ENTER NOWHERE--யாராலும் யூகிக்க முடியாத கதை .இது சவால்
வழக்கமான ஆங்கில திகில் படம் போலவே தொடங்கும் படம். காட்டிற்கு நடுவில் தனியான ஒரு சிறிய வீடு.அங்கே வரும் ஒரு பெண்.இப்படி தொடங்கியவுடன் சரி வழக்கமான இந்த கதையில் ஒரு 1000 படம் வந்திருக்குமே என்று யோசிக்க தோன்றும் .ஆனால் படம் தொடங்கி ஒரு 25-30 நிமிடம் கழித்து நாம் சந்திக்கும் ஆச்சர்யங்கள்.படத்திற்கு ஒரு சபாஷ் சொல்ல வைக்கின்றது.
ஏதோ ஒரு காட்டிற்கு நடுவில் ஒரு பெண் தனியாக நடக்க முடியாமல் நடந்து வருகிறாள்.அங்கே தனியாக ஒரு சிறிய வீடு.உள்ளே போகிறாள்.அந்த நேரத்தில் அங்கே ஒருவன் வருகிறான்.முதலில் அவனை கண்டு அஞ்சும் அவள் பின் தான் அங்கே வந்த காரணத்தை சொல்கிறாள்.தன் கணவனோடு காரில் போகும்போது கார் ரிப்பேர் ஆனதால் உதவி தேடி சென்ற கணவன் நீட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவனை தேடி வந்ததாக சொல்கிறாள்.அவனும் அதுபோலவே தனது காரும் ரிப்பேர் ஆனதால் அங்கே வந்து 3 நாட்கள் ஆனதாகவும் சொல்கிறான்.அடுத்த நாள் இன்னொரு பெண் அதேபோல் அங்கே வருகிறாள் .
இதன் பின் படம் முழுதும் ஆச்சர்யங்கள்.
3 பேரும் அங்கிருத்து வெளியே சென்று காட்டு வழியே உதவி தேடி செல்கிறார்கள் .பல மணி நேரத்திற்கு பின் அவர்கள் வந்து சேரும் இடம் ...........அவர்கள் சந்தித்துக்கொண்ட அதே வீடு.
தாங்கள் அந்த வழி வந்த காரணத்தை பேசி கொள்ளும் போது அவர்கள் இப்போது இருக்கும் ஊரை பற்றி பேச்சு வர. 3 பேருமே அந்த இடத்தை வேறு ஒரு ஊராக நினைத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணிடம் ஒரு கட்டு பணம் .அந்த பணம் அச்சிட்ட வருடம் 1984. ஆனால் மற்றொரு பெண் எந்த நாட்டில் எதிர்கால வருடத்தை போட்டு பணம் அச்சடிக்கிறார்கள் என்று கேட்டு அசரடிக்கிறாள்.காரணம் அவளை பொறுத்தவரை அது 1962. அவன் அங்கே வர அவனை விசாரித்தால் அவன் இருப்பதாய் நினைப்பது வருடம் 2011.
அவர்கள் எதோ நட்டு கழண்ட கேஸ் என்று நினைத்தால் நம் நினைப்புக்கு ஒரு அடி.பின் என்னதான் அங்கே ? நான்கவதாய் வருபவன் யார் ? இதற்க்கு மேல் கதை பற்றி சொல்ல போவதில்லை .
அவர்களுக்குள் என்ன சம்பந்தம்? கொஞ்சம் கூட யோசித்தே பார்க்க முடியாத கதை .யூகிக்க முடிந்தவர்கள் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்கள்.ஆனால் படம் பார்த்த பின் ரொம்பவும் கவனித்து பார்த்தால் வசனங்களை உற்று கவனித்து வந்தால் ஒரு வேலை 1% யூகிக்கலாம் .உஹூம் நிச்சயாமாக 99 %சொல்ல முடியாது.இதுவாக இருக்குமோ ,அல்லது அப்படி இருக்குமோ என்று எப்படி யோசித்தாலும் உங்களால் காரணத்தை கண்டுபிடிக்க முடியாது.
என்னதாண்டா நடக்குது என்று ஆவல் தாங்க முடியவில்லை சில இடங்களில்.எல்லோருக்கும் தெரிந்த Clint Eastwood மகன் SCOTT EASTWOOD தான் ஹீரோ.அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார்.
வழக்கமான படங்கள் பார்த்து சலித்த ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய படம்.படம் 1.30 மணி நேரம் தான் .முதல் 30 நிமிடம் கொஞ்சம் பொறுமையாய் போகும்.அதற்க்கு மேல் கதைக்குள் வந்துவிடுவோம்.2011 வெளிவந்த படம்.
இதுவரை நான் எந்த படத்தின் டவுன்லோட் லிங்கும் கொடுத்தது கிடையாது.இது கொஞ்சம் கிடைக்க அரிதான படம்.அதாவது SUBTITLE உடன். இந்த படத்தின் லிங்க் தருகிறேன்.
IMDB RATING -6.3