Pages

Monday, 25 February 2013

இந்த ஆங்கில படங்களை பார்த்திருக்கிறீர்களா ?


இந்த ஆங்கில படங்களை பார்த்திருக்கிறீர்களா ? 

என்னிடம் பார்க்க வேண்டிய ஆங்கில படங்கள் நாளுக்கு நாள் அதிகம் சேர்ந்து கொண்டே போகிறது.பார்த்து முடியவில்லை .என்ன காரணம் என்று தெரியவில்லை .என் நண்பன் செல்வன்.இவனுக்கு நான் தான் ஆங்கில படங்கள் அறிமுகம் செய்து வைத்தேன்.ஆனால் சமயங்களில் என்னைவிட அதிகம் ஆங்கில படங்கள் பார்த்துவிட்டு எனக்கு அதைப்பற்றி சொல்லி அறிமுகம் செய்கிறான்.

எனக்கு பிரச்சனை என்னவென்றால் வீட்டில் மனைவி ,பையன் இருந்தால் நிச்சயம் சேர்ந்தாற்போல் ஒரு அரை மணி நேரம் படம் பார்க்க முடியவில்லை.அதற்குள் பலமுறை அழைக்கபடுவேன்.கணினியில் பார்க்கலாம் என்றால் இந்த பிரச்சனை என்றால் சரி PEN டிரைவில் காப்பி செய்து டிவியில் போட்டு பார்க்கலாம் என்றால் அந்த படங்களில் வரும் ஆபாச வசனங்களை காது கொடுத்து கேட்க்க முடியாத  மனைவியிடம் திட்டு வாங்க முடியவில்லை.குறைந்த பட்சம்  F_CK இந்த வார்த்தை இல்லாத ஆங்கில படங்களே  வருவதில்லை என்று சொல்லும்படி உள்ளது.எவ்வளவோ எடுத்து சொல்லியும் என் மனைவி கேட்பதில்லை .நான் என் வீட்டிற்கு போய் இருக்கும் நாட்களில் இந்த படம் எல்லாம் பாருங்கள் என்று முடிவாக சொல்லி விடுவதால் நானும் அதோடு விட்டு விடுகிறேன்.

என் நண்பன் இதில் கில்லாடி .அவன் மனைவி, ஏன் அம்மா ,தங்கை என்று எல்லரையும் ஆங்கில படங்கள் பார்க்க பழகி வைத்துள்ளான். கொடுத்து வைத்தவன் .நான் என்னதான் அவதார் போன்ற படங்களை என் வீட்டில் பார்க்க வைத்தாலும் ஆங்கில படம் பார்க்கும் பழக்கம் என் மனைவிக்கு வரவில்லை.

என்னிடம் இருக்கும் ஆங்கில படங்களை மொத்தம் பார்த்து ரசிக்கத்தான் ஆசை .ஆனாலும் மேல்சொன்ன பிரச்சனையால் அதில் இப்போது சில படங்களை தேர்வு செய்து பட்டியல் இடுகிறேன்.இப்போது எனக்கு கிடைத்திருக்கும் நாட்கள் 3 அல்லது 4 நாட்கள் ,இதில் மொக்கை படங்கள் பார்த்து வேஸ்ட் செய்ய மனமில்லை அதனால் என்ன செய்யலாம் என்று யோசிதேன்.சரி இருக்கும் படங்களை பதிவில் பட்டியலிட்டு நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு பார்க்கலாம் என்று முடிவெடுத்தான் விளைவு இந்த பதிவு.

இந்த படங்களை பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் தங்கள் கருத்துகளை தெரிவித்தால் எனக்கு பேருதவியாக இருக்கும்.

Badlands (1973)



Columbus Circle (2012)



Mindhunters (2004)


Outpost: Black Sun (2012)


Sleuth (2007)


What Lies Beneath (2000)


The Return (2003) 
Vozvrashchenie (original title)

The Girl with the Dragon Tattoo (2011)


The Skin I Live In (2011) 
La piel que habito (original title)

Don't Say a Word (2001)


என்னிடம் பார்க்காமல் இருக்கும் படங்களுள் இந்த படங்களை தேர்வு செய்து உள்ளேன்.இந்த படங்களில்
 நீங்கள் பார்த்த படங்கள் இருந்தால் எனக்கு அறிமுகம் செய்யுங்கள் .

9 comments:

  1. இதில் The Girl with the Dragon Tattoo மட்டும் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் ஸ்லோவா நகர்ந்தாலும் நல்ல த்ரில்லர்.

    என் விமர்சனம் இங்கே

    ReplyDelete
  2. ஆங்கில படங்கள் ஒரு புறம் இருக்கட்டும்...

    கிரிக்கெட் ஆர்வம் குறைந்து விட்டதா...?

    அன்புடன் DD

    ReplyDelete
  3. Sleuth (2007) ப்ளாப் என்றே நினைக்கிறேன். இது ரீமேக் படம். இந்த படத்தில் வயதானவார நடித்திருப்பவர் பழைய Sleuth-ல் இளையவராக நடித்திருப்பார்.

    2+1 கேரக்டர்கள் மட்டுமே. கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம். டயலாக் மட்டுமே. ஆனால், அற்புதமான திரில்லர்.

    சிறந்த திரைக்கதைக்கு உதாரணம் தரவேண்டுமென்றால் நிச்சயம் இந்த படத்தை சொல்லலாம். மிஸ் பன்னக்கூடாத திரைப்படம் (பழையதை சொல்கிறேன்).

    ReplyDelete
  4. Mindhunters ஒரு நல்ல திரில்லர். பல நாட்களுக்கு முன் பார்த்தது . இன்னமும் நினைவிருக்கிறது. The Girl with a Dragon Tattooவும் தாராளமாகப் பார்க்கலாம்...

    ReplyDelete
  5. If you can patiently sit through an art film, "The Return" is a perfect choice. Columbus Circle, Outpost: Black Sun are below average movies. What Lies Beneath, Don't say a Word and Sleuth are just average movies. Watching these movies is mostly a waste of time. The Original "Sleuth" made in 1973 was a classic. "The Girl with a Dragon Tattoo" and "The Skin I Live In" are all excellent movies.

    You have posted the poster of Badlands. That was also a spellbinding movie.

    ReplyDelete
  6. The Skin I Live In- i have seen it....its good....i think its german...c wit subtitles!!

    ReplyDelete
  7. What Lies Beneath is an average horror movie. Plot is a house wife feels the presence of something in the house after her husband went to office. not bad.

    ReplyDelete
  8. ஸ்கின் ஐ லைவ் நல்ல படம் ஆரம்பத்தில் அந்த பெண் யார் என்பது சற்றே பலவித யூகங்களை வரவழைக்கும் யாரென்று தெரியும்போது கடைசியில் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்

    ReplyDelete