Pages

Friday, 23 March 2012

இந்த வருட படங்கள் பற்றி சில வார்த்தைகள்

இந்த வருடம் 3 மாதங்களில் வந்த படங்கள் பற்றி சில வார்த்தைகள்:

நண்பன்:
இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஹிட் படம்.ரஜினி படம் வராவிட்டால் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் இதுவாகதான் இருக்கும் .விஜய்க்கு ஒரு வித்தியாசமான படம்.ஷங்கருக்கு ஈசியான படம்.

வேட்டை:
படம் சுமார் என்றாலும் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.trailer பார்த்தவுடன் கதை யூகித்து விட்டேன்.கேட்டால் ஹிட் என்கிறார்கள்.கருப்பு அமல பாலுக்கு வெள்ளையான ஆர்யா ஜோடி. விஜய்க்கு தயார் செய்த கதையாம் .நல்ல வேலை.விஜய் நடிக்க வில்லை.


மெரினா:
இதை படம் என்று சொல்வதா,டாகுமெண்டரி என்று சொல்வதா?கதையும் இல்லை,comedyum இல்லை.

தோனி:
விஷயம் உள்ள படம்,இன்னும் ஓடியிருக்கலாம்.

அம்புலி:
ஒருமுறை பார்க்கலாம்,அதுவும் 3d முயற்சிக்காக..இன்னும் சிற்பக எடுத்து இருக்கலாம்.


முப்போதும் உன் கற்பனைகள்:
என்ன சொல்வது.இந்த கதையில் ஆயிரம் ஆங்கில படங்கள் வந்துள்ளது.அடுத்த சீன் எளிதில் சொல்லிவிடலாம்.2  பாட்டு ஓகே.


கழுகு:
படம் ஆரம்பம் சூப்பர்.போக போக செம போர்.காமெடி என்ற பெயரில் மொக்க போடுகிறார்கள். கிளைமாக்ஸ் பிதாமகன்,பட்டியல் போன்ற படங்களை ஞாபக படுத்துகிறது.





No comments:

Post a Comment