ஜகல்பந்தி
தமிழகத்தில் பல மணி நேரம் மின்வெட்டு உள்ளது.சென்னை தவிர்த்து பிற ஊர்கலில் எட்டு ஒன்பது மணி நேர மின்வெட்டால் மக்கள் அவதி பட்டு வந்தனர்.சென்னை மட்டும் 1 மணி நேரம் ஆக இருந்தது.அனால் இன்று முதல் சென்னை 2 மணி நேரமும் பிற ஊர்கள் 4 மணி நேரம் மின்வெட்டு அறிவிக்க பட்டுள்ளது .சங்கரன்கோயில் இடை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நிச்சயம் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்று தெரியும் .அனால் மின் வெட்டு ,பஸ் கட்டண உயர்வு ,இன்ன பிற கட்டாயம் எதிரொலிக்கும் .இதில் வேறு எதிர்க்கட்சி வேட்பாளர் யாரும் டெபொசிட் வாங்க கூடாது என்று ஜெயலலிதா உத்தரவு போட்டு உள்ளதால்,26 அமைச்சர்கள் தேர்தல் வேலைக்கு சென்றிருகிறார்கள்.
ஏன் யாவரும் நலம் :
தமிழில் நல்ல திகில் thriller வகை படங்கள் வருவதில்லை.அனால் 3 வருடங்களுக்கு முன்பு மாதவன் நடித்து வந்த யாவரும் நலம் ஒரு நல்ல thriller .என்னோடு 2 நண்பர்கள் இரவு காட்சி ஏதாவது படம் போகலாம் என்றதும் நான் தான்,இந்த படம் போகலாம் என்று சொன்னேன்.இருவரும் வேண்டா வேருப்பகதான் வந்தார்கள்.அனால் இடைவேளையிலே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம் .படம் மூவருக்கும் பிடித்தது .ஆனாலும் இந்த தலைப்பு ஒரு நல்ல positive ஆக இருந்ததால் இதுவே தலைப்பு.
உலக champions அடிவாங்கியது ஏன் ?
உலக கோப்பை ஜெயித்து ஒரு ஆண்டு கூட முழுமை ஆகாத நிலையில் தொடர்ச்சியாக இங்கிலாந்த் மற்றும் ஆஸ்திரேலியா உடன் படு தோல்வி.முதல் காரணம் டீம் 11 சரி இல்லை .அனுபவம் இல்லாத வினய் குமார்,உமேஷ் யாதவ் ,ரவீந்திர ஜடேஜா .காரணம் கேட்டால்,இந்தியாவில் flat பிட்ச் கிரௌண்டில் விளையாடி பழகிய நம் வீரர்கள் bounce பிட்ச் விளையாட தெரிய வில்லை என்று சொல்வார்கள் .இதே போல் பிளட் பிட்ச் அதிகம் கொண்ட பாகிஸ்தானில் மட்டும் எப்படி தொடர்ச்சியாக தரமான fast bowlers உருவாகிறார்கள்? கிரிக்கெட் போர்டு யோசிக்க வேண்டும். இதோ வந்தவுடன் IPL தொடங்கிவிடும் ஆஸ்திரேலிய தோல்வியை மறந்துவிடுவோம்.
விஜய்