RED WHITE & BLUE : 18+ பட விமர்சனம்
கதைக்கு போவதற்கு முன்.யாரோ ஒரு பெண் ,அழகாக இருக்கிறாள்.யார் கூப்பிட்டாலும் படுக்கைக்கு வருகிறாள்.ஆனால் விலை மகள் அல்ல.அப்படி ஒரு பெண்ணை பற்றி தெரிந்தால் எவ்வளவு பேர் அவளிடம் போய் இருப்பார்கள்.அதே அவளுக்கு HIV+ இருந்தால் அவளிடம் போனவர்களின் கதி.படத்தின் கதை இப்படி தான் தொடங்குகிறது.எரிகா யாரும் இல்லாதவள்.தினமும் யாருடனாவது படுக்கையை பகிர்ந்து கொள்ள துடிப்பவள்.அதற்காகவே வெளி இடங்களில் சுற்றி கொண்டிருப்பவள்.அதுவும் வருபவர்கள் ஆணுறை அணிய கூடாது என்று சொல்வாள். இசை குழுவை சேர்ந்த மூன்று பேரோடுஒரே நேரத்தில் உறவு கொள்வதை தொடங்குகிறது.அதற்க்கு பின் தினமும் அதே போல்.ஆனால் ஒருவனோடு ஒரு முறை மட்டுமே.தினம் தினம் புது ஆட்கள்.
இவள் வசிக்கும் விடுதிக்கு புதிதாக வருகிறான் நேட்.இவள் இப்படி எப்போதும் யாருடனாவது இருப்பதை பார்க்கிறான்.இவளிடம் பேச்சு கொடுக்கிறான்.அவள் தன் அம்மாவின் புதிய கணவனால் நான்கு வயதில் பாலியல் பலாத்காரம் செய்ய பட்டதை சொல்கிறாள்.இவனையும் அப்படி நினைத்து பேசுகிறாள்.ஆனால் அவன் அவளுக்கு தன்னை பற்றி சொல்கிறான்.அவன் பணி புரியும் இடத்திலேயே அவளும் வேலைக்கு சேர்கிறாள்.அங்கேயும் பலரோடு படுக்கிறாள்.சில நாட்களில் நேட் ,எரிகா நண்பர்கள் ஆகிறார்கள்.
முதலில் இவளை உறவு கொண்ட இசை குழுவை சேர்ந்த ஒருவனுக்கு HIV + இருப்பது தெரிகிறது.அவன் பேர் பிராங்கி.அதிர்ந்து போன அவன் கேன்சர் பாதிக்க பட்ட தன் தாயோடு வாழ்பவன்.மற்ற இருவரும் HIV TEST எடுக்க அவர்களுக்கு நோய் இல்லை.தங்கள் உறவு கொண்ட எரிகா தான் காரணம் என்பது தெரிந்து அவளை தேடுகிறார்கள்.அவளும் அவர்களிடம் சிக்குகிறாள்.அவளை தேடி நேட் வருகிறான். அதற்க்கு பின் நடப்பவை மனம் வலிக்க செய்யும் விஷயங்கள்.படம் முடியும் போது ஒரு வித வெறுமை ஏற்படுகிறது.படத்தில் யாருமே முழுதும் கெட்டவர்கள் இல்லை.வசனங்கள் மிக குறைவு .இசை எங்கோ சில இடங்களில் தான்.
2010 இல் வந்த இந்த படம் 1:40 நிமிடம் ஓடுகிறது.
No comments:
Post a Comment