பார்த்தே தீர வேண்டிய கொரியன் படங்கள் :
old boy (2003):
கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும். இளகிய மனம் கொண்டவர்கள் , இந்த படத்தை தவிர்ப்பது நலம்.இந்த படம் பார்த்து மனம் நிச்சயம் ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்கிறார்கள் என்று மனம் வருந்தினாலும், நீங்கள் எப்பேர்பட்ட மன திடம் உள்ளவராக இருந்தாலும் நிச்சயம் ஒரு ஐந்து நிமிடமாவது உங்களை இந்த படம் பாதிக்க செய்யும்.என்ன ரொம்ப ஓவராக சொல்றேன் என்று நினைக்க வேண்டாம்.படம் பார்த்த பின் எனக்கு சொல்லவும்.
அப்படி என்ன படத்தில்? நம் நாயகன் ஒடேசு பட தொடக்கத்தில் குடித்துவிட்டு அலும்பல் செய்து காவல் நிலையத்தில் இருக்கிறார்.அன்று அவரது மகள் பிறந்த தினம் அவர் சென்றே தீர வேண்டும்.ஒரு வழியாக தன் நண்பன் தனக்காக முறையிட்டதால் விடுவிக்கப்பட்டு வெளியே வந்து,நண்பருக்கு நன்றி சொல்கிறார்.நண்பர் சென்ற உடன் வீடு திரும்ப முயலும் போது போதையில் தள்ளாடி ரோட்டில் மயங்கி விழுகிறார்.
இனி போதை தெளிந்து ,பார்த்தால் ஒரு அறையில் பூட்டப்பட்டு இருக்கிறார்.எவ்வளோ முயற்சித்தும் திறக்க முடியவில்லை.யாரும் வரவும் இல்லை.எங்கே இருக்கிறோம் என்பதும் தெரிய வில்லை. அந்த அறையில் இருப்பது ஒரு டி.வீ. மட்டுமே. அதில் செய்தியில் தன் மனைவி கொல்லப்பட்டதாகவும் ,கொலை செய்தது தான்தான் எனவும் தன்னை போலீஸ் தேடுவதாகவும் சொல்கிறார்கள்.அதிர்ச்சி அடைந்து மனம் தளர்ந்து தற்கொலைக்கு முயலும் போது எதோ ஒரு மயக்க மருந்து ரூம் முழுவதும் செலுத்த பட்டு மயங்குகிறார்.இப்படியே தப்பிக்க முயற்சி செய்து 15 ஆண்டுகள் ஆகிவிடுகிறது .ஒரு வழியாக தப்பித்து வெளியே வந்து தன்னை யார் கடத்தினார்கள்,எதற்காக கடத்தினார்கள்,எதற்காக 15 ஆண்டுகள் எதுவுமே தெரியாமல் வைத்திருந்தார்கள் என்று விடை தேடி புறப்படுகிறான்.
இதுவரை சொன்னவை படத்தின் தொடக்கமே. இனி தான் இருக்கிறது. ஆனால் இதற்க்கு மேல் படத்தை பற்றி சொன்னால் ஆர்வம் போய் விடும்.அடுத்தடுத்த காட்சிகள் படத்தை நகர்த்தி இறுதில் நம்மை உறைய வைக்கும் முடிவு.நிச்சயம் நம் மனதை வருந்த வைக்கும்.
இனி படத்தை பற்றி சில விஷயங்கள்:
இந்த படத்தின் இயக்குனர் Park Chan-wook .இவர் இது போன்ற vengence (பழிவாங்குதல்) படங்கள் எடுப்பதில் தேர்ந்தவர்.இவரது பிற பிரபல படங்கள்
sympathy for mr.vengence, sympathy for lady vengence,joint security area போன்றவை . இந்த படம் உங்களுக்கு பிடித்தால் sympathy for mr.vengence, sympathy for lady vengence இரண்டையும் பாருங்கள்.
இந்த படத்தில் வரும் ஒரு பெரிய சண்டை காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது.அது போல் நாயகன் ஒரு காட்சியில் உயிருடன் உண்ணும் அக்டோபுஸ் டூப் அல்ல நிஜமே.
