வழக்கு எண் 18/9 : லேட் தீர்ப்பு :
தமிழின் மிக சிறந்த படங்களில் ஒன்று,விகடனில் இந்த ஆண்டு அதிக மார்க் பெற்ற படம்,படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டிவிட்டு செல்கிறார்கள் ,இப்படி இந்த படத்தை பற்றி அதிகபடியான தகவல்கள்.ஆனால் எனக்கு இந்த படம் பார்க்க நேரம் இல்லை.படத்தை பற்றி நல்ல விதமாய் கேள்விப்பட்டதால்,அவசரபடாமல் பொறுமையாய் ரசித்து பார்க்க வேண்டும் என்று இருந்தேன்.சில நாட்களுக்கு முன் பார்த்தே விட்டேன்.
கதையை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்,அதனால் அதை பற்றி இங்கே தேவை இல்லை.சொல்ல வந்ததை இயக்குனர் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.நாயகனின் ஆரம்ப கிராமத்து காட்சிகள் இந்த படத்தை உடைத்து விடுகின்றது.திணிக்கப்பட்ட சோகம் .தொடர்ந்து வரும் பிளாட்பார கடை காட்சிகளும்,ஒப்பனை இல்லாத நாயகனின் முகத்தை பரிதாபத்தை நம் மனதில் ஏற்ற பாடுபட்டுள்ளார் இயக்குனர்.இறுதி காட்சியும் எதாவது அசம்பாவிதம் நடக்க வேண்டும் என்று வலிய திணிக்க பட்டுள்ளது.
படத்தின் மிக பெரிய மைனஸ் இசை.குறிப்பாக பின்னணி இசை. உலகம் படம் என்று சொல்பவர்கள் ,அதை கவனிக்கவில்லையா.எண்பதுகளின் வந்த படங்களில் வந்த சோக காட்சிகளுக்கு வரும் பின்னணி இசை.இரைச்சல்.
முடிவாக ,நல்ல படம் தான்,ஆனால் மிகையாக கொண்டாட்ட பட்டதால்,அதன் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும்.சில காட்சிகள் தவிர பார்த்தல் நல்ல படம். உலக படம்,இதுவரை வராத படம்,புரட்டி போட வந்த படம் இதெல்லாம் ரொம்ப ஓவர்தான் .
சரி அதென்ன பணக்காரர்கள் எல்லாம் கெட்டவர்கள்,சுயனலமிக்கவர்கள் , ஏழைகள் எல்லாம் நல்லவர்கள்,சுயநலம் இல்லாதவர்கள்?
//உலக படம்,இதுவரை வராத படம்,புரட்டி போட வந்த படம் இதெல்லாம் ரொம்ப ஓவர்தான் //
ReplyDeleteரொம்ப கரெக்ட்டா சொன்னேங்க...படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப ரொம்ப நல்லா இருந்திச்சு..
Movie climax is ok, but not good as "Kadhal" movie. For me both the movie is just good...
ReplyDelete