TWIST ENDING ஆங்கில படங்கள் :
ஆங்கில படங்களில் இறுதி காட்சியில் ஒரு பெரும் திருப்பம்(TWISTED ENDING) வந்து நம்மை அசர அடித்துவிடும்.அப்படி பட்ட படங்கள் பல மறக்க முடியாதவை.சில படங்கள் படம் தொடங்கி கதை ஏதோ ஒன்றை நோக்கி சென்று கொண்டிருக்கும்.அப்படியே போய் கொண்டிருக்கும்போது கிளைமாக்ஸ் ஒரு பெரிய அதிர்ச்சியை நமக்கு தரும்.பலருக்கு தெரிந்த உதாரணமாக saw படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சியை சொல்லலாம்.ஒரு எங்கோ ஒரு கழிப்பறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருவர் கண் விழிக்கிறார்கள்.அருகே இறந்த நிலையில் ஒரு பிணம்.அங்கே தொடங்கி பல திருப்பங்களை சந்திக்கும் படம் ,இறுதில் பிணமாக படுத்திருந்தவன் எழுந்து நடந்து செல்வது தான் திருப்பம் .இது உதாரணம் தான்.இது த்ரில்லர் படங்களில் மட்டுமல்ல சாதாரண டிராமா வகை சார்ந்த படங்களிலும் உண்டு.அப்படி அசரடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.
ஆங்கில படங்களில் இறுதி காட்சியில் ஒரு பெரும் திருப்பம்(TWISTED ENDING) வந்து நம்மை அசர அடித்துவிடும்.அப்படி பட்ட படங்கள் பல மறக்க முடியாதவை.சில படங்கள் படம் தொடங்கி கதை ஏதோ ஒன்றை நோக்கி சென்று கொண்டிருக்கும்.அப்படியே போய் கொண்டிருக்கும்போது கிளைமாக்ஸ் ஒரு பெரிய அதிர்ச்சியை நமக்கு தரும்.பலருக்கு தெரிந்த உதாரணமாக saw படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சியை சொல்லலாம்.ஒரு எங்கோ ஒரு கழிப்பறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருவர் கண் விழிக்கிறார்கள்.அருகே இறந்த நிலையில் ஒரு பிணம்.அங்கே தொடங்கி பல திருப்பங்களை சந்திக்கும் படம் ,இறுதில் பிணமாக படுத்திருந்தவன் எழுந்து நடந்து செல்வது தான் திருப்பம் .இது உதாரணம் தான்.இது த்ரில்லர் படங்களில் மட்டுமல்ல சாதாரண டிராமா வகை சார்ந்த படங்களிலும் உண்டு.அப்படி அசரடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.
THE OTHERS(2001): படம் மெதுவாகத்தான் போகும்.ஆனால் முடிவை கொஞ்சமும் யாரும் யூகிக்க முடியாது.படம் தந்த அதிர்ச்சி போக கொஞ்ச நேரம் ஆனது .
ORPHAN(2009): இதுவும் ஒரு அதிர்ச்சியான முடிவை ( உண்மையை ) சொல்லும் படம். ஒரு குடும்பத்தில் அனாதையாய் வாழ வரும் சிறுமி கொஞ்ச கொஞ்சமாக மற்ற குழந்தைகளிடம் தன் முகத்தை காட்டுகிறாள்.அவள் யார் ?
THE MACHINIST(2004) : ஒரு ஆண்டாக தூங்காமல் இருக்கும் ஒருவன் சந்திக்கும் சம்பவங்கள்.முடிவு ?
THE USUAL SUSPECTS(1995) : ஒரு திருட்டு கும்பலை போலீஸ் வளைக்கிறது.அதில் சிக்கிய ஒருவன் தரும் வாக்கு மூலம். இறுதி புத்திசாலி தனமானது -குழந்தை தனமானது எப்படி வேண்டும் ஆனாலும் சொல்லலாம்.இந்த கிளைமாக்ஸ் போல் தமிழில் சமீபத்தில் வந்த ஜீவா நடித்த வந்தான் வென்றான் இருக்கும்.
FIGHT CLUB(1999): படத்தின் இறுதியில் இரண்டு பேர் இல்லை.ஒருவனின் கற்பனைதான் மற்றவன் என்பது ஷாக்.
THE UNINVITED(2009): தந்தை மறுமணம் செய்து கொள்கிறான்.தன் தாய் இறந்த பின் மன நல காப்பகத்தில் இருந்து வரும் பெண் தன் ஒரே ஆறுதாலாக நினைப்பது அவள் சகோதரியை .கடைசியில் அவள் எப்போதோ இறந்து போனவள் என்பது தான் ட்விஸ்ட்.இது ஒரு ரீமேக் படம்.TALE OF 2 SISTERS என்ற படமே மூலம்.
THE GAME(1997): படத்தின் மொத்த பரபரப்பும் ஒரு விளையாட்டான செட் அப் என்று கடைசியில் தெரியும் போது கொஞ்சம் திருப்தி இல்லை.
