தெகிடி --- நல்ல முயற்சி
பதிவு எழுதியே பல வாரங்கள்.என்னதே எழுதி என்று பதிவு எழுத கையே போகவில்லை.பிட்சா 2 தி வில்லா ரொம்பவும் எதிர்பார்த்து பார்த்து நொந்து போனேன்.நடிகன் படத்தில் கவுண்டமணி சொல்வாரே "புளி சாதத்தில முட்டைய வச்சு பிரியாணின்னு எமாதானுங்க என்று "அது போல எதையோ கடகடன்னு எடுத்து அதற்க்கு பிட்சா 2 ன்னு வேற டைட்டில் கொடுத்து எமாத்திட்டாணுக .அதனால் இந்த படம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.வரட்டும் பார்க்கலாம்ன்னு இருந்தேன்.3 நாளாக ஓரளவு படம் பார்க்கலாம் என்று சொல்லியதால் பார்த்துவிட்டேன்.
இதற்க்கு மேல் கதை பற்றி வேறு எதுவும் எழுதி படத்தினுள் சென்று சொல்ல கூடாது. இது போன்ற படங்களுக்கு விமர்சகர்கள் ரொம்பவும் ஜாக்கரதையாக எழுத வேண்டும்.ஒரு வரி அதிகமாக எழுதி விட்டாலும் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்து சப்பென்று ஆகிவிடும்.பிட்சா படத்திற்கு ஒரு புண்ணியவான் (அநேகமாக சி.பி ) எழுதிய விமர்சனத்தை தெரியாத்தனமாக படித்துவிட்டேன் .படத்தின் இயக்குனரிடம் சில கேள்விகள் என்று முக்கிய விஷயத்தை உடைத்துவிட்டார்.
தெகிடி என்றால் என்ன? தெரியவில்லை.ஆனாலும் பேர் நன்றாக உள்ளது.ஹீரோ அசோக் செல்வன் சில இடங்களில் நன்றாக நடித்து உள்ளார்.என்ன எல்லா காட்சிகளிலும் அப்போதுதான் தூங்கி எழுந்தது போல் இருக்கிறார்.நாயகி ஜனனி இயர்.ரொம்பவும் சோகையாக உள்ளார்.நல்ல நிறம் .கொஞ்சம் சதை பிடித்தால் நன்றாக இருப்பார்.ஹீரோவின் நண்பராக காளி.கலகலப்பாக பேசுகிறேன் என்று மொக்கை போடுகிறார்.ஆனால் உடல் மொழி அருமை.ஜெயப்ரகாஷ் வழக்கம் போல ஜோர்.
படத்தின் பிளஸ் :
1.ஒரு நல்ல மிஸ்டரி வகை படம்.ஏன் இப்படி நடக்கிறது என்று படம் முழுக்க நம்மை யோசித்து கொண்டே இருக்க வைக்கிறது.
2.படத்தின் முக்கிய விஷயம் ஒன்றை (போலியான ஒன்றை பற்றி).அநேகமாக யாரும் தொடாத விஷயம்.அந்த விஷயத்தை பற்றி சொல்ல முடியாது.
3.நச்சென 2 மணி நேரத்தில் முடித்து.
4.இசை .ஏற்கனவே சில முறைகள் பாடல்களை கேட்டுளேன்.அதனால் பிடித்தது.பின்னணி இசையும் செம.(முக்கியமாய் அந்த இடைவேளை நேரத்தில்)
படத்தின் மைனஸ் :
1.வசனம் ஆரம்பத்தில் நன்றாக இருப்பது போல் தோன்றியது.பின் மெல்ல சலித்து ரொம்பவும் FORMULA வசனமாக.அதுவும் நாயகி,மற்றும் ஹீரோவின் நண்பர் பேசுவது ரொம்பவும் சினிமா வசனம்.
2.போலீசாக வரும் ஜெயப்ரகாஷ் பாத்திரம் .எந்த போலிசும் விசாரணையில் ஒரு சாதாரண ஆள் நுழைந்து அவர்களையும் தாண்டி செல்ல இவ்வளவு இடம் கொடுக்காது.அவர் என்னடா என்றால் இந்த கேஸ் உனக்கு புது அனுபவமாக இருக்கும் என்று சாதரணாமாக ஹீரோவை அனுப்பி வைக்கிறார்.
மற்றபடி பிட்சா -தி வில்லா போல் ஏமாற்றவும் இல்லை .பிட்சா அளவுக்கு அசத்தவும் இல்லை.ஆனால் அது சிக்ஸர் என்றால் இந்த படம் மெதுவாக ஓடி எப்படியோ FOUR அடித்து விடுகிறது.
எல்லோரும் பார்க்கலாம்.த்ரில்லர்,சஸ்பென்ஸ் பட விரும்பிகளுக்கு ஒரு அளவு சாப்பாடு.
No comments:
Post a Comment