்.ஒரு படம் உயிர் பெறுவது எப்படி.முதலில் கதையை எழுதி அதற்க்கு ஏற்றாற்போல் திரைக்கதை வடிவம் தந்து அதை முழுவடிவம் செய்து முடிப்பதே முதல் படியாக இருந்து வந்தது.இன்று வரும் படங்களில் கதை இருக்கிறதா?  கதை சரி இல்லை என்று தூக்கி எறியப்பட்ட படங்களை விடுவோம் .இன்று வெற்றி பெரும்  படங்களிலாவது கதை இருக்கிறதா?உதாரணதிற்கு 2012 மற்றும் 2013இல் இன்றுவரை வெற்றி பெற்ற படங்களை பட்டியலிட்டால்.2012 இல் ஹிட் துப்பாக்கி .சரி அதிலாவது ஆங்காங்கே குண்டு வைத்து நாட்டையே அதிர்சிக்குள்ளகும் தீவிரவாத குழுவுக்கு ஒரு ராணுவ வீரன் அந்த தீவிரவாதிகளுக்கே அதிர்ச்சி கொடுத்தால் ? என்ற ஒரு கரு இருந்தது.மற்ற படங்களான ஒரு கல் ஒரு கண்ணாடி ,கலகலப்பு போன்ற படங்களில் எதோ ஒரு வரி கதை அதை சுற்றி சில நகைச்சுவை காட்சிகள் அவ்வளவே படம்.அதில் சமீப வரவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படமும் சேர்ந்துள்ளது.படமும் ஓரளவு வெற்றி பெற்றுள்ள நிலையில் இது மேலும் இதுபோல் கதை இல்லாத படங்கள் அதிகம் வருவதற்கான அபாய நிலையை அதிகம் ஆக்குமோ?

SPECIAL 26: 
HEIST வகை படங்கள் அதாவது கொள்ளையை மையமாக கொண்டு வரும் படங்கள் எனக்கு பிடிக்கும்.ஆங்கிலத்தில் நிறைய வருவதுண்டு.தமிழில் கலவையான "நாணயம் ",மங்காத்தா போல வெகு சில இருந்தாலும் இந்த SPECIAL 26 இந்திய அளவில் சமீப காலங்களில் வந்த சிறப்பான படம்.ரொம்ப நேர்த்தியாக இருந்தது.பிடித்த விஷயம் 1987இல் நடக்கும் கதை அதில் இந்த கால வேகமான எடிட்டிங் முறை இல்லாமல் இயல்பான எடிட்டிங் முறையில் படம் சீரான வேகத்தில் இருந்தது.போன வருடமே படம் வந்தாலும் இப்போது தான் பார்த்தேன்.காரணம் சப் டைட்டில் உடன் நல்ல பிரிண்ட் .

IPL COMEDY:
எந்த வித அதிர்சிகளும் இல்லாமல் ஏறகுறைய அதே 5அணிகள் தான் நன்றாக விளையாடி வருகிறார்கள் .சென்னை,மும்பை,பெங்களூர்,டெல்லி,கொல்கத்தா போன்றவற்றில் 4 அணி தான்  அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் இருக்ககூடும்.மற்ற ராஜஸ்தான்,பஞ்சாப்,பூனே,ஹைதராபாத் போன்றவை கடைசி இடங்களுக்கு வராமல் இருக்கத்தான் போட்டி .சன் நியூசில் தினமும் மாலை  6.30 பாஸ்கி ,நாணி போன்றவர்கள் IPL ஆட்டங்கள் பற்றி விவாதிக்கிறார்கள்.சிலர் பார்த்திருக்கலாம். சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் சன் டிவியின் புத்தி காட்டி விடுகிறார்கள் .கோப்பையை வெல்ல கூடிய அணி அவர்களது சன் ஹைதராபாத் அணியாம் .இதை அவர்களை அவ்வபோது சொல்ல வைத்துவிடுகிறார்கள்.வெள்ளி கிழமை என்று நினைக்கிறன் யாரோ ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் வந்திருந்தார் அவரிடம் ஹைதராபாத் பற்றி கேட்க்க அவர் அது தேறாத அணி என்றதும் பாஸ்கி அவசரமாக பேச்சை மாற்றி தாவி விட்டார்.பார்க்க காமெடியாக இருந்தது.

வெறுப்பு ராஜா :
குமுதத்தில் இளையராஜா கேள்வி-பதில் சில மாதங்களாக வருகிறது..இதுவரை இளையராஜா பற்றி இருந்த எண்ணங்களை மாறிவிடுமோ என்று தோன்றுகிறது.ரஜினி,கமல்,பாரதிராஜா,எஸ்.பி.பி .ஜானகி ,பாலச்சந்தர் என யாரையும் விட்டுவைக்காமல் சகட்டு மேனிக்கு பதில்களில் விளாசுகிறார்.எப்போது அந்த பகுதி நிறுத்துவார்களோ என்று காத்திருக்கிறேன்.

அஞ்சலியும் பதிவர்களும்:
நடிகை அஞ்சலி போனவாரம் முழுதும் பத்திரிக்கை ,செய்தி சேனல்களுக்கு ஒரு விஷயாமாக சிக்கினார்.பதிவர்களும் தங்கள் பங்கிற்கு அவ்வபோது செய்திகள் போட்டுக்கொண்டே இருந்தனர் சிலர் புலனாய்வு இதழ்கள் போல தலைப்பிட்டு பதிவுகள் தந்தனர். நேற்று பதிவர் இன்றைய வானம் எழுதிய பதிவு யோசிக்க வைத்தது.அது இங்கே 
-- http://indrayavanam.blogspot.in/2013/04/blog-post_8182.html

1 comment:

  1. நானும் ஸ்பெஷல் 26 அதே காரணத்திற்காக சமீபத்தில் தான் பார்த்தேன்.
    மிகவும் எதார்த்தமாக எளிமையாக இருந்தது.
    இறுதிக்காட்சி திருப்பம் நன்றாக இருந்தது.

    ReplyDelete