404- ERROR NOT FOUND--உண்மையில் பேய் படம் தானா ?
2011 இல் வந்த இந்த படத்தில் தெரிந்த முகங்கள் யாரும் இல்லை.
ஒரு மருத்துவ கல்லூரி .அங்கே முதலாம் ஆண்டு படிக்க வருகிறான் நாயகன் அபிமன்யு சுருக்கமாய் அபி.அங்கே சீனியர் மாணவர்கள் பலமாக ராக்கிங் நடக்கிறது.இவனும் சிக்குகிறான்.அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி இருக்கிறான்.அங்கே விடுதியின் 404 ஆம் எண் அறை யாருக்கும் தராமல் பூட்டபட்டு இருப்பதை பார்கிறான்.அந்த அறையில் 3 வருடங்களுக்கு முன் படித்த ஒருவன் தற்கொலை செய்து கொண்டதால் அவன் ஆவி அந்த அறையில் இருப்பதாய் சொல்ல படுகிறது.அதை மறுத்து அந்த அறையை தனக்கு தருமாறு கேட்கிறான்.
ஆனால் தர மறுக்க படுகிறது.கல்லூரியில் ஆசிரியிராகவும் பெரிய எழுத்தாளராகவும்,பெரிய மேதையாக இருப்பவர் அனிருத் .அவரும் அந்த கல்லூரியில் பணிபுரிகிறார்.அந்த 404 அறையை அபி கேட்பதை தெரிந்து அதை அவனுக்கு தருமாறு பரிந்துரைக்கிறார்.அவனுக்கு அந்த அறை கிடைக்கிறது.அடுத்த சில நாட்களில் மீண்டும் ராகிங் .அவன் அந்த அறையில் இருப்பதாய் தெரிந்த சீனியர் ஒருவன் அபியிடம் அவன் அறையில் இறந்தவனை பற்றி முழு விபரமும் அபி தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அடுத்த முறை பார்க்கும்போது கேட்பேன் என்றும் சொல்கிறான்.
அபி சீரியசாக இறந்தவனை பற்றி தெரிந்து கொள்கிறான்.அப்போது தொடங்குகிறது பிரச்சனை .அந்த அறையில் இவன் கண்களுக்கு இறந்தவன் தெரிய தொடங்குகிறான்.இவனிடம் அவ்வபோது பேசுகிறான்.இவனுக்கு உதவ வருகிறார் அந்த ஆசிரியர் அனிருத் .உண்மையில் அவன் பார்ப்பது இறந்தவன் தானா? என்று பல பல அதிர்சிகளை நமக்கு தருகிறார்கள்.மனித மனம் பற்றி டாக்டர் அனிருத் சொல்லும் விஷயங்கள் அருமை.நம் மாதவன் நடித்த எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத் DR.அணிருதாக நடித்துள்ளார்.அதிலும் கடைசி 5 நிமிடம் .CLASS
எனக்கு தெரிந்து இந்த படம் எந்த ஆங்கில உலக படத்தின் காப்பியும் இல்லை. ஒரு துணிச்சாலான ,புத்திசாலிதனமான படம்.கொஞ்சம் வித்யாசமான சில திடுக்கிடும் ட்விஸ்ட்கள் கொண்ட படம் பார்க்க விருப்பம் என்றால் நிச்சயம் பார்க்கலாம். இந்திய அளவில் ஒரு சிறந்த ,ORIGINAL ஆன கதையோடு கொண்ட ஒரு முயற்சி என்ற முறையில் இந்த படத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பார்க்கிறேன்.
ReplyDeleteநண்பரே, நான் உங்கள் பதிவுகளை வழக்கமாக படித்து வருகிறேன், உங்களது விமர்சனத்தை படித்த பின் தான் இப்படத்தை நான் பார்த்தேன், வித்தியாசமான படத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி, மழைச்சாரலில் என் விமர்சனத்தை படித்தமைக்கு நன்றி
ReplyDeleteஇன்னைக்கு தான் உங்க ப்ளாக் பார்த்தேன் சூப்பர் ரஜினி கமல் சண்டை நான் படிக்காதது நன்றி அடிகடி சந்திப்போம் நண்பரே
ReplyDelete