Pages

Saturday 29 June 2013

45 நாள் ---30 ஆங்கில படங்கள்:

45 நாள் ---30 ஆங்கில படங்கள்: 

என் பதிவுகள் படித்திருப்பவர்களுக்கு எனக்கு எப்படி பட்ட ஆங்கில படங்கள் பிடிக்கும் என்று ஓரளவு தெரிந்திருக்கலாம்.எனக்கு பரபரப்பான ,த்ரில்லான படங்கள் பிடிக்கும் .கவிதையாய் ஆமை வேகத்தில் நகரும் படங்கள் பிடிக்காது.அதே சமயம் "THE BUTTERFLY EFFECT" மற்றும்   "TRIANGLE" போன்ற குழப்பி அடிக்கும் படங்கள் பிடிக்கும் என்று சொல்வதா இல்லை பிடிக்காது என்று சொல்வதா என்று ஒரே குழப்பம்.நான் குழம்பி உங்களை குழப்புகிறேனோ ? போதும் அறிமுக பத்தி .



மே 1 முதல் ஜூன் 15 வரை 45 நாட்கள் .எனக்கு வீட்டில் நான் மட்டும்.மனைவி குழந்தை இருவரும் மனைவியின்  வீட்டிற்கு போய் இருந்தார்கள்.எனக்கு பிரச்சனை என்னவென்றால் வீட்டில் மனைவி ,பையன் இருந்தால் நிச்சயம் சேர்ந்தாற்போல் ஒரு அரை மணி நேரம் படம் பார்க்க முடியவில்லை.அதற்குள் பலமுறை அழைக்கபடுவேன்.கணினியில் பார்க்கலாம் என்றால் இந்த பிரச்சனை என்றால் சரி PEN டிரைவில் காப்பி செய்து டிவியில் போட்டு பார்க்கலாம் என்றால் அந்த படங்களில் வரும் ஆபாச வசனங்களை காது கொடுத்து கேட்க்க முடியாத  மனைவியிடம் திட்டு வாங்க முடியவில்லை.குறைந்த பட்சம்  F_CK இந்த வார்த்தை இல்லாத ஆங்கில படங்களே  வருவதில்லை என்று சொல்லும்படி உள்ளது.எவ்வளவோ எடுத்து சொல்லியும் என் மனைவி கேட்பதில்லை .நான் என் வீட்டிற்கு போய் இருக்கும் நாட்களில் இந்த படம் எல்லாம் பாருங்கள் என்று முடிவாக சொல்லி விடுவதால் நானும் அதோடு விட்டு விடுகிறேன்.வீட்டில் நான் அம்மா வீட்டிற்கு  போய் 1 மாதம் இருக்க போகிறேன் என்றதும் எனக்கு செம ஜாலி .காரணம் இதுவரை பார்க்காமல் இருக்கும் உலக ,ஆங்கில படங்கள் பார்க்கலாமே.எனக்கு செம வேட்டை.அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் போல் நண்பர்களுக்கு போன் போட்டு பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா  என்று சொல்லி கொண்டிருந்தேன்.

என் டார்கெட் 45 நாளில் 45 படம் என்பது ஆனால் பார்த்தது 30 படங்கள் மட்டுமே.காரணம் IPL.

என் அலுவலக பணி காலை 8 முதல் 2 வரை அல்லது மதியம் 2 முதல் 8 வரை.இருந்தாலும் நான் வீட்டில் இருந்தே LOG-IN செய்து வேலை செய்ய முடியும் என்பதால் பணி  நேரம் என்பது அவ்வுளவு STRICT கிடையாது.இந்த 45 நாட்களில் தினசரி இரவு 8 வரை என் அலுவலக பணிகள். 8-11.00 அல்லது 11.30 IPL. அதன் பின் 11.30 முதல் 1 மணி அல்லது படம் முடியும் வரை என தினசரி ஒரு படம் என்று ஒரு வெறியோடு படம் பார்த்தேன்.காலையில் எழ முடியாமல் கஷ்டப்பட்டு எழுந்து வேலையை பார்த்தாலும் அன்று இரவும் அதே அட்டவனைதான்.

