HORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1
இனி 1970 கள் முதல் இன்று வரை சில தீம்கள் பற்றியும் அந்த வகையில் சிறந்த படங்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க பார்கிறேன்.1960 களில் நான் பார்த்ததில் HITCHCOCK IN PSYCHO, ROMAN POLANSKI IN REPULSION இவையே சிறந்தவை.இனி எழபதுக்கு வருவோம்.
1970 கள் :
எழுபதுகளின் தொடக்கத்தில் 1973 இல் THE EXORCIST படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பீதியை கிளப்பியதை தொடர்ந்து வரிசையாய் அதே போன்ற படங்கள் வந்தது.அதோடு 76 இல் THE OMEN படம் மட்டுமே சொல்லிகொள்ளும்படியாக இருந்தது.இதை ஜென்ம நட்சத்திரம் என்று நம்ம ஊரில் சீன் மாறாமல் எடுத்தார்கள்.அதன் பின் ஆங்கில படங்கள் ஒரு புது விதமான தீம் பிடித்தார்கள்.அதாவது கொடூரமான ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறைகளோடு படங்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.THE HILLS HAVE THE EYES,TEXAS CHAINSAW MASSACRE போன்ற படங்கள் ஒரு குழுவாக அல்லது குடும்பமாக போய் மாட்டி கொள்வதை மையமாக கொண்டு வந்து வெற்றி பெற்றது.STEPHEN KING என்ற பிரபல எழுத்தாளர் பல வித்யாசமான திகில் கதைகள் எழுதி வந்தார்.அவரது CARRIE என்ற கதையை அதே பேரில் எடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் கதைகளுக்கு கிராக்கி ஏற்பட்டது.
1980, 1990 அடுத்த பகுதிகளில்
பொதுவா ஹாரர் ஜென்டரில் உள்ளப் படங்கள் பிடிக்கவே பிடிக்காது. குடலைப் பிரட்டும் அளவிற்கு ரத்தம் காட்டினாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் வரும் முக்கால்வாசி படங்கள் கதையை கணக்கில் எடுக்காமல் வன்முறையை அதிகமாகக் காட்ட முயற்சிப்பது தான் பிடிக்காத விடயம்.
ReplyDeleteParanormal Activity, Saw போன்ற சில நல்ல படங்களும் Zombieland போன்ற சில காமெடி முயற்சிகளும் பிடித்தவை.
பதிவு மிகவும் சிறியது போலிருக்கிறது. கொஞ்சம் விரிவாக சில படங்களை எடுத்து ஒரு விரிவான தொடராக எழுதலாமே?