நான் ஈ -- சினிமா விமர்சனம்
தெலுங்கில் ராஜமௌலி முக்கியமான ஒரு இயக்குனர்.அவர் இயக்கியதில் பெரும்பாலும் வெற்றி படங்கள்.அவரது மாவீரன் (தெலுங்கு மகதீரா) எனக்கு பிடித்தது.இந்த நான் ஈ படத்தின் trailer சில மாதங்களுக்கு முன் முதல் முறை பார்த்த போதே நிச்சயம் இந்த படத்தை தியேட்டர் போய் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.ஆனால் பட ரிலீஸ் தள்ளி தள்ளி போய் ஒரு வழியாக இன்று வெளியானது.
தெலுங்கில் ராஜமௌலி முக்கியமான ஒரு இயக்குனர்.அவர் இயக்கியதில் பெரும்பாலும் வெற்றி படங்கள்.அவரது மாவீரன் (தெலுங்கு மகதீரா) எனக்கு பிடித்தது.இந்த நான் ஈ படத்தின் trailer சில மாதங்களுக்கு முன் முதல் முறை பார்த்த போதே நிச்சயம் இந்த படத்தை தியேட்டர் போய் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.ஆனால் பட ரிலீஸ் தள்ளி தள்ளி போய் ஒரு வழியாக இன்று வெளியானது.
கதை trailer பார்த்தபோதே பலரை போல் எனக்கும் புரிந்து விட்டது.படம் பார்த்த போது நூறு சதவிகிதம் அதே கதை தான்.தன்னை கொன்றவனை ,தன் காதலியை அடைய நினைக்கும் வில்லனை நாயகன் ஈ உருவில் வந்து பழி வாங்குகிறான்.கதை எளிது தான்.ஆனால் காட்சிகள் அதற்கான ஐடியா லீட் ,கிராபிக்ஸ் எல்லாம் சேர்ந்து படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றது.இயக்குனரே கூட இந்த கதை போதும் காட்சிகளில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி விட்டதை போல் உள்ளது.படம் தொடங்கி நாயகனை காட்டியதுமே எப்போது இவன் இறந்து ஈயாவன் என்று ஆவல் வந்து விடுகிறது.
ஹீரோ நாணி .(படத்திற்கும் ,இவர் பேருக்கும் என்ன ஒரு பொருத்தம்).பழைய பிரசாந்தையும் இன்னும் சில நடிகர்களையும் நினைவு படுத்துகிறார்.படத்தில் மொத்தமே ஒரு அறை மணி நேரமே உயிருடன் இருக்கிறார்.ஓவராக முக பாவங்கள் காட்டுகிறார்.ஹீரோயின் சமந்தா .அழகான முகம்.ஒன்று சிரிக்கிறார்.அல்லது முகத்தை சோகமாக வைத்துகொள்கிறார்.படத்தின் இன்னொரு பலம் வில்லன் கிச்சா சுதீப்.மனுஷன் பின்னி எடுத்துள்ளார்.படம் முழுக்க இவர் ராஜ்ஜியம் தான்.கூடவே ஆதித்யா.நிறைய தெலுங்கு முகங்கள்.படத்தை இரு மொழிகளில் எடுத்ததாக சொன்னாலும் முழுக்க தெலுங்கு வாயசைப்பு தெரிகிறது.பட்ஜெட் பிரச்சனை இல்லை.இரு மொழிகளிலும் எடுத்திருக்கலாம்.இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.முக்கால் வாசி படம் போன பிறகு ஒரு காட்சியில் சந்தானம் வருகிறார்.பிறகு படம் முடிந்து எழுத்துக்கள் ஓடும் போது சில காமெடி காட்சிகள் வருகிறது(நிறைய பேர் கவனிக்காமல் போய் விட்டார்கள்).படத்தின் வியாபாரத்திற்காக சந்தனத்தை போட்டிருப்பார்களோ என்னவோ?
ஈ வில்லனை ஏர்போர்ட் செல்ல விடாமல் டிராபிக் ஜாம் ஏற்படுத்துவது,விபத்து ஏற்படுத்துவது,பணம் உள்ள லாக்கரை தீ மூட்டுவது,ஈ மருந்தை வில்லனையே குடிக்க வைப்பது , மந்திரவாதியை சமாளிப்பது,இறுதியில் வில்லனை கொள்வது என படம் முழுக்க ஐடியாக்கள் படத்தை நகர்த்தி செல்கின்றது...ஈடா ஈடா பாடல் சூப்பர்.மற்ற பாடல்கள் தெலுங்கு வாடை.குறை என்றால் இப்படி எல்லாம் நடக்குமா என்று யோசித்தால் அவ்வளவுதான்.மேலும் சில அறிந்த தமிழ் முகங்களை பயன்படுத்தி தமிழில் காட்சிகளை எடுத்திருந்தால் ஒரு படி மேலே இருந்திருக்கும். இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குனருக்கு சபாஷ்.
டிஸ்கி : படத்தை தியேட்டரில் பல காட்சிகளில் கை தட்டி விசில் அடித்து ரசிக்கிறார்கள்.அதனால் படம் தப்பித்து கொள்ளும் என்று நினைக்கிறன் .ஆனாலும் அடுத்த வாரம் பில்லா வருவதால் நிறைய அரங்குகளை ஆக்கிரமித்துகொள்ளும்.படத்தை ஜூனில் ரிலீஸ் செய்திருந்தால் ஒரு வேலை இன்னும் ஓடி இருக்கலாம்.தெலுங்கில் ஹிட் அடிக்கிறதா பார்போம்.
சுட சுட விமர்சனமா....பாஸ்....
ReplyDeleteதெரிஞ்ச கதையை சுவாரிசியமா எடுக்கிறது தான் பெரிய கஷ்டமே...அதை ராஜமௌலி ரொம்பவே நல்லா பண்ணி இருக்காருன்னு நினைக்கிறன்..
இங்கேயும் பாசிடிவ் ரெஸ்பான்ஸ் தான் வந்து இருக்கு...
padam nalla iruku na. enaku ennavo billa-ku adi vilumnu thonuthu.
ReplyDeleteகறை படுரதால நல்ல விஷயம் நடந்தா கறை நல்லது தானே
Deleteபடம் உண்மையிலே சூப்பர்.....
ReplyDeleteபடம் உண்மையிலே சூப்பர்.....
ReplyDelete