இடையில் வார இறுதியில் நன்றாக இருப்பதாய்  கேள்விப்பட்ட சில தமிழ் படங்கள் (சூது கவ்வும் உட்பட சில படங்கள்) பார்த்தேன்.ஏப்ரலில் கடைசியாக பதிவு போட்ட நான் அதோடு ஜூன் நடுவில் தான் .அந்த அளவிக்கு பிஸி .நடுவில் சில சுப ,துக்க நிகழ்வுகள் என்று சொந்த ஊர் (பக்கத்தில் தான் காஞ்சிபுரம்) செல்லும் வேலை வேறு .

நடுவில் சில படங்களுக்கு எழுத ஆரம்பித்து டிராப்டில் உறங்குகிறது.அப்படி சேர்த்து சேர்த்து விட்டதால் அப்படியே விட்டு விட்டேன்.30 படம் பார்த்தாலும் அதில் தேறியது  என்னவோ 5 அல்லது 6 தான். மேலும் ஒரு 6 அல்லது 7 படங்கள் ஓகே ராகம் .மற்றதெல்லாம். நேரம் தான் வேஸ்ட்.இருந்தாலும் சமீப காலங்களில் இத்தனை தொடர்ச்சியாக படங்கள் பார்த்தது கிடையாது.பாருங்கள் என் வீட்டிற்கு மனைவி திரும்பி 10 நாட்களுக்கு மேல் ஆகிறது .ஒரு ஆங்கில படம் ஏன் ஒரு அரை மணி நேரம் கூட காண முடியவில்லை. 

அதனால் திருமணம் ஆகாத சக பதிவர்களே,இதை படிக்கும் உலக பட ரசிகர்களே திருமணம் ஆகும் முன்பே முடிந்தவரை படங்கள் பாருங்கள்.அதன் பின் நினைத்தாலும் நினைத்த நேரத்தில் முடியாது.



இது 30 படம் பார்த்த முன் கதை.பார்த்த 30 படங்கள் பற்றி அடுத்த பதிவில்.

8 comments:

  1. படம் மட்டுமல்ல...

    நேரம் கிடைக்கும் போது தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்

      Delete
  2. விமர்சனத்தை எதிர்பார்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் எழுதுவேன்.நன்றி

      Delete
  3. விஜய்,
    நீங்க கல்யாணம் ஆனவர்ன்னு இந்த பதிவு மூலமா தான் தெரிந்து கொண்டேன். இதனை நாள் சின்ன வயசு ஆளுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் :):):).
    கல்யாணம் ஆனா அனுபவத்துல நீங்க சொல்லுறது நூத்துக்கு நுறு உண்மை. இங்கிலீஷ் படம் எல்லாம் வீட்டுல ஒட்கார்ந்து பார்கிறது முடியவே முடியாத விஷயம். 30 படம் 45 நாளுல நல்ல கவுன்ட் தான்..சிக்கிரமே நீங்க ரசிச்ச படத்தை பத்தி எல்லாம் தொடர்ந்து எழுதுங்க...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஆமாம் ராஜ் நான் கூட இதை பற்றி உங்களிடம் சொன்னதில்லை.சாரி அதற்கான சந்தர்ப்பம் வரவில்லை.3 1/2 வருடம் ஆகிறது மணமாகி. 2 1/2 வயதில் ஒரு மகன்.

      30 படங்களின் லிஸ்டும் அதில் நல்ல 4 அல்லது 5 படங்களின் அறிமுகமும் மற்ற சில சுமார் படங்களை ஓரிரு வரிகளில் ஒரே பதிவாக முடித்துவிட திட்டம்.

      Delete