HIDE AND SEEK(2005): ROBERT DE NIRO நடித்த படம். படத்தின் முடிவை யூகித்து விடலாம்.அதனால் படம் மொக்கைதான்.
OLD BOY(2003): கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத முடிவு.ரொம்ப அப் செட் ஆக்கிய படம். எனக்கு பிடித்த படங்களில் முக்கியமான இடம் உண்டு.இந்த படம் பற்றி ஏற்கனவே முழு விமர்சனம் எழுதி உள்ளேன்.லிங்க் : http://scenecreator.blogspot.in/2012/05/old-boy.html
IDENTITY(2003) : ஒரு மழை நாள்.இரவு .ஒரு தனிமையான ஹைவே ஹோட்டல்.அங்கே மாட்டிக்கொண்டவர்கள் பத்து பேர்.அடுத்தடுத்து மரணம்.முடிவு ட்விஸ்ட்.
THE PRESTIGE(2006): இரு மாஜிக் நிபுணர்கள் ,ஒருவரை ஒருவர் வீழ்த்த போராடும் படம். இந்த மாதிரி ட்விஸ்ட் அடிக்கும் படங்களின் ராஜா நோலன் இயக்கிய படம் சொல்லவே வேண்டாம்.
DONNIE DARKO(2001): ஒரு வீட்டின் மீது விமானத்தின் ஒரு பகுதி விழுகிறது.அதில் தப்பிய ஒருவன் உலகம் அழியபோவதை நம்புகிறான்.முடிவில் அவனே இறந்து போய் விட்டதை சொல்கிறார்கள்.ரொம்ப மொக்கை.
DEAD SILENCE(2007): ஏற்கனவே இறந்து போனவனை வைத்து படம் முழுதும் உயிரோடு இருப்பதாய் போல் காட்டி இருப்பார்கள்.கொஞ்சம் அதிர்ச்சிதான்.
TRIANGLE(2009): படம் உங்களை உள்ளே இழுத்து விடும்.ஒரு கப்பல் பயணத்தில் அடுத்தடுத்து கொலைகள்.எப்பா என்ன த்ரில் .அருமையான படம்.
JACOBS LADDER(1990): தொன்னூறுகளில் வந்த படம்.இப்போது பார்த்தால் முடிவு கொஞ்சம் யூகித்துவிடும்படி உள்ளது.காரணம் நிறைய அந்த வகை படங்கள்.
இந்த மாதிரி முடிக்கும் படங்கள் நிறைய உள்ளது.அதிலும் படம் முழுதும் நாம் ஒரு மன ஓட்டத்தில் பயணிக்கிறோம்.அப்படியே போய் கொண்டே இருக்கிறோம் .அதுவரை பார்த்து வந்த ஒரு விஷயம் முற்றிலும் அது அப்படி இல்லை. என்று சொல்லும் போது தான் இது போன்ற அதிர்ச்சி நமக்கு ஏற்படும்.நீங்கள் பார்த்த இந்த வகை படங்களை எனக்கு சொல்லுங்கள்.
சரியாக சொன்னீர்கள்.
ReplyDeleteஇந்தப்படங்களையும் இதில் சேர்க்கலாம்.
Lock stock and smoking barrels.
snatch.
No country for oldmen
Manoj Night Shyamalan's Movies
ReplyDeleteSixth Sense
The Village
Unbreakable(Konjam Slow but one of my favorite)
Shawshank Redemption (idhu Drama vagai.. but Hero escape scene from Jail is unexpected twist)
ஷயமலன் படங்கள் unbreakable, village பார்த்திருக்கேன்.ரொம்பவும் படம் ஸ்லோ என்பதால் படம் ஞாபகம் இல்லை.மறந்து விட்டேன்.
Deleteஎழுதியிருப்பதில் பாதி படங்களின் டுவிஸ்ட்களை நீங்களே சொல்லிடீங்களே தல :-)
ReplyDeleteஅட ஆமாம் தல. எப்படி சொல்லாமல் எல்லா படங்களிலும் எழுதுவது என்று புரியவில்லை. முடிவு ஒரு ட்விஸ்ட் என்று எல்லா படங்களிலும் சொன்னால் டெம்ப்ளட் மாதிரி இருந்தது.அதன் ஒரு சில படங்களுக்கு எழுதிட்டேன்.
Deleteபடம் ரிலீஸ் ஆன வருஷத்தையும் சேத்து போடுங்க பாஸ்..... தேடரதுக்குள்ள தாவு தீந்துரும் போல :))))))))))))))))))))))))))))))
ReplyDeleteஒ வெரி சாரி .வருடங்கள் சேர்த்துள்ளேன்.நன்றி வருண்
DeleteThe Usual Suspects, Oldboy, இரண்டு படங்களிலும் நான் நினைத்துக் கொண்டே இருந்தது போல படம் அமைந்துவிட்டதால் கொஞ்சம் ஏமாற்றம். ஆனாலும் Oldboyயில் அந்த சமயத்தில் ஏற்படும் அதிர்ச்சி...சொல்ல முடியாது.
ReplyDeleteListல் சில படங்கள் பார்க்கவில்லை. :-)