இந்த படம் 2004 ஆம் ஆண்டு நம்ம இயக்குனர் Quentin Tarantino நடுவராக இருந்த cannes பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்தேடுக்க பட்டது.
இந்த படம் இதுவரை IMBD யில் -8.4 rating பெற்றுள்ளது.மேலும் imdb top 250 யில் 91 இடம் பெற்றுள்ளது.
Rotten tomattoes 80% fresh என பெற்றுள்ளது.
இந்த படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய ,WILL SMITH ஆர்வமாக இருந்து STEVEN SPIELBERG இயக்க முடிவு செய்யப்பட்டு பின் பல காரணங்களால் கை விடப்பட்டது.இப்போது வேறு ஒருவர் அதை இயக்குகிறார்.
மேலும் இந்த படம் 'ZINDA' என்ற பெயரில் ஹிந்தியில் உரிமை பெறாமல் ,சஞ்சய் தத்,ஜான் அப்ரகம் நடித்து வெளிவந்தது.
டிஸ்கி: கொரியா படம் பார்த்து பழக்கம் இல்லாதவர்கள் இந்த படத்தை நிச்சயம் பார்க்கவும்.ஏனென்றால் நானும் கொரியா படங்கள் பார்த்தது இல்லை.இதுவரை மிக சில சிறந்த படங்களே பார்த்துள்ளேன்.
OLD BOY ----நல்ல பட ரசிகர்கள் தவற விடகூடாத படம்.
நல்ல விமர்சனம் விஜய் சார்..தமிழ், ஆங்கில படங்கள் மட்டுமல்ல கொரியன் படத்தையும் சிறப்பா எழுதுவேனு காட்டிட்டீங்க..மிக நன்று..மேலும் பல படங்களை அறிமுகம் செய்யுங்க..Chat -ல நீங்க அடிக்கடி எங்கிட்ட சொன்ன படம்..விமர்சனமா தந்துட்டீங்க..ரொம்ப நன்றி.
ReplyDeleteகுமரன் ,இந்த படம் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். நான் உங்களுக்காக தான் இந்த படத்தையே எழுதினேன்.
Deleteஅச்சச்சோ..ரொம்ப நன்றி சார்..இது ஒன்றுக்காகவே படத்தை உடனே டவுன்லோடு செய்கிறேன்..ஆனால், பார்ப்பதற்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்.கண்டுவிட்டு சொல்கிறேன்.
Deleteஆங்கில படங்கள் மட்டுமல்ல கொரியன் படத்தையும் சிறப்பா எழுதுவேனு காட்டிட்டீங்க..மிக நன்று..மேலும் பல படங்களை அறிமுகம் செய்யுங்க.ரொம்ப நன்றி.
ReplyDeleteஇந்தப் படம் பற்றி வேறு எங்கோ வாசித்ததாக ஞாபகம். இன்னிக்கே டவுன்லோட் போடுறேன். அழகா விமர்சனம் பண்ணியிருக்கீங்க. நன்றி.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி,இந்த படம் உலக பட ரசிகர்கள் நிச்சயம் தவற விட கூடாத படம். நிச்சயம் பாருங்கள்.பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள்.
Deleteநல்ல விமர்சனம். படம் என்ற நிலையில் பார்த்தால் நல்ல திரைப்படம் தான், ஆன நம்ம ஆளுங்க ஏற்றுக்கொள்ளவது கொஞ்சம் கடினம் நினைக்கிறன்.
ReplyDeleteநான் இளகிய மனம் உடையவன் , இந்த படத்தை பார்க்க தவிர்க்கிறேன். ஆனால் இந்த படத்தின் கதை தெரியும்.
ReplyDeleteஇப்படத்தை வெகு நாட்களுக்கு முன்பே நான் பார்த்திருந்தேன்... நல்லவேளை படத்தின் கதையையும் படத்தில் வரும் சம்பவங்களையும் விமர்சனத்தில் எழுதாமல் தவிர்த்து விட்டீர்கள். 21 வயதிற்கு குறைவானவர்களுக்கும் இளகிய மனம் கொண்டவர்களுக்கும் நிச்சயம் இது ஏற்ற படம் அல்ல.
ReplyDeleteஇருப்பினும் இது ஒரு அருமையான த்ரில்லர்...