வில்லா --பிட்சா 2 விமர்சனம்
சென்ற ஆண்டு வெளியான பிட்சா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதுவும் அந்த திரைக்கதை செமையாக இருக்கும்.படம் வரும் முன்பே எனக்கு அந்த படம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.அதை அந்த படம் மெய்பித்தது .இந்த வில்லா -பிட்சா 2 படம் எடுக்கிறார்கள் என்றதுமே எனக்கு ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படுத்திவிட்டது.ட்ரைலர் பெரிய இம்பாக்ட் கொடுக்காவிட்டாலும் படம் எப்படியும் நன்றாக இருக்கும்.பிட்சா முதல் பாகத்தில் பாதி இருந்தால் கூட போதும் என்று இருந்தேன்.தீபாவளிக்கு வந்த படங்கள் எதையும் கூட நான் இன்னும் பார்க்கவில்லை.இந்த படத்தை முதல் நாளே அடித்து பிடித்து பார்த்தேன் .படம் எப்படி பாப்போம்.
முதலில் பிட்சா முதல் பாகத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை.ஒரு சில நடிகர்கள் இதிலும் இருக்கிறார்கள் அவ்வளவே.
கதை என்ன? ஒரு இளம் எழுத்தாளன் ஜெபின் .பட தொடக்கத்திலேயே தந்தையை இழக்கிறான்.தன் சொத்துகளை இழந்து தான் எழுதிய புத்தகத்தை பதிப்பிக்க அலைந்து கொண்டிருக்கிறான்.அவனுக்கு ஒரு காதலி ஆர்த்தி.அவள் ஒரு ஓவிய மாணவி.அந்த நேரத்தில் ஜெபின் பாண்டிச்சேரியில் தனக்கு ஒரு வில்லா (மாளிகை போன்ற வீடு ) இருப்பதை தெரிந்து கொள்கிறான்.எதனாலோ அவன் தந்தை அந்த வீட்டை அவனுக்கு தெரியாமல் வைத்து இருந்திருக்கிறார்.அந்த வீட்டை விற்க அங்கே செல்லும் அவன் அங்கு சில ஓவியங்களை பார்க்கிறான்.அதிர்கிறான்.காரணம் அவன் வாழ்வில் கடந்த சம்பவங்கள் ஓவியங்களாக அங்கே இருக்கின்றது .ஆனால் அவை அந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே வரையப்பட்டவை.மேலும் அடுத்து சில ஓவியங்கள் இன்னும் அவன் வாழ்வில் நடக்காதவை.அவை இனி நடக்க போகின்றதா? அந்த வீட்டின் ரகசியம் என்ன?
என்ன கதை கேட்ட்க சுவாரஸ்யமாக இருக்கா? இவை முதல் பாதி தான்.இரண்டாம் பாதி படத்தை கெடுத்து வைத்திருக்கிறார்கள்.என்னவோ பிரெஞ்சு மந்திரவாதி ,நரபலி,நெகடிவ் எனெர்ஜி,எதிர் வினை என்று போய் கொண்டே இருக்கிறது.படம் எனக்கு கொஞ்சமும் திருப்தியை தரவில்லை.இதற்க்கா இப்படி அலைந்து பார்த்தோம் என்றாகிவிட்டது.
முடிவு பிட்சாவை போலவே முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து முடித்திருக்கிறார்கள்.பிட்சா 1 இல் கதை பெரிதாக இல்லாவிட்டாலும் படம் நம்மை பயமுறுத்தும்.இறுதியில் ட்விஸ்ட் அடித்து முடியும்.இந்த படத்தில் கதை வலுவானது தான்.ஆனால் திரைக்கதை தான் சொதப்பலாக இருக்கிறது.தீபன் இயக்கி இருக்கிறார்.கதை மட்டும் எழுதி கார்த்திக் சுப்புராஜிடமோ,நலன் குமாரசமியிடமோ கொடுத்து இருந்தால் அட்டகாசமாய் எடுத்திருக்க வேண்டிய படம்.சொதப்பலாக போய் விட்டது.
அட்டகத்தி,பிட்சா,சூது கவ்வும் என்று எடுத்த 3 படங்களும் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் சி.வி.குமார் கொடுத்திருக்கும் முதல் தோல்வி படம்.நல்ல வேலை விஜய சேதுபதி நடிக்கவில்லை.படம் 1.45 நேரம் தான்.முதல் பாதி ஓகே.இரண்டாம் பாதி சொதப்பல்.

வில்லாவை நானும் ரொம்பவே எதிர்பார்த்து இருந்தேன் விஜய்....
ReplyDeleteசுமார் படம் போல் தான் தெரிகிறது.
பிட்சா நான் பயந்த வெகு சில படங்களில் ஒன்று....
ஆமாம் ராஜ் நானும் ரொம்ப எதிர்பார்த்து பல்பு வாங்கியது தான் மிச்சம்.படம் சுமாருக்கும் கீழ்தான்.
Deleteபிட்சா2 என்றதும் மிகவும் எதிர்பார்த்து இன்று பார்க்கலாம் என்று இருந்தேன் உங்கள் விமர்சனம் என்னை யோசிக்க வைத்துவிட்டது.
ReplyDelete