சென்ற 2 மாதங்களில் பார்த்த உலக படங்கள்:
பதிவெழுதி 3 மாதங்கள் ஆகிவிட்டது.நேரம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.சில பதிவுகள் எழுத ஆரம்பித்து டிராப்டில் இருக்கிறது.சென்ற இரண்டரை மாதங்களில் நான் பார்த்து முடித்த படங்களை பற்றி இந்த பதிவு .இதில் சில படங்கள் வருடக்கணக்கில் என்னிடம் பார்க்காமல் இருந்தவை .சரி விஷயத்திற்கு வருவோம்.
5150 Elm's Way:(பிரெஞ்சு ): இந்த படத்தை பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம்.செஸ் விளையாட்டில் சாம்பியன் ஆன ஒரு சைக்கோ அந்நியன் படம் போல தவறு செய்பவர்களை கொன்று பிணங்களை தனி அறையில் ஒரு செஸ் போர்டு வைத்து அதில் கருப்பு செஸ் காய்களுக்கு பதில் இந்த பிணங்களை சேர்த்து வருகிறான்.அவனிடம் சிக்கி கொண்ட ஒரு இளைஞன்.தப்பு எதுவும் செய்யாதவன் அதனால் அவனை கொள்ள அந்த சைகோவிற்கு மனமில்லை.என்னோடு செஸ் விளையாடி ஜெயித்தால் விடுதலை என்று சொல்கிறான்.தினமும் விளையாடியும் பல நாட்கள் ஆகியும் அவனை ஜெயிக்க முடியவில்லை.இறுதியில் இருவரும் காய்களுக்கு பதில் பிணங்களை நகர்த்தி விளையாடி வருகிறார்கள்.முடிவு என்ன? IMDB போன்ற தளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள படம் .எனக்கு பிடித்து இருந்தது.

MOTHER (கொரியா ) : ஒரு வயதான பெண்.மன நலம் சரி இல்லாத ஒரே மகன்.ஒரு கொலை வழக்கில் சிக்கும் மகனை காப்பாற்ற எத்தனை தூரம் போவாள்? ஒரு வரி கதை என்றாலும் கொரியா படங்கள் அதை எடுக்கும் விதம்.அசத்தல் .கொரியா பட ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
STOKER : OLD BOY எடுத்த இயக்குனரின் ஆங்கில படம் என்பதால் பார்த்தேன்.நல்ல விமர்சனங்கள் என்றாலும் சூப்பர் என்றெல்லாம் சொல்ல முடியாது.ஆனாலும் இயக்குனரின் ஸ்டைல் சில இடங்களில் தெரிகிறது.ஜஸ்ட் ஓகே படம்.
SHUTTER ISLAND: என்னது இப்பதான் இந்த படத்தை பாக்கறியா என்று கேட்கிறீர்களா? என்ன செய்வது படம் 2 வருடங்களுக்கு மேல் என்னிடம் உள்ளது .படம் வந்த சமயம் எவனோ புண்ணியவான் படத்தின் முடிவை முக்கய விஷயங்களை எழுதிவிட்டான்.நானும் படித்து தொலைத்துவிட்டேன்.ஒரு நாள் திடீர் என்று முடிவு தெரியும் இருந்தாலும் பார்க்கலாம் என்று பார்த்தேன்.முடிவு தெரியாமல் பார்த்திருந்தால் எனக்கு இன்னும் பிடித்திருக்கும் .இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் புரியவில்லை தான்.
ZODIAC: 1960களின் இறுதியில் ஊரில் கொலைகள் நடக்கிறது.கொலையாளி யார் என்று போலீஸ் தேட ஒரு கார்டூனிஸ்ட் தனியே அந்த கொலைகாரனை கண்டு பிடிக்க முயற்சிக்கிறான்.நல்ல படம் தான்.என்ன 1.45 மணி நேரத்தில் எடுத்திருக்க வேண்டிய படத்தை 2.20 நேரம் எடுத்து பல தடவை கொட்டாவி வர வைத்துவிட்டார்கள்.ரொம்ப ஸ்லோ.
NOW YOU SEE ME: நிறைய பேர் பார்த்துவிட்டு இருப்பீர்கள்.படம் சூப்பர் தான் என்ன கிளைமாக்ஸ் நான் முதலிலே யூகித்துவிட்டேன்.
CURSE OF CHUCKY: CHILD'S PLAY படம் பார்திருக்ரீர்களா? பார்க்கவிட்டால் முதல் பாகத்தை பாருங்கள்.செம படம் .இந்த படம் அதன் 6ஆம் பாகமோ என்னவோ.15 வருடம் கழித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.மொக்கை படம்.
THE GIRL NEXT DOOR: ஒரு மாணவன் தன் பக்கத்துக்கு வீட்டிற்க்கு புதிதாய் வந்துள்ள பெண்ணை விரும்புகிறான்.அவளும் விரும்ப அவள் ஒரு முன்னாள் நீல பட நடிகை என்று தெரித்தால்? ஹீரோயின் அழகா இருந்தது.மற்றபடி அடல்ட் காமெடி என்று சொன்னார்கள் .ஒரு சிரிப்பும் இல்லை.
THE MAN FROM NOWHERE: மீண்டும் ஒரு செம கொரியா படம்.நிறைய பேர் பார்த்திருப்பீர்கள்..இந்த படமும் என்னிடம் ரொம்ப நாளாய் இருந்தது.
அதோடு I SPIT ON YOUR GRAVE,IN THEIR SKIN,SATURDAY MORNING MYSTERY,TOOLBOX MUDERS போன்ற படங்களும் பார்த்தேன்.சொல்லும் அளவிற்கு அந்த படங்கள் இல்லை. அதனால் இதோடு முடித்து கொள்வோம்.
CURSE OF CHUCKY பார்த்ததுண்டு... மற்றவைகளுக்கு நன்றி...
ReplyDeleteஇனி தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவும்...
வாங்க தனபாலன் சார்.
Deleteஇதுல ஃப்ரெனச் படமும், மதர் கொரியா படமும் இன்னும் பாக்கலை நண்பா.. அறிமுகத்துக்கு மிக்க நன்றி.. மத்த படங்கள் பாத்தாச்சு..!! (இருந்தாலும் ஷட்டர் ஐலண்டு படத்த இவ்ளோ சீக்கிரம் நீங்க பாத்துருக்க கூடாது..)
ReplyDeleteஅது வந்து ,அது வந்து அப்படி ஆகிடிச்சு நண்பா.
Deleteஎல்லாமே நல்ல தரமான் படங்கள் தான்.
ReplyDelete"5150 Elm's Way" படம் மட்டும் பார்க்க வேண்டும். நெட்ப்ளிக்ஸில் இல்லை, டவுன்லோட் செய்து தான் பார்க்க வேண்டும். அடிக்கடி பதிவு எழுதுங்கள் விஜய்.. :):)
உங்கள் பதிவுகளை இப்போது தான் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன் நன்றாக உள்ளது... தொடருங்கள்...
ReplyDelete5150 Elm's Way பற்றிக் கேள்விப்பட்டதில்லை. பார்த்துவிடவேண்டியது தான்...
ReplyDelete